யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/8/17

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம் புதன்கிழமை மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், புதிய பாடத்திட்டக்குழுத் தலைவருமான மு.ஆனந்தகிருஷ்ணன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூ றியதாவது:

புதிய பாடத்திட்டக் குழுவில் பத்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் உறுப்பினர்களிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இருமுறை நடந்துள்ளது. கருத்தறியும் கூட்டம் மதுரையில் தான் முதலில் நடத்தப்படுகிறது. அடுத்ததாக கோவை, தஞ்சை, சென்னையில் நடத்தப்படும். கூட்டங்கள் முடிந்த பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் பள்ளியில் மாணவ, மாணவியர் பயிலும் நிலையில், சமூகத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தயாராவது அவசியம். பாடத்திட்டத்தை மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.

பாடத்திட்டம் தயாரிப்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பள்ளிகளில் ஏற்படுத்துவது அவசியம். மொழி, அறிவியல், கணினி என அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவை மாணவர்கள் சரியாக பெறும் வகையிலும் பாடத்திட்டத்தை அமைக்கவேண்டியுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் (2018-19) 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான புத்தகங்கள் தயார் செய்தல், அவற்றுக்கான பயிற்சியை ஆசிரியருக்கு அளித்தல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளன. அடுத்த 12 ஆண்டுகளுக்கான தொலைநோக்கோடு இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் பொறியியல் பாடமும் சேர்க்கப்படும் என்றார்.
காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் ஐகோர்ட்டு உத்தரவு

காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த மே மாதம் 9-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில், 40 முதல் 70 சதவீத உடல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊனத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, மொத்த இடங்களில் 4 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், 3 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்குவதாக கூறி, அதைவிட குறைவான இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும் புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடை விதிப்பு

இந்த மனு கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம், ஆனால், அந்த தேர்வின் முடிவை வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பதவிக்கான தேர்வில், மாற்றுத்திறனாளிகளின் உடல் ஊனம் தகுதியை அறிவியல்பூர்வமாகவும், அறிவார்ந்த முறையிலும் நிர்ணயம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. தற்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதி மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இதற்காக அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளது என்றும் கூறினார். நிரப்பலாம் தற்போது 3,456 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டால் அது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பணியிடங்களில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன்படி, மொத்த காலிப்பணியிடங்களில் சுமார் 140 இடங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்ப வேண்டும். எனவே, இந்த 140 இடங்களை மட்டும் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்கிறோம். மற்ற இடங்களை நிரப்பிக்கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 100% ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள -ஜாக்டோ - ஜியோ வலியுறத்தல் !! 

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம்

சென்னையில் 5.8.17 அன்று  ஜேக்டோ-ஜியோ சார்பாக   நடைபெற்ற கோரிக்கை பேரணி - ஆர்பாட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த அத்துனை நல் உள்ளங்களும், ஏதோ சில காரணங்களால் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்கள் -அரசு ஊழியர்களிடம் 5.8.17 அன்று சென்னையில் நாம் கண்ட நமது ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் எழுச்சியையும் , ஆர்பரிப்புகளையும்  மற்றும்  கோர்க்கையின் 
முக்கியத்துவத்தையும் அச்சு ஊடக செய்திகள் வாயிலாகவும் , காட்சி  ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் நண்பர்கள் அனுப்பிய கட் செவி (Whatsapp ) மூலமாகவும்  தெரிந்திருந்தாலும்  .இருப்பினும் அவர்களுக்குரிய நடையில் நீங்கள் எடுத்துக் கூறுங்கள் .
           மேலும் ,மாநில , மண்டல , மாவட்ட , வட்ட நிர்வாகிகள் நம்மை அழைப்பார்கள் என்று எண்ணாமல் , கோரிக்கைகள் நமக்கானது, எனவே கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் ஒவ்வொருவரும் தன்னெழுச்சியாக  ஜாக்டோ - ஜியோ அறிவிக்கின்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்ற வகையில் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலோ (அ) பள்ளிகளிலோ உள்ளவர்களிடம்  எடுத்துக்கூறி வருகிற 22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  100% ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கலந்து கொணடார்கள் என்ற புதிய போராட்ட வரலாற்றை படைத்திட  வேண்டுகிறேன் .
         நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
        நமது உரிமைகளை மீட்போம் .
      
            
          இவண்

 பெ.இளங்கோவன்  & 

 ஜெ.கணேசன்

  தொடர்பாளர்கள்    

 ஜாக்டோ - ஜியோ   

      JACTTO - GEO

அன்புடன்
மு.சிவக்குமார், தலைவர் TAMS,TPT