யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/16

NMMS-2016-2017 - எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு 28.01.2017 அன்று நடைபெறும்-தேர்வு துறை இயக்குநர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு

மேற்குவங்க மாநில அரசு ஊழியர்களுக்கானமாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாகஅளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும்,
திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்றுஅறிவித்தார்.
ரொக்கமாக...

செல்லாதநோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராகபல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கானமாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாகஅளிக்கப்படும் என, நேற்று அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, மாநில அரசே ரொக்கமாகஅளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

குரூப்1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டியஅம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்துடி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்டதகவல்:-
குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல், அதற்கு முன்னரே போதியகால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள்விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பபிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள்இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாகஉள்ளீடு செய்ய வேண்டும். விண்ணப்பம்சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களைவிண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவேஇணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்புதாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்துசமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களைமாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதுஎன்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள்கரும்பலகையில் எழுதி காட்டியவுடன் மாணவர்கள்தங்களின் நோட்டுகளில் எழுதி விடையளிக்க வேண்டும். தேர்வு நடந்த அன்றய தினமேவிடைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

கார், வேளாண், வீட்டுக் கடன்களுக்கான தவணை செலுத்த 60 நாள் கூடுதல் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும்ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடிஅறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணப்பற்றாக்குறைநிலவி வருவதால், வீட்டுக் கடன், வேளாண் கடன்,
கார் கடன் உள்ளிட்டவற்றுக்கான தவணையைச்செலுத்துவதற்கு 60 நாள்கள் கூடுதல் அவகாசம்வழங்கப்படும் என்று இந்திய ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.
அனைத்துவங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களதுவாடிக்கையாளர்களுக்கு இந்த அவகாசத்தை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம்தேதி முதல் டிசம்பர் 31-ஆம்தேதி வரை கடனுக்கான தவணைசெலுத்த வேண்டியவர்களுக்கு இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கடன், வீட்டுக் கடன், பயிர்க் கடன், கார் மற்றும் வாகனக் கடன்ஆகியவற்றுக்கு இந்தச் சலுகை பொருந்தும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்களைத் தவிர, நடைமுறை மூலதனக் கணக்கில் கீழ்ரூ.1 கோடி வரை கடன்பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கும் கூடுதலாக 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பணம் எடுக்கும் வழிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியீடு

திருமணசெலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரைபணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரூபாய்நோட்டு வாபஸ் விவகாரத்தில் வங்கியிலிருந்துபணம்
எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறுகட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், திருமண செலவிற்கு மட்டும்ரூ.2.5 லட்சம் வரை ஒரேதடவையாக எடுக்கலாம் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:
நவ.,8 ம் தேதிக்கு முன்வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமேஎடுக்க முடியும்.
டிச.,30 க்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே ரூ.2.5 லட்சம்வரை வங்கியிலிருந்து எடுக்க முடியும்.
பெற்றோர்அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே ரூ.2.5 லட்சம்வழங்கப்படும்.
ரூ.2.5 லட்சம் எடுக்க தனி விண்ணப்பத்தைஅளிக்க வேண்டும்.
திருமணஅழைப்பிதழ், முன்பண செலவு ரசீதுவிண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்களிடம்உள்ள பழைய ரூபாய் நோட்டுகளைகொடுத்து மாற்றி கொள்ளலாம்.

வங்கி கணக்கு உள்ளவர்கள் அவர்கள்கணக்கில் டிபாசிட் செய்து பின்னர் எடுத்துகொள்ள வேண்டும்.

புதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 1000க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

புதிதாகநடத்தப்பட உள்ள டெட் தேர்வில்குறைவான பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்ப வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்

அதன்படி
மாணவர்பற்றாக்குறை காரணமாக பள்ளிக்கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களும்,குறிப்பிட்ட சிலபாடங்களில் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) நிரப்ப வாய்ப்பிருக்கிறது
4500 ஆசிரியர்பணியிடம் நிரப்பப்படும் என கூறியிருப்பதால் எஞ்சிய3500 காலியிடங்கள் தொடக்க கல்விதுறை,ஆதிதிராவிடர்மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருக்கக்கூடும்.

இதனிடையே1600 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிட அறிவிப்பு விரைவில்அறிவிக்கப்படும் என கூறினர்

ENGLISH TRAINING

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங்களில் பயிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: 

2016-17ம் கல்வி ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி, பல் கலைக்கழகங்களில் பயிலும்தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கான ஊக்கத் தொகை (SDAT) வழங்கப்பட உள்ளது.உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வீரர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப் பட உள்ளது.2015 ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஜூன் 30-ம் தேதி வரையிலான காலங்களில், தேசிய அளவிலான பள்ளி விளை யாட்டு குழுமம், அங்கீகரிக்கப் பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள்,இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய போட்டிகள் மற்றும் அகில இந்திய பல் கலைக்கழகங்களுக்கு இடையே யான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற விளை யாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் இந்த ஊக்கத் தொகையை பெற விண்ணப் பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள லாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம்பதிவிறக்கமும் செய்துக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்ப படிவங்களை வரும் 30-ம் தேதிக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில், தகுந்த அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகிய வற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.), தமிழக அரசு துறைகளில் ஏற்படும் மருத்துவம் தொடர்பான பணியிடங்களை நிரப்பி வருகிறது.
தற்போது இந்த அமைப்பு உதவி அறுவைசிகிச்சை மருத்துவர் (அசிஸ்டன்ட் சர்ஜன்) பணிகளை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1,223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 1079 பணியிடங்கள் புதிய பணியிடங்களாகும். மீதியுள்ள 144 இடங்கள் பின்னடைவுப் பணிகளாகும். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி. பி.சி.எம். பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் 48 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். 1-7-2016-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:
எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புடன், முதுநிலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள், மருத்துவ மேற்படிப்புகள், சிறப்பு பிரிவு படிப்புகள், டி.என்.பி. ஆகிய படிப்புகளை படித்து மெட்ராஸ் மருத்துவ பதிவு மையத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகளுடன், தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ)., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.375 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும், செலான் மூலம் இந்தியன் வங்கி கிளைகளிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-11-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். 2-12-2016-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு 22-1-2017-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு தடை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு:

வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பெரம்பூரை சேர்ந்த குமாரவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது

தமிழகத்துக்கு புதிய 500 நோட்டு 25ம் தேதி வருகிறது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்

மத்தியஅரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும்2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில்கிடைக்கிறது. ரூ.500
இதுவரை தமிழகத்துக்குவந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரைவிற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும்கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டுபொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடிவருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்தபோதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை. இதனால் புதிய ரூ.500 நோட்டுவினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண முடியும் என்றசூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டுஎப்ேபாது வரும் என்பது தொடர்ந்துகேள்விக்குறியாகி வந்தது. இது குறித்துஅந்த அதிகாரிகள் கூறுகையில்,
“ புதியரூ.500 நோட்டு ஒரு சிலமாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டுஉள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்தபணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர்அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில்புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்படவாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்” என்றார்.

TET தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி அமைச்சரை சந்தித்து மனு.

இன்று சென்னையில் கல்வி அமைச்சரை சந்தித்து வெயிட்டேஜ் பற்றி விளக்கினோம். இது குறித்து பலர் மனு அளித்துள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 தகவல்,
திரு மு.இராஜபாண்டி,
அருப்புக்கோட்டை.

SCERT - மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை மாநில போட்டிகள் 23.11.2016 & 24.11.2016ஆகிய தேதிகளில் நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்

CCE WORK SHEET 1-8TH ANSWER KEY (21.11.2016)

CCE.இரண்டாம் வார தேர்வு.21.11.2016,திங்கள்-
தமிழ் -விடைகள்
*1 ம் வகுப்பு*
1. ஈ. ஆலமரம்
2. இ.அகல்
3. ஈ.  கால்
4.  இ.ஆப்பம்
5.  ஆ. ஆ
6.  ஆ. அ
7.  ஆ. தாத்தா
8. ஆ.காகம்
9. ஆ.மாங்காய்
10. இ.ஸ்டாபெரி

*2 ம் வகுப்பு-தமிழ்*
1.இ. உறுதியுடைய
2. அ. கலை-மலை
3. ஈ.  கண்-காளை
4.அ. எழுதினாள்
5. ஆ. கோலி-கோழி
6.ஆ.கற்போம்
7.இ.மிதிவண்டி
8.அ.முடிந்தது
9.ஆ. திருப்பதி
10. இ.கைபேசி                       
 *3 ம் வகுப்பு-தமிழ்*

1.அ.அழகு
2.ஈ.மலைகளின் அரசி
3.இ.புத்தகங்கள் இருக்குமிடம்
4.ஈ.வளவன்,பந்து
5.ஆ.செயல்
6.அ.விளையாடினான்.
7.இ.நனியுண்டு
8.அ.வீரம்,வெல்லம்
9.ஆ.மரம்
10.ஆ.கடல்+கரை                       
 *4 ம் வகுப்பு-தமிழ்*

1.அ.மூதுரை
2.ஈ.தொட்டில்
3.இ.தென்னை
4.இ.வெற்றிலைக்கொடி
5.இ.வயல்
6.அ.பள்ளியிலிருந்து
7.ஆ.திண்ணையில்
8.இ.பூட்டியிருந்தது
9.ஈ.அறிமுகமான
10.ஆ.பலர்                       
*6 ம் வகுப்பு -தமிழ்*

1.ஆ.3
2.ஆ.வா
3.ஆ.குதிரையோட்டம்
4.அ.வந்தார்
5.அ.மாலா பழம் பறித்தாள்
6.அ.நட்பு
7.ஆ.இரு எழுத்தும் நெடில்
8.அ.உறுமும் புலி
9.இ.கத்தும்
10.அ.ஒற்றுமை                       
 *5 ம் வகுப்பு-தமிழ்*

1. அ. குழந்தை
2. ஈ. தோல்வி
3. அ. பொறாமை
4.  இ.( நேற்று   காலையில் உணவு   
உண்டேன்
5. ஈ.  தன் கையே தனக்குதவி
6. ஈ.  புத்தகங்கள் விற்பனை
7. அ.  11நாள்
8. ஈ.  வள்ளுவர் அரங்கம், சென்னை
9.  இ. சமையல்
10. இ.நுழைவுக்
கட்டணம் கிடையாது.                       
 *7 ம் வகுப்பு*

1. ஈ .நான்காம் தமிழ்ச்சங்கத்தை
2. ஈ.அரைஞாண்கயிறு விற்கிறான்
3.  ஈ. அவன் உடமை எனக்கு வேண்டும்.
4. இ.இறந்தகாலம்
5. ஆ.வினாக்குறி
6. இ.காவிரி ஆற்றின் தென்கரையில்
7. இ. பேரூர்
8. இ.அமைந்து+உள்ள
9. ஈ.தன் தந்தையிடம்
10. ஆ.இடப்பெயர்                       
 *8 ம் வகுப்பு-தமிழ்*
1.ஈ. உ0
2.ஈ.ஆந்தை அறியது
3.இ.புனல்
4.இ. வென்று வந்தாள் -பெயரெச்சத்தொடர்
5.அ.தமிழ்நாடே திரண்டது-இடவாகுபெயர்
6.அ.சுப்பிரமணியன்
7.ஆ.15
8.அ.பாஞ்சாலிசபதம்
9.இ.அரசு+அவை
10.ஈ. 1,3 ம்