யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/4/17

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா? அறிய வேண்டிய தகவல்.

வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5
ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதேசில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தவிதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே இதற்குக் காரணம்.

அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும். வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது 30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.

உதாரணத்துக்கு...
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது. அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.

இந்தஅடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதோடு, மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.

இதுதவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

குறைந்த பண இருப்பு
பெருநகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம். இது குறித்து மேலே விரிவாகவே பார்த்துவிட்டோம்

குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?

எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

மெட்ரோ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஊரக, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.

டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதேபோல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.

இந்தகட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 6 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு

பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை முறைப்படி இணைந்தன. இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.


இந்தவங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட மூன்றாம் பருவத் தேர்வு -தொகுத்தறித் தேர்வு கால அட்டவணை -வகுப்பு - 1 முதல் 8 வரை

No automatic alt text available.

TNTET (Paper 2) - சமூக அறிவியல் பாடத்தில் வெற்றி பெற.... (வழிகாட்டுதல் கட்டுரை Mr. பாபு)

பாடவாரியான வழிகாட்டுதல் தொகுப்பு

பாடம் - சமூக  அறிவியல்

பகுப்புகள்:

வரலாறு       - 25 to 27
குடிமையியல்  - 15 to 17
பொருளியியல் - 15 to 17
புவியியல்      - 5 to 7

🔹 வரலாறு பாட பகுதியை கூடுதலாக வகுப்பு 11 மற்றும் 12 லும் படிக்கவும்.

🔸 தெளிவுற படித்தால் இப்பாடத்தில் 55 மதிப்பெண் மீறிய மதிப்பெண் பெற்று தரும்.

வாழ்த்துகளுடன் தேன்கூடு

கட்டுரை ஆக்கம்: பாபு, பூங்குளம்.

Thanks to 🙏

Mr. பாபு,
பட்டதாரி ஆசிரியர்,
பூங்குளம்,

வேலூர் மாவட்டம்.

SBI - NEW SERVICE CHARGES EFFECT FROM 01.04.2017

ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனை 2019 வரை நீட்டிக்க நடவடிக்கை, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

SSLC EXAM MARCH 2017- TAMIL & ENGLISH OFFICIAL ANSWER KEY

இந்திய அளவில் டாப் 10 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு:The Hindu

இந்திய அளவில், தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் பிரத்யேக மதிப்பீட்டு அளவுகோல் வரையறுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


இவற்றில் முதல் 10 தலைசிறந்த கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவ கல்லூரி ஆகியன இடம்பெற்றுள்ளன.

பட்டியல் பின்வருமாறு:

டாப்10 கல்லூரிகள்:

1. மிராண்டா ஹவுஸ் - புதுடெல்லி

2. லயோலா கல்லூரி- சென்னை, தமிழ்நாடு

3. ஸ்ரீநாம் வத்தகக் கல்லூரி- புதுடெல்லி

4. பிஷப் ஹீபர் கல்லூரி- திருச்சி, தமிழ்நாடு

5. ஆத்மா ராம் சனாதன தர்ம கல்லூரி - புதுடெல்லி

6. புனித சேவியர் கல்லூரி - கொல்கத்தா (மேற்குவங்கம்)

7. லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரி- புதுடெல்லி

8. தயாள் சிங் கல்லூரி- புது டெல்லி

9. தீன தயாள் உபாத்யாய கல்லூரி - புதுடெல்லி

10. மகளிர் கிறிஸ்துவ கல்லூரி - சென்னை, தமிழ்நாடு

டாப்10 பல்கலைக்கழகங்கள்:

1. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் - பெங்களூரு

2. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - புதுடெல்லி

3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

4. ஜவஹர்லால் நேரு சென் டர் ஃபார் அட்வான்ஸ்ட் சைன்டிபிக் ரிசேர்ச்

5. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

6. அண்ணா பல்கலைக்கழகம்

7. ஐதராபாத் பல்கலைக்கழகம்

8. டெல்லி பல்கலைக்கழகம்

9. அமிர்த விஷ்வ வித்யாபீடம்

10. சாவித்ரிபா புலே பல்கலைக்கழகம் - புனே

டாப்10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்

1. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்

2 ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - பெங்களூரு

3. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கொல்கத்தா

4. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - லக்னோ

5. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கோழிக்கோடு

6. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - டெல்லி

7. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - காரக்பூர்

8. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - ரூர்கீ

9. சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் - ஜான்ஷெட்பூர்

10. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - இந்தூர்

டாப்10 பொறியியல் கல்லூரிகள்

1. ஐஐடி மெட்ராஸ்

2. ஐஐடி மும்பை

3. ஐஐடி காரக்பூர்

4. ஐஐடி புதுடெல்லி

5. ஐஐடி கான்பூர்

6. ஐஐடி ரூர்கீ

7. ஐஐடி குவாஹட்டி

8. அண்ணா பல்கலைக்கழகம்

9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

10. ஐஐடி ஐதராபாத்

ஒட்டுமொத்த அளவில் டாப் 10 கல்வி நிறுவனங்கள்:

1. ஐஐஎஸ்சி - பெங்களூரு

2. ஐஐடி - சென்னை

3. ஐஐடி - மும்பை

4. ஐஐடி - காரக்பூர்

5. ஐஐடி - டெல்லி

6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: புதுடெல்லி

7. ஐஐடி - கான்பூர்

8. ஐஐடி - குவாஹட்டி

9. ஐஐடி - ரூர்கீ

10. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவச
மற்றும் கட்டயாக கல்வி உரிமை சட்டத்தில் ஒவ்வொரு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும்.
அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 8–ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கல்வி கட்டணம்

இதற்கான கல்வி கட்டணம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? என்று கேட்டு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அதன்படி 2015–16–ம் ஆண்டுக்கு தமிழக பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி கட்டணம் ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிதியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையும், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடக்க பள்ளிகள் இயக்குனரகமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம் வழங்க உள்ளது. மாவட்டம் வாரியாக பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியை வழங்கும்.

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுபேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள தனியார் (சியோன்) பள்ளியில், 2-ஆம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி ஸ்ருதி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 25 இல் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் அடிபட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதையடுத்து, பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக நீதிபதிகளின் உத்தரவின்பேரில், தமிழக அரசு சிறப்பு விதிமுறைகளை வகுத்தது. அதில், ஒவ்வொரு பேருந்திலும் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதோ, அதற்கு அதிகமாக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றக் கூடாது. பேருந்திலும் முதல் படியின் உயரம் (தரையில் இருந்து) 250 மி.மீ.க்கு குறையாமலும் 300 மி.மீ.க்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓட்டுநர் பகுதியை தனியாக பிரிக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்க பட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று பள்ளிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய சிறப்பு விதிமுறைகளை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தமனு பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ், அரசு பேருந்துகளில் காலை மாலை நேரங்களில் பயணிப்போரில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மாணவர்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த ஒரு நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை ஆனால் தனியார் பள்ளிகள் முறையாக பராமரிப்பு செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதேசமயம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்களை சிறப்பு அதிகாரி முன் தனியார் பள்ளிகள் ஆய்வுக்கு கொண்டு செல்லவேண்டுமென்ற நிபந்தனையை 6 மாதத்துக்கொருமுறை என மாற்றி அமைக்கப்படுகிறது.

ஆனால் தனியார் பள்ளிகள் பேருந்துகள் விதிகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த மற்ற நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை அளிக்கப்போகும் எஸ்பிஐ!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச
வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டுமென்ற புதிய விதி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது, எஸ்பிஐ துணை வங்கிகளுக்கு இந்த விதி, ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியுடன் இணைப்பதற்கான செயல்முறைகளில் ஐந்து துணை வங்கிகள் உள்ளன. எஸ்பிஐ என்னும் பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகள் இணைந்து செயல்படத் துவங்க உள்ளன.

இந்தத் துணை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ விதிக்கும் மினிமம் பேலன்ஸ் தொகை வைப்பு, தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதத்தொகை எனப் புதிய விதிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இந்தஅறிவிப்பின் படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள், மெட்ரோ பகுதியில் 5000 ரூபாய், புறநகர்ப் பகுதிகளில் 3000 ரூபாய், நகர்ப்புறங்களில் 2000 ரூபாய், கிராமப் பகுதிகளில் 1000 ரூபாய் என, குறைந்த வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TPF TO GPF Account Slip Soon will publish

ஆசிரியர் சேமநலநிதி 2014 -2015 வருட கணக்கீட்டுத்தாள்
இந்தவாரத்தில் வெளியாக வாய்ப்பு. மாநிலக் கணக்காயர் அலுவலகத்தில்( AG'S) இருந்து  திருத்தம் செய்யப்பட வேண்டிய
மாநகராட்சி /நகராட்சி ஆசிரியர்கள் கணக்கீட்டுத்தாள் விபரங்கள் சரிசெய்யப்பட்டு NIC இல் (National information centre) விபரங்கள் சனிக்கிழமை (01/04/2017) 
அன்று ஒப்படைக்கப் பட்டதால் உடனடியாக வெளியாக வாய்ப்பு.

தங்களின் சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து 2014 -15 கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.

200 ரூபாய் நோட்டு வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்