யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/2/18

12 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி!

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 12 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கான இத்திட்டத்தின் முதல் ஆண்டில் 60,000 பேருக்கும், இரண்டாம் ஆண்டில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கும் முதற்கட்டமாகப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக இளைஞர்களில் சுமார் 59 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கிராமப்புற இளைஞர்களை மையமாக வைத்து இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.800 கோடி வரையில் செலவிடப்படும் எனவும், இதற்கான நிதி மத்திய அரசு மற்றும் உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்படும் என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து தமிழக மாநில தொழிலாளர் துறைச் செயலாளரான மங்கத் ராம் சர்மா கூறுகையில், “திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான மிகப்பெரிய திட்டம் ஒன்றை நாங்கள் செயல்படுத்துகிறோம். இப்பிரிவில் தமிழகம் எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி ஆண்டுக்கு ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்திற்கான செலவில் மத்திய அரசின் பங்கு 25 சதவிகிதமாக இருக்கிறது. மேலும், மாநில அரசின் சார்பாக இத்திட்டத்தில் செலவிடப்படும் தொகை குறித்த விவரங்கள் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியிடப்படும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக