யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/8/17

நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு: 90ஆயிரம் காலியிடங்கள்

ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. 
2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம்நடத்தியது. கலந்தாய்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது.முதலில் பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 1,481 பேர் சேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 162 பேர் சேர்ந்தனர். பின்னர், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு நடைபெற்ற சேர்க்கையில் 371 பேர் சேர்ந்தனர். 86,355 மாணவர்கள் சேர்ந்தனர்: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 86,355 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.
பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, உடனடித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பி.இ. துணைக் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடத்தப்பட்டது.இதில் 3,708 பேர் சேர்ந்தனர். இறுதியாக, நிரம்பாத அருந்ததியினர் (எஸ்சிஏ) இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் 106 பேர் சேர்ந்தனர். கலந்தாய்வில் இடம்பெற்றிருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. இதில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின்89 ஆயிரம் இடங்களும் அடங்கும்.

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசுஅறிவித்துள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
பெரும்பாலான கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், சில பள்ளிகள், மாணவர்களை கணக்கு காட்டி உதவித்தொகை பெற்று, அவற்றை மாணவர்களிடம் வழங்காமல், ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, கல்வி உதவித்தொகையை மாணவர்களின்வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது.
அதேபோல், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில், ஆன் - லைன் விண்ணப்ப பதிவு முறையும் துவங்கப்பட்டது.மாணவர்கள், scholarships.gov.in என்ற இணையதளத்தில், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்படும் தொகை எவ்வளவு; தகுதியானவர்கள் யார் போன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ளன.ஏற்கனவே, இணையதளத்தில் பதிவு செய்து, உதவித்தொகை பெறும் மாணவர்கள், இந்த ஆண்டுக்கு புதுப்பிக்க, வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதே போல், புதிதாக விண்ணப்பிப்போர், அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை - ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. 
உயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில் ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு தொழிற் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும், அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்தால் மாதம் 1,000 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படும்.
தொழிற்கல்வியில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படிக்கும் விடுதி  மாணவர்களுக்கு, மாதம் 700 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு, மாதம் 400 ரூபாயும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், தற்போது வேறு எந்த முறையிலும் உதவித்தொகை பெறக் கூடாது. பெற்றோர் மாத வருமானம் 15,000 ரூபாய்கு மேல் இருக்கக் கூடாது.
தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின், படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து, அத்துடன் கல்வி சான்றுகள், உடல் ஊனமுற்றோருக்கான சான்று, வருமான சான்று, விடுதியில் சேர்ந்து படிப்பதற்கான சான்று அகியவற்றை இணைத்து, National Handicapped Finance and Development, Corporation (NHFDC), Red Cross Bhawan, Sector12, Faridabad - 121 007 என்ற முகவரிக்கு ஆக.,31க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://nhfdc.nic.in என்ற இணையதள முகவரி அல்லது 0129 - 2226 910, 2287 512, 2287 513 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்..

FLASH NEWS : JACTTO - GEO - 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்



CPS - ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும்
21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தில், அரசும், ஊழியர்களும், ஓய்வூதிய தொகையை பங்கிட்டுச் செலுத்த வேண்டும்.ஆனால், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு, 14 ஆண்டுகளான நிலையில், ஊழியர்களின் பங்களிப்பு தொகை மட்டும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற ஊழியருக்கான முழுப் பலன் வழங்கப்படவில்லை.
'இது, பாதுகாப்பில்லாத திட்டம்' எனக் கூறி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இதை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2016 பிப்ரவரியில், தொடர் போராட்டமும் நடத்தினர். அதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, வல்லுனர் குழுவை அரசு அமைத்தது.இக்குழுவின் புதிய தலைவராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது தலைமையில், வல்லுனர் குழுவினர், 21ம் தேதி முதல், மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினரின் கருத்துக்களை கேட்க உள்ளனர்

Central Govt Employees Expected 1% D.A From July - 2017

தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு ( GRAFF ) பத்திரிக்கை செய்தி!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்

                       
                 திருவண்ணாமலை: புத்தக திருவிழாவில், 'ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு
கடன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


-திருவண்ணாமலையில், நேற்று துவங்கிய புத்தக திருவிழா, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், 180க்கும் மேற்பட்ட அரங்குகள் மைக்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தோர், ஒரு லட்சம் தலைப்புகளில், புத்தகங்களை குவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், புத்தகங்கள் வாங்குவதற்கு வசதியாக, 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கியில் கடனுதவி பெறுவதற்கு, தி.மலை கலெக்டர், பிரசாந்த்
எம்.வடநேரே, ஏற்பாடு செய்துள்ளார்.இந்த கடன் தொகையை, ஆறு தவணைகளில், சம்பளத்தில் இருந்து திருப்பிச் செலுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திலேயே, வங்கிகள், வழிகாட்டி மையம் அமைத்துள்ளன.புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
புத்தகங்கள் வாங்க, வங்கி கடன் உதவிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருப்பது, இதுவே முதல்முறை.