யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/9/16

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு: பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம்.இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுவிண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெறவிரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில், காஞ்சி வளாகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இங்கு, 2016ம் ஆண்டிற்கான, மத்திய தேர்வாணையக் குழுவின், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், முதன்மைத் தேர்வு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள், மூன்று வேலை நாட்களில் வழங்கப்படும்.இப்பயிற்சி மையத்தில் படித்தவர்களும், தனியே தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களும் என, மொத்தம் 225 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர்.பயிற்சிக் காலத்தில், கட்டணமில்லா விடுதி வசதி உண்டு; மாதம், 3,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும்.

80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி

51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 51 கல்லுாரிகளில் முதல்வர் இல்லாததால், பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். 
இவர்களால் கொள்கை முடிவுகளை எடுக்க முடிவதில்லை. காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிர்வாக பணிகளில் மட்டுமின்றி மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த உதவிகள் பெறுவதிலும் தொய்வு நிலை நீடிக்கிறது.புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வெளிநாட்டு பல்கலை, ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காரைக்குடி அழகப்பா அரசு கலைகல்லுாரியில் அனைத்து கல்லுாரி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் லோகநாதன், பொது செயலாளர் சிவராமன் கூறியதாவது: முதல்வர் காலிப்பணியிடத்தால் கொள்கை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. 10 ஆண்டுக்கு முன்பு அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு நியமிக்கப்படவில்லை.

மாணவர்களே வகுப்பறை, வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.1998-ல் பணி உயர்வு பெற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணி மூப்பை எதிர்நோக்கியுள்ளனர். பணிமூப்பு பட்டியல் வெளியிடாததால், துறை தலைவர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்படுகிறது. 3200-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கல்லுாரிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை படுத்த வேண்டும், என்றனர்.

பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என,எதிர்பார்க்கப்படுகிறது. 
அரசு தேர்வுத்துறை சார்பில்,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள்நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச் மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும்சேர்த்து, 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன.இந்தத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும்,'பார் கோடு' உடைய விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட வேண்டும்.இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன; அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது. மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும் இருக்காது.

இந்த முறையை, அனைத்து பாடங்களுக்கும் அமல்படுத்துவது குறித்து, அரசு தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி, 2017 மார்ச்சில் நடைபெற உள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் கொள்குறி வகை வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

விரிவுரையாளர் வினாத்தாள் 'அவுட்' தேனி பெண் சிக்கினார்

ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு மதுரையில் நடந்த தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் கேள்விகளை அனுப்பிய தேனி பெண் பிடிபட்டார்.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், மதுரையில் ஒன்பது மையங்களில், இந்த தேர்வு நேற்று நடந்தது. தனியார் பள்ளி ஒன்றில் தேனியை சேர்ந்த ராகப்பிரியா, ஆங்கில பாடத் தேர்வு எழுதினார்.அரை மணி நேரம் கடந்த நிலையில், சட்டைக்குள் வைத்திருந்த அலைபேசியை எடுத்த போது பிடிபட்டார். 
இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் விசாரித்தார்.அப்போது, ராகப்பிரியா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்; அவரது அலைபேசியில் உள்ள தகவல்களை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த போது, வினாத்தாள் பக்கங்களை புகைப்படம் எடுத்து 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பியது தெரிந்தது.விசாரணை நடத்திய போதே, வினாக்காளுக்கான விடை 'வாட்ஸ் ஆப்'பில் வந்ததை கண்டு, கண்காணிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கல்வி ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் குப்புசாமி, தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தலைமையிலான குழு அங்கு விசாரணை நடத்தியது.

பின், அலைபேசியை பறிமுதல் செய்து ராகப்பிரியாவை வெளியேற்றினர்.இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.'குரூப்'பில் விடை : தேர்வு துவங்கிய அரை மணி நேரத்துக்குள், வினாக்களை ராகப்பிரியா அனுப்பியுள்ளார். இதனால், அந்த 'வாட்ஸ்ஆப் குரூப்'பில்உள்ள மற்ற தேர்வர்களும் விடையை பார்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட, பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன.எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.கடந்த, 2011 மற்றும், 2016 சட்டசபை தேர்தலின் போது, 'பழைய ஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்; எனவே, அதுகுறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிசாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இக்குழுவினர்,இரு தினங்களுக்கு முன், ஒன்பது அரசு ஊழியர் சங்கங்கள்,ஆசிரியர் சங்கங்களை சந்தித்து பேசினர். நேற்று முன்தினம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் உட்பட, ஒன்பது சங்கங்களின் நிர்வாகிகள், குழுவினரை சந்தித்து பேசினர்.அனைத்து தரப்பினரும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அரசு குழுவினர், 'புதிய திட்டத்தில், மாற்றங்கள் செய்தால் போதாதா?' என கேட்டுள்ளனர்; அரசின் நிதி நெருக்கடியை எடுத்துரைத்துள்ளனர்.இதன் காரணமாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை, அரசு செயல்படுத்துமா என்ற சந்தேகம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டு உள்ளது. அரசு குழுவினர், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசாமல், புதிய திட்டத்தின்அம்சங்களையே பேசியதால், கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம்:அரசின் நிதி நிலைமையை எடுத்துரைத்தனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், என்ன மாற்றம் செய்யலாம் எனக் கேட்டனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பி.ஆரோக்கியதாஸ், ஒருங்கிணைப்பாளர்,

'டேக்டோ' கூட்டுக் குழு: மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவில்லை. லோக்சபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே, புதிய ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் இது, லஞ்சத்திற்கு வழி வகுக்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, குழுவிடம் கூறினோம்.

'ஜேக்டோ' கூட்டுக் குழுஒருங்கிணைப்பாளர்: 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் குறைகளை நீக்கி, எப்படி தொடரலாம்...' என, குழுவினர் ஆலோசனை கேட்டனர். ஆனால், 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தேவையில்லை; அதில்,எத்தனை திருத்தம் செய்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடையாது.'எனவே, பழைய பென்ஷன் திட்டம் தான் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவை' என்பதை, உறுதியாக கூறிவிட்டோம்.

எஸ்.என்.ஜனார்த்தனன், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்:தமிழக அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசின், பி.எப்., ஆணையத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையை மீண்டும் பெற, தமிழக ஊழியர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இதில், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம்கிடைக்கும் என்ற விகிதாச்சாரம் கூட கூறப்படவில்லை. ஊழியர்களின் தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதன் வருமானம் நிரந்தரமாக இருக்காது. ஊழியர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்ற உறுதியானதகவல்கள் இல்லை. எனவே, புதிய பங்களிப்பு திட்டமே வேண்டாம் என, கூறி விட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Minorities Welfare Department - Announcement of New Schemes by the Honble Chief Minister

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.எட்.பயில்வது குறித்து RTI - மூலமாக பெறப்பட்ட தகவல்.. Posted: 18 Sep 2016 05:16 AM PDT IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016

*IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016*
FIRST & SECOND YEAR
.
08.12.16-  THU - ES-331
09.12.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344
19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065
24.12.16-    SAT-   ES-361
26.12.16-    MON- BESE-066
27.12.16-    TUE-   ES-362
28.12.16-    WED-  ES-363
29.12.16-    THU-   ES-364