பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.
கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு :
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.
பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.