யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/8/18

அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் - தடை கோரி வழக்கு:

மதுரை, திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் எர்னஸ்ட்  டி பிரகாஷ் லிவிங்ஸ்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை (ஹைடெக் லேப்) ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 3,090 உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப்பள்ளிகளிலும் செயல்படுத்த முடிவாகியுள்ளது.  இதேபோல் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் வகுப்பறை என்ற அடிப்படையில் அறிவுத்திறன் (ஸ்மார்ட்)  வகுப்பறைகள் துவங்கப்பட உள்ளன.
இந்த இரு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களை செயல்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. பெரியளவிலான டெண்டர் பணிகளை பாடநூல் கழகம் இதுவரை கையாண்டதில்லை. இதுபோன்ற டெண்டர் பணிகளை அரசின் எல்காட் மூலமே மேற்கொள்ள வேண்டும். 
குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல தகுதியான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெண்டர் அறிவிப்பு அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பு சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்ய வேண்டும். 
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், அரசுத் தரப்புக்கு அவகாசம் அளித்து மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா ?

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் தலைமையாசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் காலிப்பணியிடம் இல்லை எனக் கூறி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை.

ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளிலும் இதுவரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, காலிப்பணியிடத்தை நிரப்ப பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறுகையில்,' தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும்' என்றார்.

நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு


பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட்’  தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் எனக்கூறிய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இந்த தேர்வுடன் என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனாய்வு நிறுவனம், இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக, நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019  மே மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும், JEE நுழைவுத்தேர்வு 2019 ஜனவரி 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும்!

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு
மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியிருந்ததை, மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “அடுத்த வருடம் முதல் (2019) நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும். மேலும் அனைத்துத் தேர்வு முறையும் கணினி மயமாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், பிரகாஷ் ஜவடேகரின் கருத்தில் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் அதிக அளவில் அவதியுறுவார்கள். மேலும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பிப்ரவரி மாதம் தான் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர் கொள்வார்கள்.
அதனால் அவர்களால் நீட் தேர்வை முழுக்கவனத்துடன் எழுத இயலாது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தக் கூடாது. 2019ஆம் ஆண்டில் நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டும் நடைபெறும். அத்தேர்வு ஆன்லைன் முறைக்குப் பதிலாக, தேர்வு மையங்களில் வழக்கமான பேப்பர்-பேனா முறையிலேயே நடத்தப்பட வேண்டும்" என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து, மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் முறையில் இல்லாமல் வழக்கமான முறையிலே நீட் தேர்வு நடத்தப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான பதிவுகளைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினைபள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில்உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும். 
நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.
10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள்பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.
நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டுஇருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Director of Government Examination,
DPI campus,
College Road,
Nungampakkam,
Chennai - 600 034.
Ph: 044-2827 8286, 044-2822 1734.
email: dgedirector@gmail.com
Web: www.tn.gov.in/dge

Diksha Mobile App - New Version Updated ( 20.08.2018 ) :