யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/18

இடைநிற்றலை தவிர்க்க பங்களிப்பு திட்டம்; மாணவ குழுக்கள் அமைத்து ‛பிராஜெக்ட்' தயாரிக்க ஏற்பாடு!

விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றலை குறைக்க 100 அரசு பள்ளிகளில் மாணவர் பங்களிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தவிர்க்கவும், கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஒரு பாடத்திற்கு 5 பேர் என தனி குழு அமைக்க வேண்டும். இம்மாணவர் குழுவினர் ஏதாவது ஒரு தலைப்பில் 'பிராஜெக்ட்' உருவாக்க வேண்டும்.


உதாரணத்திற்கு கணிதம் பாடத்தில் 'அல்ஜிப்ரா' கடினமாக இருக்கும். அவற்றை எளிதாக விடைகாணும் வகையில் பிராஜெக்ட் தயார் செய்திடலாம்.


இது தவிர சமூகம், குடும்பம், வீடு, உணவு போன்ற ஏதாவது ஒரு தலைப்பில் ஆய்வு செய்து அவற்றில் உள்ள நல்ல மற்றும் தீய அம்சங்களை அதில் விவரிக்க வேண்டும்.


பிராஜெக்ட் வழிகாட்டுதலுக்கு பள்ளிவாரியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுக்கள் டிசம்பருக்குள் பள்ளி அளவில் பிராஜெக்ட் வழங்கி, ஜனவரியில் கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.


பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் சிறந்த பிராஜெக்ட்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை அமல்படுத்தவும் அரசு நடைமுறைப்படுத்தும்.

இதுபோன்றவற்றில் மாணவர்கள் ஈடுபாடு அதிகரித்தால் இடைநிற்றல் குறைந்து சமூகத்திற்கு பயனுள்ள வரைவு திட்டம் கிடைக்கும்,' என்கின்றார்.

*எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; உதவி இயக்குனர் விசாரணை!*


மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்துவதற்கான தேவைகள் குறித்து மருத்துவ கல்வி உதவி இயக்குனர் (திட்டம்) சபிதா விசாரணை நடத்தினார்.


இங்கு 2019 முதல் மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்த மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


இதற்காக மாணவர்கள் விடுதி, வகுப்பறைகளுடன் கூடிய ஆடிட்டோரியம், நவீன நுாலகம் கட்டுமான பணிகள் படிப்படியாக நடக்க உள்ளது.


மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப பேராசிரியர் பணியிடமும் நிரப்ப வேண்டும். இதற்கான பணிகள் எந்தளவிற்கு நடக்கிறது என்பது குறித்து மருத்துவ கல்வி உதவி இயக்குனர் சபிதா விசாரணை நடத்தினார்.


மருத்துவமனையில் ஜப்பான் நிதி 320 கோடி ரூபாயில் ஆப்பரேஷன் தியேட்டர் உட்பட 4 மாடி கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளனர். இது குறித்தும் விசாரித்தார்.

TNPSC - குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம்

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகளை மறுத்து சுமார் 900 பேர் இணையதளத்தில் மனு செய்துள்ளனர். மேலும், இதற்கான கால அவகாசம் வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.


தமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாள்களுக்குள்
வினாத்தாள்களுக்கான உத்தேச விடைகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஒவ்வொரு முறையும் உத்தேச விடைகளை மறுக்கும் வாய்ப்பானது அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகவே வழங்கப்படும்.
அதாவது, உத்தேச விடைகளை மறுப்பதற்கான ஆதாரங்களை அஞ்சல், மின்னஞ்சல் போன்றவற்றின் வழியாக அனுப்பி அவை பரிசீலிக்கப்பட்டு சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்த நடைமுறைக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொள்வதால், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை எத்தனை பேர்: தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக இணையதள வசதியை (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ற்ங்ஸ்ரீட்) டி.என்.பி.எஸ்.சி. உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். (பெயர், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வுப் பாடத்தின் பெயர், வினா எண்). இத்துடன், தேர்வர்கள் குறிப்பிடும் விடையையும், அதற்கான ஆதாரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாரமாகக் குறிப்பிடும் புத்தகத்தின் தலைப்பு, புத்தக ஆசிரியரின் பெயர், பதிப்பாளர் பெயர், புத்தகப் பதிப்பின் ஆண்டு, பதிப்பு எண், பக்க எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியைப் பயன்படுத்தி இதுவரை 900 பேர் வரை உத்தேச விடைகளை மறுத்து செய்துள்ளனர். உத்தேச விடைகளை மறுப்பதற்கான வாய்ப்புக்கு வரும் 20-ஆம் தேதி கடைசி என டி.என்.பி.எஸ்.சி., ஏற்கெனவே அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வினை 6 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் இதுவரை 900 பேர் மட்டுமே உத்தேச விடைகளை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாள்கள் அவகாசம் உள்ள நிலையில் மேலும் சிலர் உத்தேச விடைகளை மறுத்து ஆதாரங்களுடன் மனு செய்வார்கள் எனத் தெரிகிறது.

நாகையை அச்சுறுத்தும் மற்றொரு புயல்

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்

நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.


தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.


எலுமிச்சை சாறு மற்றும் தேன்
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைப் புண் வரவிடாமல் தடுக்கும்.

துளசி சாறு

வறட்டு இருமல் இருப்பவர்கள் சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீர் குடித்தால் நல்லது. துளசி மிகச்சிறந்த மூலிகையாகும், துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு சேர்த்து பருகி வந்தால் இதமாக இருக்கும்.


பாலில் மிளகுத் தூள்

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவற்றுடன் சீரகம் கலந்து உண்டால் சளி எட்டி கூட பார்க்காது.

இஞ்சி சாறு

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.


கேரட் சாறு

உடல் பொலிவிற்கு வலிமை சேர்க்கும் கேரட் சாறு சளியை எதிர்க்கவும் நல்லது, இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்

நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.


தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.


எலுமிச்சை சாறு மற்றும் தேன்
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைப் புண் வரவிடாமல் தடுக்கும்.

துளசி சாறு

வறட்டு இருமல் இருப்பவர்கள் சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீர் குடித்தால் நல்லது. துளசி மிகச்சிறந்த மூலிகையாகும், துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு சேர்த்து பருகி வந்தால் இதமாக இருக்கும்.


பாலில் மிளகுத் தூள்

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவற்றுடன் சீரகம் கலந்து உண்டால் சளி எட்டி கூட பார்க்காது.

இஞ்சி சாறு

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.


கேரட் சாறு

உடல் பொலிவிற்கு வலிமை சேர்க்கும் கேரட் சாறு சளியை எதிர்க்கவும் நல்லது, இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

6 நோய்களை குணப்படுத்த தினமும் இந்த காய்களை சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம்

நம்முடைய வாழ்க்கையில் நவீன வசதிகள் பெருக பெருக உடல் நலத்தை இழந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.


இந்தத் தலைமுறையினர் தான் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதிற்குள் பலவிதமான நோய்களால் தாக்கப்படுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாததும், சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாகும்.

முருங்கைக்காய்- ஆஸ்துமா

முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் A, C போன்ற சத்துகள் உள்ளது.எனவே இதை தினமும் சமைத்து சாப்பிடும் போது ஏராளமான நோய்கள் குணமடைகின்றன.

முருங்கைக் காய் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். முருங்கைக் காய் போட்டு ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.



எலுமிச்சை- தைராய்டு பிரச்னைகள்

எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.
எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது.

தைராய்டு பிரச்னைகள் வராமல் தடுக்க எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.



வெண்டைக்காய்- இரத்த அழுத்தம்

காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

வெண்டைக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் மிக அதிக அளவில் போலிக் அமிலமும் உள்ளது. வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் அது ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.



புடலங்காய்- தூக்கமின்மை

புடலங்காயில் விட்டமின்கள் A, B, C, மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின், நார்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது.

சிலருக்கு படுத்தவுடன் உறக்கம் வராது. அல்லது ஆழ்ந்த தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள். உணவில் புடலங்காய் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இத்தகைய உறக்கமின்மை பிரச்னை தீரும். .

சர்க்கரை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.



கோவக்காய்- உடல்பருமன்

கோவக்காய் தவிர அதன் இலைகள், பழங்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. கோவக்காய் இலையின் சாறு மார்பு சளியை கரைக்கும் தன்மை கொண்டது. இருமலை குறைக்கும். வயிற்று புண், மூட்டு வலியை குணப்படுத்தும்.

உடம்பில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவல்லது கோவைக்காய். கோவைக்காயில் இயற்கையாகவே கொழுப்பை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் உடல்பருமன் போன்ற பிரச்சனை நீங்கும்.



பீர்க்கங்காய்- சர்க்கரை வியாதி

பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாகற்காய்க்கு பதிலாக பீர்க்கங்காயை சாப்பிடலாம். பீர்க்கங்காய் இலையிலிருந்து சாறு எடுத்து அதனை சூடாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் அருந்தி வர சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.

UPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி

UPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி :
சென்னை மாநகர முன்னாள் மேயர், சைதை துரைசாமி நடத்தி வரும், மனித நேயம் அறக்கட்டளை சார்பில், இந்திய அளவில் முதல் முறையாக, அனைவரும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 'டிவி' வழியே, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இது குறித்து, சைதை துரைசாமி விடுத்துள்ள அறிக்கை: பொருளாதாரம் மற்றும் சமுதாய நிலையில், பின்தங்கிய மாணவர்களை, அரசு உயர் பதவிகளில், அதிக அளவில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 13 ஆண்டுகளாக, மனிதநேய இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை, யு.பி.எஸ்.சி., -- டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதிகள் தேர்வுகளில், 3,226 பேர்; வங்கி தேர்வு, ரயில்வே, காவல் துறை பணி, குரூப் - 4 தேர்வு உள்ளிட்ட, பல்வேறு பணிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெறறுள்ளனர்.

தற்போது, கிராமப்புற மாணவர்களிடமும், போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு

ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்கள், சென்னை வந்து தங்கி பயிற்சி பெற, குறைந்தபட்சம், 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. அப்படி செலவு செய்தாலும், அனைவராலும் முதல் முயற்சியில் வெற்றி பெற முடிவதில்லை.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவோர்

எண்ணிக்கை, 10 பேரை கூட தாண்டுவதில்லை.
எனினும், ஆண்டுதோறும் படிக்க விரும்புவோர் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைவருக்கும் இலவசமாக தங்குமிடம், உணவு, பயிற்சி, பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவது, மனிதநேய மையத்திற்கு, இயலாத காரியமாகி

விடுகிறது.

எனவே, அனைவரும் வீட்டில் இருந்தபடியே, தேர்வுக்கு தயாராகும் வகையில், இலவச பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2019 மார்ச் முதல், 'டிவி' வழியே, இலவசமாக போட்டித் தேர்வுக்கு, பயிற்சி அளிக்க உள்ளோம்.

மாணவர்கள், வேலையில் உள்ளவர்கள் என, அனைத்து தரப்பினரும், வீட்டிலிருந்தபடியே பயிற்சிக்கு தயாராகலாம். இவ்வாறு பயிற்சி பெறுவோருக்கு, மனிதநேய அறக்கட்டளை சார்பில், நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இதில் வெற்றி பெறுவோர், போட்டித் தேர்வுக்கு தயாராக, தங்குமிடம், பயிற்சி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

இது குறித்த முழு விபரங்களைப் பெற, மனிதநேய அறக்கட்டளையின், mntfreeias.com என்ற, இணையதளத்தை பார்வையிடவும். மேலும் விபரங்களுக்கு, 044 - 24330095 என்ற, எண்ணை தொடர்பு கொள்ளவும்.

'டிவி' வழியே நடத்தப்பட உள்ள, பயிற்சிகளை பெற இயலாத நிலையில், கிராமங்கள் அல்லது மாணவ- - மாணவியர் இருந்தால், அவர்களுக்கு உதவ விரும்பும், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு, உதவிகளைப் பெறலாம்.

இது தொடர்பாக, ஆலோசனை கூற விரும்புவோர், தங்கள் ஆலோசனைகளை, manidhanaeyamgmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு, அவர்
கூறியுள்ளார்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது :பெற்றோர் ஒத்துழைப்பு இல்லாததால் குழந்தைகளின் கல்வி குறைகிறது':சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

இன்று ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருந்தால், குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக வரமுடியும்,'' என, அமைச்சர் கருப்பணன் பேசினார்.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில், நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசியதாவது: அரசு பள்ளிகளில், ஒரே ஒரு குறை உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இன்று ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருந்தால், குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக வரமுடியும். குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும், பெற்றோர் சரி என ஏற்றுக்கொள்கின்றனர். இதுதான் அவர்கள் செய்யும் முதல் தவறாக உள்ளது. பெற்றோர் குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கின்றனர். தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், என்ன நடவடிக்கை வேண்டுமானலும் எடுங்கள் என மாதம் ஒரு முறை ஆசிரியரை, பெற்றோர் சந்தித்து முறையிட வேண்டும். அப்படி செய்தால், ஆசிரியர்கள், குழந்தைகளை நன்றாக பயில செய்வர். வேண்டும் என்றே ஆசிரியர்கள் எவரும் குழந்தைகளை கண்டிப்பதில்லை.பெற்றோர் ஒத்துழைப்பு குறைவதால் தான், குழந்தைகளின் படிப்பு குறைகிறது. இவ்வாறு அவர் பேசினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கிய, கல்வித்துறையினர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலத்தில், முதல், 10 இடங்களுக்குள் வேலூர் மாவட்டம் இடம்பெற, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒரு சில பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, காலாண்டு தேர்வு, மாதாந்திர தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அரக்கோணம் அடுத்த, திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின், தமிழ் விடைத்தாள், இரண்டு விதமான பேனாக்களால் எழுதப்பட்டிருந்தன. மேலும், 20 மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றதால், வேறு மாணவர்களைக் கொண்டு, சரியான விடை எழுத வைத்து, கூடுதல் மதிப்பெண் வழங்கியது, தெரியவந்தது. இதேபோல், மாவட்டம் முழுவதும், 120 அரசு பள்ளிகளில் நடந்துள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை அழைத்து, இதுபோல செய்யமாட்டோம் என, எழுத்து மூலமாக உறுதி பெற்று, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Flash News : இடைநிலை ஆசிரியர்கள் தனியாக மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு


FLASH NEWS: கனமழை - நாளை 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்

                                        Image result for gaja
நாகை மாவட்டம்  பள்ளி கல்லூரி  விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி  விடுமுறை
மயிலாடுதுறை கோட்டத்தில் நிலைமைகேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம்
தஞ்சை  மாவட்டம்  (பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு) பள்ளி கல்லூரி  விடுமுறை
திருவாரூர் மாவட்டம்  பள்ளி   விடுமுறை - ஆசிரியர்கள் கண்டிப்பாக  பள்ளிக்கு வரவேண்டும் - ஆட்சியர் 
திண்டுக்கல்  - கொடைக்கானல் வட்டத்தில்  பள்ளி   விடுமுறை
புதுச்சேரி மாவட்டம்  பள்ளி   விடுமுறை