யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/2/18

சொத்து கணக்குடன் வருவாய்க்கான ஆதாரத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ‘லோக் பிரஹாரி’ என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து கணக்குகளை ஆய்வு செய்ததில், 26 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 257 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக வருமான வரித்துறையும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் தெரிவித்துள்ளன. மேலும், 9 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்து கணக்கை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
தகுதி இழப்பு

சொத்து கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறியபோதிலும், வருவாய்க்கான ஆதாரத்தை தெரிவிப்பதை கட்டாயம் ஆக்கவில்லை.

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ வர்த்தக தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது அரசு ஒப்பந்தம் பெற்றிருந்தாலோ அத்தகைய வேட்பாளர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள் என்று முன்பு இருந்த 7டி பிரிவில் கூறப்பட்டு இருந்தது. அந்த பிரிவை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும். மேலும், அத்தகைய வர்த்தக தொடர்பு வைத்திருப்பவர்கள், அதை தங்களது பிரமாண பத்திரத்தில் தெரிவிக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வருவாய் ஆதாரம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது சொத்து கணக்குடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை வாங்கியதற்கான வருவாய் எப்படி வந்தது? என்பதையும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன்மூலம், அந்த சொத்துகள் சட்டரீதியாக வாங்கப்பட்டதா? இல்லையா? என்பதை வாக்காளர்களே தெரிந்து கொள்ள முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு சுற்றுலா திட்டம் :

கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க, இரு மாவட்டங்களின் சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தி உள்ளனர்.

மலைவாழ் மாணவர்கள்உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையில், தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆனாலும், தமிழக கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்கள், சுற்றுலா சார்ந்த விஷயங்களை 
அறியாதவர்களாக உள்ளனர். எனவே, கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை, நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்ல, கோவை, நீலகிரி மாவட்ட சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது. 

முக்கியத்துவம்இதற்காக, கோவை மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, வால்பாறை, ஆழியாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும், நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம், மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தால், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்திராத கிராமப்புற மாணவ - மாணவியர், அவற்றை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்தும், அவர்கள் அறிந்து கொள்வர். எனவே, 'சுற்றுலா துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களும், பெற்றோரும்வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் மாற்றம் பதிவாளர் தகவல்

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்ட மேற்படிப்பு 
படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்வு மற்றும் 
மாணவர்களுக்கான பட்டமேற்படிப்பு முடித்ததற்கான 
பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் 
நேற்று நடந்தது. பதிவாளர் ஆர்.சீனிவாசன் தலைமை 
தாங்கி, மாணவர்களுடைய குறைகளை தீர்த்து 
வைத்ததுடன், பட்டங்களையும் வழங்கினார்.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.சீனிவாசன், கூடுதல் 
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன் 
மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் 
பலர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம்

பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:-

நவீன யுகத்துக்கு ஏற்றார் போன்று பல்கலைக்கழகத்தில் 
பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை எளிய முறையில் 
கொண்டு செல்வதற்காக தகவல் தொழில்நுட்பத்தை 
2018-2019-ம் கல்வியாண்டு முதல் முழுமையாக அறிமுகப்படுத்த
 திட்டமிட்டு உள்ளோம். குறிப்பாக தற்போது பாட திட்டங்கள் 
அனைத்தும் அச்சடித்த புத்தகங்களாக மாணவர்களுக்கு 
வழங்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 
மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதள முகவரி
 மூலமும் பாடங்கள் வெளியிடப்படும்.

இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் 
போதிப்பதுடன், பல்கலைக்கழக இணையதளம்
 மூலமாக வெளியிடப்படும் பாடங்களை மாணவர்கள் 
தங்களுடைய வீடுகளில் உள்ள கணினி, செல்போன் 
மற்றும் டேப்-லெட் மூலமாகவும் எளிதாக படிக்க முடியும்.

பேராசிரியர்களுடன் நேரடி பேச்சு

அத்துடன் ‘ஸ்கைப்’ வசதி மூலம் பல்கலைக்கழக 
ஆசிரியர்களிடம், மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே 
பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து 
கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட நாளில் பகல் 
2 மணி முதல் 4 மணி வரை ஆசிரியர்கள் தயார் நிலையில் 
இருப்பார்கள்.

மாணவர்கள் ‘ஸ்கைப்’ மூலம் பாடத்தில் உள்ள 
சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் 
வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 
அடுத்த தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதி 
பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கூடுதல் பாடம் படிக்கும் வசதி

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் கூடுதலாக 
பிற பாடங்களையும் சேர்த்து படிக்க விரும்பும் தேர்வு 
சார்ந்த அமைப்பு (சாய்ஸ் பேஸ்ட்டு கிரெடிட் சிஸ்டம்) 
என்ற முறை கொண்டு வரப்பட உள்ளது. பி.எஸ்சி. 
பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிக்கும் 
மாணவர்கள் பி.காம் பாடத்தில் கணக்குப்பதிவியலில் 
உள்ள ஏதாவது ஒரு பாடத்தை கூடுதலாக படிக்க 
விரும்பினால் அதனையும் சேர்த்து படிக்க முடியும்.

அவ்வாறு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்து பட்டம் வழங்கும் போது 4 அல்லது 6 ‘கிரெடிட்’ என்ற பெயரில் கூடுதலான மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவ்வாறு 3 ஆண்டுகளில் 140 ‘கிரெடிட்’ மதிப்பெண்கள் பெறும் பட்டதாரி படிப்பு மாணவர்களுக்கும் 91 ‘கிரெடிட்’ மதிப்பெண் பெறும் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் கூடுதலாக பி.ஏ., மற்றும் எம்.ஏ. பட்டம் வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் பட்டப்படிப்புகளில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.

அஞ்சல் வழி கல்வியில் மாற்றம்

அதேபோன்று அஞ்சல் வழி கல்வி முறையிலும் சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. வேலை பார்த்துக் கொண்டே அஞ்சல் வழி மூலம் கல்வி பயின்று வருபவர்கள், வேலையை துறந்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து நேரடியாக (ரெகுலர்) வகுப்பில் சேர்ந்து படிக்கவும், நேரடியாக படித்து வருபவர்களுக்கு திடீரென்று வேலை கிடைத்து விட்டால், அவர்கள் அஞ்சல் வழியில் சேர்ந்து படிக்கவும் வசதி அளிக்கும் புதிய முறையும் கொண்டு வரப்பட உள்ளது.

இந்ததிட்டம் மூலம் மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு செல்லும் முறை தவிர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த 3 திட்டங்களையும் 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதன்முறையாக இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

துப்பாக்கிச் சூடு: மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்!

                                 

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென நுழைந்த முன்னாள் மாணவர் நிக்கோலஸ் க்ரூஸ் அங்கிருந்தவர்களை நோக்கி வெறித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 17 போ் உயிரிழந்தனர். 50 போ் காயடைந்தனா். இந்தச் சம்பவம் ஃப்ளோரிடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பள்ளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்ற ஆசிரியை 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ஜீப்ரா பாடம் எடுத்துவருகிறார். சம்பவத்தன்று பாடம் எடுத்துக்கொண்டிருந்த சாந்தி சுதாரித்துக்கொண்டு, தனது வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடி, மாணவர்களை பெஞ்சிக்கு கீழே அமைதியாக அமருமாறு கட்டளையிட்டார். ஆசிரியர் சொன்னபடி மாணவர்களும் பெஞ்சுக்குக் கீழே அமர்ந்தனர்.

அப்போது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அந்த வகுப்பறை வழியே நிக்கோலஸ் க்ரூஸ் சென்றுள்ளார். கதவுகள் அடைக்கப்பட்டு அமைதியாக இருந்ததால் கண்டுகொள்ளாமல் வகுப்பறையைத் தாண்டிச் சென்றுள்ளார். இதனால் அங்கிருந்த இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தப்பினர்.

இந்நிலையில், பள்ளிக்கு வந்த அதிரடிப்படை போலீசார் மாணவர்கள் பதுங்கியிருந்த கதவைத் திறக்கக் கூறியுள்ளனர். கதவைத் திறக்க மறுத்த ஆசிரியர் முடிந்தால் கதவை உடைத்து உள்ளே வாருங்கள் என்று கூறியுள்ளார்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு வெளியே அனுப்பினர்.

துப்பாக்கிச் சூடு நடக்கும்போது அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில் வகுப்பறையைப் பூட்டி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியருக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டுகள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

12 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி!

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 12 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கான இத்திட்டத்தின் முதல் ஆண்டில் 60,000 பேருக்கும், இரண்டாம் ஆண்டில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கும் முதற்கட்டமாகப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக இளைஞர்களில் சுமார் 59 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கிராமப்புற இளைஞர்களை மையமாக வைத்து இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.800 கோடி வரையில் செலவிடப்படும் எனவும், இதற்கான நிதி மத்திய அரசு மற்றும் உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்படும் என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து தமிழக மாநில தொழிலாளர் துறைச் செயலாளரான மங்கத் ராம் சர்மா கூறுகையில், “திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான மிகப்பெரிய திட்டம் ஒன்றை நாங்கள் செயல்படுத்துகிறோம். இப்பிரிவில் தமிழகம் எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி ஆண்டுக்கு ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்திற்கான செலவில் மத்திய அரசின் பங்கு 25 சதவிகிதமாக இருக்கிறது. மேலும், மாநில அரசின் சார்பாக இத்திட்டத்தில் செலவிடப்படும் தொகை குறித்த விவரங்கள் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியிடப்படும்” என்றார்.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வீட்டீர்களா?.பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவன்

மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி ஊக்குவிக்கும் வகையில் டில்லியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்தகொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது, பிளஸ் 1 மாணவர் கிரிஷ் சிங் பிரதமர் மோடியை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ''பள்ளி மாணவனாகிய எனக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா?' என கேள்வி எழுப்பினான்.
இதற்கு மோடி பதில் கூறுகையில், '' நான் தாமதமாகவே அரசியலுக்குள் நுழைந்தேன். அரசியல் சூழ்நிலையில் நான் இருந்தாலும் இயல்பாக நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலில் நான் அந்நியனாகவே உணர்கிறேன்.
1.25 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது. எனது ஆற்றலை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுத்தேர்வு. எனக்கோ 24 மணி நேரமும் தேர்வு தான்'' என்றார்.

கரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி

கரும்பலகையில் சொல்லி கொடுப்பதற்கு பதில் கம்ப்யூட்டரில் பாடம் நடத்தி வரும் நெல்லை அரசு பள்ளியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்கோ இந்தியா சோலார் நிறுவனத்தின் சார்பில் பாலமடை ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, ராதாபுரம் ஒன்றியம் சிலந்திகுளம் நடுநிலைப்பள்ளிகளிலும் இலவசமாக சோலார் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.
பாலமடை ஊராட்சி ஓன்றிய பள்ளியில் நடந்த விழாவில் ஆட்சியர் சந்தீப் தந்தூரி இந்த வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமச்சீர் பாடத்திட்டம் வகையில் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்று கொடுக்கப்படுகிறது. இதற்கான மின்சாரம் சோலார் மூலம் கிடைக்கிறது. பாடங்கள் படங்கள் மூலம் நடத்தப்படுவதால் மனதில் எளிதாக பதியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி சில பள்ளிகளில் இருந்தாலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
அதுவும் சோலார் வகுப்பறை இந்தப் பள்ளியில்தான் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த நேரமும் கல்வி கற்பிக்க முடியும். மாணவர்கள் விரும்பிய பாடங்களை மின்சாரம் உபயோகிக்காமல் படிக்கலாம். இதனால் அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும்
மேற்கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.