யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/16

திருமணத்திற்கு பணம் எடுக்கும் வழிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியீடு

திருமணசெலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரைபணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரூபாய்நோட்டு வாபஸ் விவகாரத்தில் வங்கியிலிருந்துபணம்
எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறுகட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், திருமண செலவிற்கு மட்டும்ரூ.2.5 லட்சம் வரை ஒரேதடவையாக எடுக்கலாம் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:
நவ.,8 ம் தேதிக்கு முன்வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமேஎடுக்க முடியும்.
டிச.,30 க்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே ரூ.2.5 லட்சம்வரை வங்கியிலிருந்து எடுக்க முடியும்.
பெற்றோர்அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே ரூ.2.5 லட்சம்வழங்கப்படும்.
ரூ.2.5 லட்சம் எடுக்க தனி விண்ணப்பத்தைஅளிக்க வேண்டும்.
திருமணஅழைப்பிதழ், முன்பண செலவு ரசீதுவிண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்களிடம்உள்ள பழைய ரூபாய் நோட்டுகளைகொடுத்து மாற்றி கொள்ளலாம்.

வங்கி கணக்கு உள்ளவர்கள் அவர்கள்கணக்கில் டிபாசிட் செய்து பின்னர் எடுத்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக