யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/9/16

B.Ed, படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்

தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, 2014 - 15 வரை, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சார்பில், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.பி.எட்., படிப்புக்கு, 37 ஆயிரத்து, 500 ரூபாய்; பி.ஏ.,- பி.எட்., நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு, 22ஆயிரத்து, 500 ரூபாய்; பி.எஸ்சி., - பி.எட்., நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் எம்.எட்., படிப்புக்கு, 38 ஆயிரம் ரூபாய் என, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இது, ஒரு ஆண்டுக்கான கட்டணம்.

கடந்த, 2015க்கு முன் வரை, பி.எட்., படிப்புக்கு, 41 ஆயிரத்து, 500 ரூபாய் கட்டணம் இருந்தது. அப்போது, பி.எட்., படிப்பு ஓராண்டாக இருந்ததால், இந்த கட்டணத்தில் படிப்பை முடித்து விடலாம். தற்போது, பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.

அதனால், 2015 - 16ல், பி.எட்., படிப்பில் சேர்ந்தோர், முதலாம் ஆண்டில், 41 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்தி உள்ளனர்; இந்த ஆண்டுக்கு, 37 ஆயிரத்து, 500 ரூபாய் என, இரண்டு ஆண்டு படிப்புக்கு, 79 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும். இந்த ஆண்டு, பி.எட்., படிப்பில் சேருபவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 75 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

B.Ed.: செப். 30-க்கு பின்னர் சேர்க்கை நடத்த அனுமதி இல்லை

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பில் (பி.எட்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சேர்க்கை வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தது. இதையடுத்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கையை செப். 30-க்கு பின்னர் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 பி.எட். கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,777 இடங்களுக்கு மட்டும், ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 650-க்கும் அதிகமான சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள்முழுவதையும், அவர்களே நிரப்பிக் கொள்கின்றனர்.இந்த இரண்டு ஆண்டு படிப்பில் 2016-17ஆம் கல்வியாண்டு சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அரசுசார்பில் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடத்தப்பட்டது.

இதில் மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் மட்டும் நிரம்பின. நிரப்பப்படாத 463 இடங்களுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.செப். 30 வரையே சேர்க்கை அனுமதி: ஒட்டுமொத்த பி.எட். சேர்க்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து பி.எட். கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை தமிழ்நாடு ஆசிரியர்கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.அதில், அரசுக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பி.எட். சேர்க்கை அன்றைய தினத்தோடுநிறைவு செய்யப்படுகிறது.

இதனால், கல்லூரிகள், பி.எட். படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை செப்டம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் சேர்க்கைநடத்த அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.இதன்படி, தனியார் பி.எட். கல்லூரிகள் 30-ஆம் தேதி வரை சேர்க்கை நடத்திகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி? 'கெடு'விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி.

பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவுசெய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. 
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிகளுக்கு...இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.

20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை.இதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

முரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'என்றனர்.

வினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வு?

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை தேர்வே நடத்தாமல், 'ஆல் பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது. சில பள்ளிகளில் மட்டும்பெயரளவில் பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. பருவத்தேர்வு வினாத்தாளை அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்கின்றன; சில இடங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தயாரிக்கின்றன.
கோவை மாவட்டத்தில், சிறுவர் கலா மன்றத்தின் சார்பில்,முதலாம் பருவ தேர்வுக்கான ஐந்தாம் வகுப்பு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த வினாத்தாள் தேர்வு நடக்கும் முன், விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், ''வினாத்தாளை வெளியிட்டு தேர்வை நடத்தினால், மாணவர்களின் கல்வித்திறன் வெளியே தெரியாமல் போய்விடும். கடந்த ஆண்டும் இதுபோல தேர்வு நடந்தது. இனிமேலாவது, முறைப்படி வினாத்தாளை பாதுகாத்து தேர்வுகளை நடத்த வேண்டும்,'' என்றார்

TRB : ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு: 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள்

விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டதாரி பெண்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.,டி.,யில், ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டி.ஆர்.பி., சார்பில், நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது.மதுரை தேர்வு மையம் ஒன்றில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதிய, தேனியை சேர்ந்த பட்டதாரி பெண், மொபைல் போனை தேர்வு அறைக்குள் கொண்டு வந்து, வினாத்தாளை படம் பிடித்து, 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் அனுப்பி உள்ளார். பின், பதில் வந்துள்ளதா என, பார்க்க முயன்ற போது, அறை கண்காணிப்பாளரிடம் சிக்கினார்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர், அந்த பெண்ணிடம் விசாரித்து, போலீசில் புகார்அளித்தனர்.ஆசிரியர் பதவிக்கான தேர்வைக்கூட, பள்ளி கல்வித்துறையால், பிரச்னையின்றி நடத்த முடியவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அலட்சியம்'

ஆசிரியர்களை நியமிக்கும், டி.ஆர்.பி.,யில், வெளிப்படை தன்மை இல்லை; நியமனங்களில் நேர்மையான விதிகள் கடைபிடிக்கப்படுவது இல்லை' என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், 'டி.ஆர்.பி., அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், வினாத்தாள் வெளியான மோசமான நிலை ஏற்பட்டுள்ளது' என, பட்டதாரிகளும், ஆசிரியர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

பாதி விடுதலை தலைமை ஆசிரியர்களுக்கு மீதி விடுதலை எப்போ?

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி : தொடக்க கல்வி இயக்குநர் தகவல்.

தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்திய தேசிய எரிசக்தி மேலாண்மை இயக்குநரகம் சார்பில் எரிசக்தியை சேமிப்பதில் தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிகள் அளவிலான ஓவிய போட்டி, 4, 5 மற்றும் 6ம் வகுப்புக்கு ‘ஏ’ என்ற பிரிவிலும், 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பி’ என்ற பிரிவிலும் நடத்தப்பட வேண்டும். ‘ஏ’ பிரிவில் ‘ஒரு வாட் மின்சாரத்தை சேமித்து அதிக மின்சாரத்தை சேமிப்போம்’, ‘வாருங்கள் நாம் ஒருங்கிணைந்து மின்சாரத்தை சேமிப்போம், முன்னேற்றத்தின் பங்குதாரர்கள் ஆவோம்’.

 ‘விழிப்புணர்வு கொண்டவர்களாக திகழ்ந்திடுங்கள், எரிசக்தியை மிகவும் கவனமாக உபயோகப்படுத்திடுங்கள்’ என்ற தலைப்பிலும் ஓவிய போட்டி நடத்த வேண்டும்.‘பி’ பிரிவுக்கு ‘எரிசக்தி சேமிப்பு ஸ்மார்ட் நகரங்களை நோக்கி ஒரு ஸ்மார்ட் படி’, ‘கார்பன் தடத்தை குறைத்திடுங்கள்’, ‘போலாரை பாதுகாக்க சோலார் பயன்படுத்துங்கள்’ ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டுபள்ளி அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு படைப்புகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் சென்னை, தி.நகரில் உள்ள பவர் கிரிட் கார்பரேசன் ஆப் இந்தியாவின் பொதுமேலாளருக்கு(எச் ஆர்) அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் மூலம் வருகை பதிவு முறை அறிமுகம்.

பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவுமுறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
« சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிக்கு ரூ.3 கோடி செலவில் தனியே விடுதிக் கட்டிடம், வேலூர் மாவட்டத்தில், ஜவ்வாது மலையில் உள்ள புதூர் நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடி செலவில் மாணவியர் விடுதி கட்டப்படுகிறது.

« பழங்குடியினர் நல 306 உண்டி உறைவிடப் பள்ளிகள், 42 பழங்குடியினர் விடுதிகள், 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகைப் பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில் பயோ மெட்ரிக் கருவிகளைக் கொண்டு வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இத்திட்டம் ரூ.1 கோடியே 54 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

« பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், ரூ.1 கோடியே 29 லட்சம் செலவில், 25 பள்ளிகளில் ஓர் அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள்
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான
 EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)
🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .
🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது  ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.
இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.
🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.
🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.
 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)
🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.
🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,
ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.
🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.
🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.

பள்ளிகளில் 2072 ஆசிரியர் பணியிடங்கள்

பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:–

மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
உதவி ஆணையர், பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போன்ற பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 72 பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது.பணி வாரியாக அசிஸ்டன்ட் கமிஷனர் பணிக்கு 2 பேரும், பிரின்சிபால் பணிக்கு 40 பேரும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 880 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 660பேரும், பட்டதாரி ஆசிரியர் (மூன்றாம் மொழிகள்) 255 பேரும், மிஸ்க் கேட்டகரி டீச்சர் பணிக்கு 235 பேரும்தேர்வு செய்யப்படுகிறார்கள்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு: உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 31–7–2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுஅனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி: முதுநிலை அறிவியல் மற்றும் கலைப்படிப்புகளுடன், பி.எட். படித்தவர்கள், இளநிலை பட்டிப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.தேர்வு செய்யும் முறை:எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.1500–ம், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.1000–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9–10–2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 14–10–2016–ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த உத் தேசிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிற்கால உபயோகத்திற்காக வைத்துக் கொள்ளவும்.

இது பற்றிய விவரங்களை   www.nvs-hq.org/ www.mecbsegov.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

RMSA Training 10 Days Training 1st Schedule

*RMSA Training*
10 Days Training[1st Schedule - 5 Days -Tentative Schedule]
*for 9th and 10th handling teachers
*This is Tentative Schedule Only.
*4.10.16 முதல்08.10.16  வரை அறிவியல்.
*13.,14..,15.,17.,18-10-2016  ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல்
*19.20,21,22 & 24 -10-16 கணிதம்