யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/8/18

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைமுறைகள் மீண்டும் தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடைமுறைகள் மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட முடிவுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் 5 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என மூன்றடுக்கு முறையில் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்றடுக்கு முறை தேர்தல் ஒவ்வொன்றும் 5 நிலைகளாக நடத்தப்படுமென கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தேர்தல் வழக்கு தொடர்பாக வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை இப்போது விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் முடிவுகள்: இரண்டாம் நிலையிலுள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் முடிவுகளும், மூன்று மற்றும் நான்காவது நிலையில் உள்ள சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகளும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. மேலும், மூன்று மற்றும் நான்காவது நிலையிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முடிவுகள் தள்ளிவைப்பு: தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தேர்தல் முடிவு உள்பட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், சில நிர்வாகக் காரணங்களுக்காக தேர்தல் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள், நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் மேற்கொள்வதற்கான புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக