யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/8/18

B.LITT B.EDக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு என்கிற உயர்நீதின்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.இதனை அனைத்து த.ஆசிரியர்களும் பயன்படுத்துவோம்.அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த வழக்கறிர்கள் திரு.சங்கரன் திரு.பாலச்சந்தர் ஆகியோருக்கு நன்றி

மாவட்டங்களில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் அலுவலகம்:

கல்வித்துறையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர், மண்டல இணை இயக்குனர் அலுவலங்கள் அமைக்கப்பட உள்ளது.பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 20 இணை இயக்குனர்கள், ‘நோடல் ஆபீசர்ஸ்’ ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணை இயக்குனர்களுக்கு, ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களை சேர்த்து பொறுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து கல்வித் துறை இணை இயக்குனர் அலுவலகம், இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குனர் அலுவலகம், மாவட்டங்களில்அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குனர்
அலுவலகம் மதுரையில் அமைக்கப்படுகிறது. இணை இயக்குனர்களுக்கான அலுவலகம் தேடும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை இணை இயக்குனர்கள் சென்னையில் இருந்து, பணிகளை கவனித்தனர். அரசின் சீர்திருத்த நடவடிக்கையால்,இனி மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து கவனிப்பார்கள், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைமுறைகள் மீண்டும் தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடைமுறைகள் மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட முடிவுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் 5 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என மூன்றடுக்கு முறையில் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்றடுக்கு முறை தேர்தல் ஒவ்வொன்றும் 5 நிலைகளாக நடத்தப்படுமென கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தேர்தல் வழக்கு தொடர்பாக வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை இப்போது விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் முடிவுகள்: இரண்டாம் நிலையிலுள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் முடிவுகளும், மூன்று மற்றும் நான்காவது நிலையில் உள்ள சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகளும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. மேலும், மூன்று மற்றும் நான்காவது நிலையிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முடிவுகள் தள்ளிவைப்பு: தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தேர்தல் முடிவு உள்பட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், சில நிர்வாகக் காரணங்களுக்காக தேர்தல் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள், நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் மேற்கொள்வதற்கான புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தன.

மதிய உணவுத் திட்டம் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்:

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை இணையதளம் வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறியதற்காக தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று கடந்த 2013ஆம் ஆண்டு மனு தொடுத்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுகள் சுத்தமானதாக உள்ளதா என்று கண்காணிப்பதற்கு தேசிய, மாநில அளவில் 2 குழுக்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதேபோல், மதிய உணவு திட்டத்தை இணையதளம் வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னார்வ தொண்டு அமைப்பின் வழக்குரைஞர் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை சில மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாதது அதிருப்தி அளிக்கிறது. இதற்காக அந்த மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை சிறார் கைதிகள் விவகாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் அமைப்பிடம் 4 வாரங்களுக்குள் மேற்கண்ட 3 மாநிலங்களும் டெபாசிட் செய்ய வேண்டும்.
இதேபோல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அருணாசலப் பிரதேச மாநிலம், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை. எனினும், இவைகளுக்கு அபராதம் விதிக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் அவசாகம் அளிக்கிறோம். இந்த அவகாசத்துக்குள் அருணாசலப் பிரதேசம், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர்ஹவேலி ஆகியவை உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்

எம்.பி.பி.எஸ்.: அகில இந்திய 2 -ஆம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு:

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் நடத்துகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12,683 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூலை 10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முடிவுகள் ஜூலை 12 -ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முடிவுகள் வெளியீடு: ஆனால் இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த உத்தரவின்பேரில் அகில இந்திய கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையும் அகில இந்திய கலந்தாய்வுக்கு தடை விதித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் ஆகஸ்ட் 8 -ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். ஆகஸ்ட் 8 -ஆம் தேதி மாலை கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், மாணவர்கள் கைவிட்ட இடங்கள் ஆகியவை அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்படும்.
தமிழகத்தில் எப்போது?: தமிழகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்படாததால் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியது:
அகில இந்திய கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் கல்லூரியில் சேருவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, நிரம்பாத இடங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு தமிழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
மீண்டும் கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30, 31 தேதிகளில் நடைபெற்றது. கலந்தாய்வில் நிரம்பாத மீதம் உள்ள இடங்களுக்கான நீட்டிப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும்

தற்காலிக பட்டச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் தற்காலிக பட்டச் சான்றிதழை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் உடனடியாக கல்விச் சான்றிதழ் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். படிப்பை முடித்து மூன்று மாதங்களுக்குப் பிறகே அவர்களுக்கு புரொவிஷனல் பட்டச் சான்றிதழ் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதிலும் சிரமம் இருந்து வந்தது.

இந்த நிலையை மாற்றும் வகையில், மாணவர்கள் படிப்பை முடித்த உடன் தற்காலிக புரொவிஷனல் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2018 ஏப்ரலில் தேர்வெழுதி பட்டப்படிப்பை முடித்திருக்கும் மாணவர்கள், www.unom.ac.in  என்ற இணையதளத்திலிருந்து தற்காலிக பட்டச் சான்றிதழை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் CA சிறப்பு பயிச்சி -அமைச்சர் செங்கோட்டையன்!

வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக வணிகவியல் துறையில் ஆடிட்டர் படிப்பிற்காக சிறப்பு பயிச்சி வகுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆடிட்டர் படிப்பிற்காக 25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பயிச்சி நடத்தப்படும் என்று திருப்பூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

பள்ளிக்கு சீருடையில் செல்லும் மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் - போக்குவரத்து துறை அமைச்சர்


மாணவர்கள் ஆகஸ்ட் 31-குள் எழுத படிக்க தெரியவில்லை எனில் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை - CEO உத்தரவு!

ஆகஸ்ட் 31 - குள் 10 வகுப்பு வரைஅனைத்து மாணவர்களும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் - தவறினால் இப்போது பாடம் எடுக்கும் ஆசிரியர் கடந்த ஆண்டு பயிற்றுவித்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை - CEO செயல்முறைகள்...


ஆடிப்பெருக்கு விடுமுறை அறிவிப்பு!

ஆடிப்பெருக்கான நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. அதை ஈடுசெய்யும் வகையில் வரும் 18ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும்- ஆட்சியர் கு.ராசாமணி அறிவிப்பு.