யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/11/16

பிழைப்பு ஊதியமும் 'கட்:' தலைவருக்கு சிக்கல்

கல்வித் துறையால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, கலை ஆசிரியர் சங்க தலைவருக்கு, இரு மாதங்களாக, பிழைப்பு ஊதியம் வழங்காததால், போராட்டம் நடத்துவது குறித்து, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார். இவர், கல்வித் துறையின் பல பிரச்னைகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, உயரதிகாரிகளிடம் மனு அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதனால், இரு மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தருவதாகவும், இவர் மீது, கல்வித் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், ஆசிரியர் ராஜ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின், விதிகளின்படி ஊதியத்தில், 50 சதவீதத்தை பிழைப்பு ஊதியமாக வழங்க வேண்டும்; அதுவும், வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. 'பிழைப்பு ஊதியமாவது வழங்க வேண்டும்' எனக்கோரி, ராஜ்குமார் சார்பில், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், சென்னை வந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவிலும், பள்ளிக்கல்வி செயலரிடமும் மனு அளித்துள்ளார். இதேநிலை தொடர்ந்தால், சங்க உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்த, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

ரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்...!

1. நவம்பர்9-ம் தேதி அனைத்து வங்கிகளும்மூடப்பட்டிருக்கும்.

2. நவம்பர்9 மற்றும் 10 தேதிகளில் ஏ.டி.எம்செயல்படாது.

3. நீங்கள்கையில் வைத்திருக்கும் ரூபாய் 500, 1000 நோட்டுகளை உங்கள் வங்கி அல்லதுதபால் நிலையம் சேமிப்புக் கணக்கில்வைப்பு வைதிருக்க
வேண்டும்.
4. வங்கியிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு 10000 ரூபாய் அல்லது ஒரு வாரத்திற்கு 20,000 தான் எடுக்க முடியும்.

5. காசோலைகள், வரைவோலைகளை, டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகள் மற்றும் மின்னணு நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த தடையும் இல்லை.
அடுத்த72 மணிநேரங்களுக்கு கீழ்கண்ட இடங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தமுடியும் :



1. ரயில்நிலையத்தின் டிக்கெட் கவுண்டர்கள், பஸ் மற்றும் விமானடிக்கெட்டுகள் பெற தற்போதைய 500, 1000 ரூபாய்நோட்டுகளைப்    பயன்படுத்தலாம்.

2. அரசுமருத்துவமனைகளில் பில் தொகைக்கு செலுத்தமுடியும்.

3. மத்தியஅரசின் அங்கீகரிக்கப்பட்ட  பெட்ரோலியநிறுவனங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில்செலுத்த முடியும்.

4.  மத்திய மற்றும் மாநிலஅரசால் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளில் செலுத்த முடியும்.

5.  மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டபால் பூத்களில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு

தமிழகத்தில்10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார்எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும் என்றுஅரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2016-2017 பொதுத்தேர்வு வருகிற மார்ச்
மாதம்நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வில்பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவருவதாக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்ககம்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைஅரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவர்களின் ஆதார் எண்ணையும் கட்டாயமாகபதிவு செய்ய வேண்டும். இதைவைத்துதான் இந்த ஆண்டு பொதுத்தேர்வில்பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆதார் எண் இருந்தால் மட்டுமேபொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். எனவேஇந்த மாதத்திற்குள் மாணவர்களிடம் ஆதார் எண்ணை வாங்கவேண்டும்என கூறப்பட்டுள்ளது.


இதனால்தனியார் மற்றும் அரசு, அரசுநிதியுதவி பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் எத்தனை பேர்? இன்னும்எத்தனை பேர் ஆதார் எண்எடுக்கவில்லை என்று கணக்கெடுத்து, அந்தபள்ளிகளுக்கு ஆதார் எடுக்கும் சிறப்புமுகாம் அமைத்து, ஆதார் அட்டை வழங்ககல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியை இந்தமாதத்திற்குள் முடிக்கவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது முதல் முறை அல்ல...!

ஃபேஸ்புக், ட்விட்டர் என சமுகவலைதளங்களின் ஆதிக்கம்ஊடுருவியுள்ள இந்த டிஜிட்டல் காலத்திலும்1000,  500 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்பதை  பிரதமர்மோடியின் அரசு ரகசியமாக வைத்திருந்துஇன்று அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு புத்தாண்டுதொடக்கத்தில்
மக்களிடம் பழைய, ரூ 500, ரூ1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது.
திடீரெனஇப்படி ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன மத்திய அரசு அறிவிப்பதுதற்போதைய தலைமுறைக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், இதற்கு முன்புஇதே போல இரண்டு அதிர்ச்சிசம்பங்களை இந்தியா சந்தித்துள்ளது.

''ஊழல்மற்றும் கறுப்பு பணம், வறுமை, பயங்கரவாதம் ஆகியவை நம்  நாட்டை பின்நோக்கி இழப்பதைநான் உணர்ந்தேன்" .1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன பிரதமர் மோடி அறிவித்தபோது, கூறிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்இவை.  மோடியின்இந்த  முயற்சியால், கருப்புப்பண முதலைகள் ஆட்டம் கண்டுள்ளன. ரூபாய்நோட்டுகள் செல்லாது என அரசு திடீரெனஅறிவிப்பது புதிதல்ல. இதற்கு முன் இந்தியாவில்ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசும், அதற்குப் பின் மொரார்ஜி தேசாய்அரசும் இதை செய்து இருக்கின்றன.

1946 ஆம்ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின்கணக்கில் வராத  பணங்களைதடுக்கும் நோக்கில் ரூ1,000 மற்றும் ரூ10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது. இந்தியாசுதந்திரம் அடைந்த பிறகு 1954-ல்மக்களில் வசதிகளுக்காக  5,000 ரூபாய்நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், மீண்டும் அரசுக்குதலைவலியே மிஞ்சியது, கடத்தல்காரர்கள் லட்ச லட்சமான பணத்தைச்சுலபமாகக் கடத்க்ச் சென்றனர். வேறு வழியின்று 1978-ல்5000 ரூபாய் நோட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. அதன்பிறகுதற்போது தான் ரூபாய் நோட்டுகளுக்குமத்திய அரசு தடை விதித்துள்ளது.

 தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையின்பிண்ணனியில் மோடி அரசின், நம்பகத்தன்மைஅடங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  1946 மற்றும்1978-ல் இந்தியவின் வளர்ச்சியை தடுக்கும் மலையளவு  கருப்புபணம் இல்லை. ஆனால் 1990க்குபிறகு கருப்புப்பணம் பதுக்கல் என்பது புதுப் பரிமாணத்துடன்வளர்ந்தது.  ஆட்சிக்குவந்தவுடன் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தைமீட்டு, ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம்வழங்குவோம் என்கிற வாக்குறுதியை 2014-ம்ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி முன்வைத்தார். மோடிஅரசின் மிக முக்கியமான வாக்குறுதியாககருதப்பட்டது இது. ஆனால், ஆட்சிக்குவந்த பிறகு இந்த வாக்குறுதியைமோடி மறந்துவிட்டார் என்று நாடு முழுவதிலும்விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அதிரடிநடவடிக்கையால், தனது செல்வாக்கை மீட்டிருக்கிறார்மோடி

TNTET CASE......ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம்*


ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -

உச்சநீதிமன்றம் தீர்ப்பு.


5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.

Flash news:TNTET தீர்ப்பு -ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும்: உச்சநீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.

இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம்

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.