- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
11/11/18
FLASH NEWS : NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் சிக்கல் பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா?
எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோறும் டிசம்பர் மாதம் NMMS EXAM எனும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் தேர்வு நடைபெறுகிறது.
சமீபத்தில் 2017-18 ல் நடைபெற்ற NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை பள்ளி அளவில் பதிவேற்றம் செய்வதற்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது ஆனால் 31க்குள் இணையதளம் சரிவர இயங்காததாலும், பல்வேறு மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றினாலும் அதில் submit என்ற ஆப்ஷன் வராததாலும் அவர்களுடைய விண்ணப்பமானது SAVE & DRAFT நிலையில் தங்கி நிற்கிறது. சில விண்ணப்பங்களில் கல்வித் தொகை பெறுவதற்கான scheme option open ஆகவில்லை.மேற்கண்ட காரணங்களால் மாணவர்களுடைய விண்ணப்பமானது மாவட்ட அளவில் FORWARD செய்யமுடியாமல் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆனது பூர்த்தி செய்ய முடியாமல் கல்வி உதவித்தொகை பெறுவது சிக்கலாகி உள்ளது.
பள்ளி அளவில் மாணவர்களின் தகவல் உள்ளீடு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31 முடிந்துவிட்டதால் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் தகவல்களை உள்ளீடு செய்வது எவ்வாறு என்று திணறி வருகிறார்கள்.
ஆனால் இதைப் பற்றி தகவல்களை பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களில் எடுத்துக்கூறியும் எந்த ஒரு தெளிவான தகவலும் கிடைக்கவில்லை என்று தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.
NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் ஃபார்வர்டு செய்வதற்கு இந்த மாதம் 15ம் தேதி இறுதி நாள் என்பதால் அவர்களுடைய ஊக்கத்தொகை கிடைக்குமா??? இதனை பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா???
மேற்கண்ட பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் தீர்த்து மாணவர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிகள் அளவில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஜாக்டோ-ஜியோவில் இருந்து பிரிந்த சங்கத்தினர் மீண்டும் இணைந்தனர்: 15ம் தேதி முறையான அறிவிப்பு :
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனித் தனியாக ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வந்தனர். அரசு தரப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் நீடித்ததால், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் என 22க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஒன்றாக இணைந்து மீண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை புதுப்பித்தனர். அதன் மூலம் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்து களத்தில் இறங்கினர். நகர, ஒன்றிய, வட்ட, மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் போராட்ட களத்தை மாற்றி அமைத்தனர். அதன் ஒரு அம்சம்தான், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம். கடந்த ஆண்டில் தீவிரம் அடைந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு கலக்கம் அடைந்தது.
வேலை நிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த பெரும் முயற்சி எடுத்த அரசு, தனது வியூகத்தை வேறு திசையில் திருப்பியது. ஒன்று பேச்சுவார்த்தை, மற்றொன்று தனியார் மூலம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தது. ஈரோட்டில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அத்துடன் ஜாக்டோ-ஜியோவிலும் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜாக்டோ-ஜியோவில் உறுதியாக நின்றவர்கள் ஒன்று திரண்டு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். அதன் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜாக்டோ-ஜியோ பிளவு காரணமாக போராட்டம் கலகலத்துவிடும் என்று எதிர்பார்த்த அரசுக்கு இந்த ஆண்டு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்மட்டக் குழுவில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மீண்டும் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.
பிரிந்து சென்று சங்கங்கள் தனியாகவும், ஜாக்டோ-ஜியோ தனியாகவும் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயிற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் புதிய சம்பள உயர்வை அரசு அறிவித்தது. அதில் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதால் சங்கங்கள் திகைத்து நின்றன. இந்நிலையில்தான் மீண்டும் அனைத்து சங்கத்தினரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற கருத்து உருவானது. இதையடுத்து, ஒன்றாக இணைவது குறித்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 9ம் தேதி பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னை வேப்பேரியில் ஜாக்டோ-ஜியோ மற்றும் பிரிந்து சென்ற சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் சுப்ரமணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ரெங்கராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சேகர், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வின்சென்ட், அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் செல்வராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மகேந்திரன், தொழில் கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேரு ஆகியோர் மற்றும் ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்று காலை நடந்த பேச்சுவார்த்தையில், பிரிந்து சென்ற மேற்கண்ட சங்கங்கள் அனைத்தும் ஜாக்டோ-ஜியோவில் இணைந்ததாக அறிவித்தனர்.
ஒன்றாக இணைந்தது மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து 15ம் தேதி முறையாக அறிவிப்பதாக தெரிவித்தனர். தற்போது இணைந்தவர்களும் ஜாக்டோ-ஜியோவில் ஒருங்கிணைப்பாளர்களாக சேர்க்கப்பட்டனர். அதன்படி தற்போது 20 ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதுதவிர இன்னும் ஒரு சில சங்கங்களை சேர்ப்பது குறித்து 15ம் தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

தகவல் அறியும் சட்டத்தில் 10, பிளஸ்2 விடைத்தாள் நகல் பெற பக்கத்துக்கு 2 கட்டணம் :
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடக்கிறது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளின்படி மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அல்லது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய மாணவ, மாணவியர் பட்டியல் வெளியிடப்படும். தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட தேதிகளில் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுவார்கள். அதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறையில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் கூடுதலாக இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் விடைத்தாள் நகல் பெறுவதற்காக சிபிஎஸ்இ வைத்துள்ள நடைமுறைகள் தனியாக உள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க விரும்புவோர் பக்கத்துக்கு ₹2, விண்ணப்ப கட்டணம் ₹10 செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, இரண்டு நடைமுறைகளுக்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதி மன்றம் தெரிவித்துள்ளது

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி எப்போது?
ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு, அடுத்தகட்டமாக அரசின் நடவடிக்கை இல்லாததால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள், குடும்பச்சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க, நடமாடும் ஆலோசனை மையத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.
அதுபோல, ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது, கற்பித்தல் மற்றும் பள்ளிச்சூழலில் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளுக்கு, ஆலோசனை வழங்க வேண்டுமென, ஆசிரியர் சங்கங் களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடப்பாண்டில், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான பயிற்சி வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப் பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டு வரை அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டதால், பயிற்சி வழங்குவதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதற்கான தீர்வாக இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும் என, எதிர்பார்த்தோம். அறிவிப்போடு, அடுத்தகட்டமாக, பயிற்சி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால், ஆசிரியர்களும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். பயிற்சி வழங்கும் நடவடிக்கை களை விரைவு படுத்தினால், ஆசிரியர்களுக்கு மாணவர்களை தேர்வுகளுக்கு வழிநடத்தவும், மன அழுத்தம் இல்லாமல் பணிசெய்யவும் பயனுள்ளதாக இருக்கும்,''என்றார்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் !
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
குற்றச்சாட்டை சுட்டிக் காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் கூறிய போது தேர்வர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக கருதினார்கள் ஆனால் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகள் குறித்து செய்தி ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கானதேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாறித்து வெளியிட்ட உத்தேச பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதுவும் குறிப்பாக ஓவிய ஆசிரியர்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் free hand out line model drawing highergreade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்று முறைகேடாக தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ்வழி சான்றிதழ் பெற்று தகுதி யற்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு 1325 பணி இடங்கள் முழுமையாக பட்டியல் வெளியீடு செய்யாமல் தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் இருக்கும் நிலையில் RESERVED என்று நிரப்பாமல் நிறத்தியுள்ளது.போன்ற பல்வேறு குளறுபடி நிலவிவரும் நிலையில் இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒன்றுமே தெரியாதவர் போல் பேட்டி அளித்துள்ளார் என்பதை நினைக்கும் போது தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியமே தமிழ் வழி சான்றிதழில் குழப்பத்தில் உள்ளதை ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்து பதிலளிக்க தேர்வு வாரியம் கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லும்போது ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் இவ்வாறு எந்த குளறுபடியும் இல்லைஎன்று கூறுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று நிருபிக்கும் பட்சத்தில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் கருத்தாகும்.ஆகவே சிரப்பாசிரியர் நியமனத்தில் சற்று அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்து பார்த்து பள்ளி கல்வி அமைச்சர் என்ற முறையில் ஆரம்பம் முதல் இன்று வரையிலும் உத்தேச பட்டியல் வெளியீடு செய்து வெளியிட்டது வரை ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் என்னென்ன விதிமுறைகள் சொல்லப்படுகிறது.
எப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தன்டிக்கப்பட வேண்டிய வர்களே.என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சிரப்பாசிரியர் நியமனம் பொருத்தவரை சரியான தீர்வு எடுப்பார் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு செய்தி ஆகவே ஏற்கனவே தாங்கள் கூறிய போது ஆய்வக உதவியாளர் பணி போல் சற்று தாமதமாக ஆனாலும் யாரும் பாதிக்கப்படாமல் முறையாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளதை நினைவுகூர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்ததேர்வர் களின் கருத்தாகும்.தாங்கள் கூறியுள்ளது முன்னால் ராணுவத்தினர் விதவைகள் இட ஒதுக்கீடு கோருவர்கள் போன்றவைகள் மிகவும் அரிதாகவே உள்ளது அது முக்கிய பிரச்சினையாக ஒன்று இரண்டு இருந்தாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் சுட்டிக் காட்டப்படாத ஓவிய ஆசிரியர் பணிக்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக இரண்டு மாத காலம் வரை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது இது வரையில் எந்தவொரு பதிலும் இல்லை.பள்ளிகல்வி அமைச்சராக இருக்கும் தங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலை இதுவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.இது சரியல்ல தகுந்தமுறையில் தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
மேலும் ஒன்றுமே தவறு இல்லை இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவளர் ஒருவரது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளது.இதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். இந்த பதிவு தகுதிவாய்ந்த தேர்வர்கள் இணைந்து பதிவு செய்து வெளியிட்டது.உரிய பதில் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த வர்களின் பணிவான வேண்டுகோள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)