யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/10/15

2004 முதல் 2006 வரை தொகுப்புதியத்தில் பணியமர்த்தபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு!!

01.06.2006-யில் பணிவரன்முறைபடுத்தப்பட்டு காலமுறை ஊதியம்பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் அரசுக்கு எவ்வளவு செலவினத்தொகை ஏற்படும் என உத்தேச மதிப்பை உடனடியாக அளிக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை உயரதிகாரி தகவல்.

தமிழக அரசின் சதுரங்க வேட்டை ஆரம்பம்

பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இதில் ஜாக்டோவை உடைக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கன்றன.நாளை எத்தனை விக்கெட்டுக்கள் விழப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க எதிர்ப்பு!

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கும்பகோணம் பள்ளியில், 94 குழந்தைகள் பலியான விபத்துக்கு பின், போதிய இடவசதி இல்லாமல் இயங்கும் தனியார்
பள்ளிகளுக்கு, 11 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கவில்லை.
இப்போது இடவசதியற்ற, 746 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு, கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலரும், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனருமான, பாடம் நாராயணன், பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதாவுக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த, 2004ல், நீதிபதி சிட்டிபாபு கமிட்டி அறிக்கைப்படி, விதிமுறைகளைப் பின்பற்றாத, இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, உள்கட்டமைப்பை சரிசெய்ய, நான்கு ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டது.
பின், 2006ல் கும்பகோணம் பள்ளி விபத்து குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிட்டி அளித்த பரிந்துரைகளையும் அரசு ஏற்றது. அதில், இடவசதி இல்லாத, விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக்கூடாது என, கூறப்பட்டு இருந்தது.அதை ஏற்றுக்கொண்ட அரசு, உள்கட்டமைப்பு விதிமுறைகளை வகுத்தது; இடவசதியற்ற பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இப்படி, உள்கட்டமைப்பை உயர்த்த, 11 ஆண்டுகளாக அவகாசம் அளித்து விட்டு, இப்போது பாதுகாப்பு விதிமுறைகளையும், இரண்டு நீதிபதிகளின் அறிக்கையையும் மீறி, இடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது சட்ட விரோதம். இந்த அரசு உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.எட். சேர்க்கை: அக்.14 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.கலந்தாய்வு முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடத்தப்பட்டது. இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியது:
கலந்தாய்வு முடிவில் 1,000 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. மீதமுள்ள 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1,600 பேர் வரை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.குறைந்தது சேர்க்கை: கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, நிகழாண்டில் பி.எட். மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக 300 முதல் 400 இடங்கள் வரை மட்டுமே காலியாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதே அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகளிலும் சேர்க்கை குறைந்திருப்பதற்கான முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்

குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அரசு பள்ளிகளில், காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறையும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும்; கடந்த ஆண்டை விட அதிகமாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்'கை எட்டவும், பள்ளி கல்வித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய புத்தகம், அதிக மதிப்பெண்கள் தரும் கேள்வி - பதில்கள் அடங்கிய பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாலை நேர வகுப்பு மற்றும் விடுமுறை கால வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மூன்று மாதங்களில் நடத்திய பருவத்தேர்வு மற்றும் சமீபத்தில் முடிந்த காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஒப்பிட்டு, பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காண, ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும், பின்தங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் தரவும், பெற்றோரை அழைத்து கலந்தாய்வு நடத்தி, தங்கள் பிள்ளைகளுக்கு கூடுதல் பயிற்சி தரும்படி அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெ., வாக்குறுதியை நம்பி ஏமாந்தோம் ஆசிரியர் சங்கம் ஆதங்கம்

சிவகங்கை:“கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெ.,வின் வாக்குறுதியை நம்பி, ஆசிரியர் சமுதாயம் ஏமாற்றத்தை சந்தித்தோம்,” என சிவகங்கையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

2009ல் 6வது சம்பள குழுவில் மத்திய அரசுக்கு இணையாக சம்பள குழுவை தமிழக அரசு அறிவித்தது. குறிப்பாக இடைநிலை ஆசிரியருக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியருக்கும் குறைவான சம்பளத்தை தமிழக அரசு அறிவித்தது. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெ., “ஆசிரியர் சம்பள பாதிப்பை தீர்த்து வைப்பதாகவும், பங்களிப்பு பென்ஷன் திட்டம்
முற்றிலும் கைவிடப்படும்”, என்றார். இதை ஆசிரியர்கள் முழுமையாக நம்பினர்.

எங்கள் கோரிக்கையை முதல்வர் ஜெ., கண்டுகொள்ளவில்லை. ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேசவும் இல்லை. இவை உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்.,8ம் தேதி தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான சங்கங்களை சேர்ந்த 3 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளை மூடி வேலை நிறுத்தம் நடத்தப்படும். அன்று காலை 11 மணிக்கு அனைத்து கலெக்டர் அலுவலகம் முன் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் (STEM) எனப்படும் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது என்றும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிபிஎஸ்சி தேர்வு: இணையம் வழியே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்சி தேர்வு எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள், இணையம் வழியே விண்ணப்பங்களை செலுத்தலாம்.
 
இது குறித்து மத்திய மேல்நிலைக்கல்வி வாரியம்(சிபிஎஸ்சி)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிபிஎஸ்சி-இன் சார்பில் 2015-16-ஆம் ஆண்டுக்கான 10,12-ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு வருகிற 2016-ஆம் ஆண்டில் நடக்கவுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கவிரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளவிரும்பும் மாணவர்களும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மின்-பற்றுச்சீட்டு அல்லது வங்கிகேட்போலை மூலம் செலுத்தலாம். அபராதம் இல்லாமல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.15-ஆம் தேதிகடைசிநாளாகும்.
மேலும் விவரங்களுக்கு www.cbse.nic.in  என்ற இணையதளத்தை காணலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

"ஆசிரியர்களை மதிக்கும் பண்பை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்"

ஆசிரியர்களை மதிக்கும் பண்பினை, தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன். மயிலாடுதுறை வட்டம், சேத்தூர் கிராமத்தில், காமராஜர் அறக்கட்டளை தொடக்கம் மற்றும் திருவள்ளுவர் நூலகக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்குரைஞர் முருக. மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற நீதிபதி டி.மதிவாணன் மேலும் பேசியது:

கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளை தோற்றுவித்து, மதிய உணவையும் வழங்கியவர் கர்மவீரர் காமராஜர். மதிய உணவை சாப்பிட்டு கல்வியைக் கற்றவர்கள் தற்போது மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்கும் பண்பையும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுத் தர வேண்டும். 
 
அப்போதுதான், சிறந்த மாணவர் சமுதாயம் உருவாகும் என்றார் அவர். தொடர்ந்து, சேத்தூர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். நாகை மாவட்ட நீதிபதி கே. சிவக்குமார், வழக்குரைஞர் என்.கே. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர் ஜி. கண்ணதாசன் ஆகியோர் விழாவில் பேசினர். வழக்குரைஞர்கள் எம். நிர்மல்குமார், கே.ஆர். ரமேஷ்குமார், ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக, அறக்கட்டளையின் செயலர் க. நெடுஞ்செழியன் வரவேற்றார். நிறைவில் அறக்கட்டளையின் நிறுவனரும், வழக்குரைஞருமான ஆர். மெய்வர்ணன் நன்றி கூறினார்

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் 8-இல் அடையாள வேலைநிறுத்தம்:தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 8-இல் நடத்தவுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவேன். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வேன் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததையடுத்து 28 சங்கங்களை ஒருங்கிணைத்து ஜேக்டோ (தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) அமைப்பை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
தொடர்ச்சியாக, அக்டோபர் 8ஆம் தேதி அனைத்து சங்கங்கள் இணைந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.
இந்தப் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லையெனில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டை முற்றுகை, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட இறுதிக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.
கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் குடும்பத்தினரின் சுமார் 2 கோடி வாக்குகள் ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்றார் மீனாட்சிசுந்தரம்.

அனைவரும் தேர்ச்சி திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்

எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும்.”, என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் காரைக்குடியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியருக்கு இணையாக சம்பளம் வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் அக்.,8ம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்படும்.

24 சங்கங்களை சேர்ந்த 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். நோட்டீஸ் அளித்தும், போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை, அரசே தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க வைப்பது வேதனைக்கு உரியது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும். எஸ்.எஸ்.ஏ., இடைநிலை கல்வி திட்டம் மூலம் ஆசிரியருக்கு தொடர் பயிற்சி அளிக்கின்றனர். 
நிதியை செலவழிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இப்பயிற்சியால் பலன் இல்லை. இந்த நிதி மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தலாம். நபார்டு, எஸ்.எஸ்.ஏ., மூலம் கட்டப்பட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி கட்டடங்களுக்கு ஒதுக்கும் 
நிதி முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர் தேர்வு ரத்து

மத்திய அரசால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், பிரைமரி ஆசிரியர்கள் (பி.ஆர்.டி.), பிரைமரி ஆசிரியர்கள் (இசை) ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நேற்று எழுத்து தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த தேர்வின் கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது. கேள்வித்தாளை ரகசியமாக படம் பிடித்து, ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்டதாக, அரியானா மாநிலம் ரெவாரி நகரில் 13 பேர் கொண்ட
கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து கேள்வித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று நடக்க இருந்த ஆசிரியர் தேர்வை கேந்திரிய வித்யாலயா ரத்து செய்தது.
இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பி.ஆர்.டி. தேர்வு கேள்வித்தாள் வெளியாகி விட்டதாக சனிக்கிழமை மாலை எங்களுக்கு தகவல் கிடைத்தது. அது உண்மையான கேள்வித்தாள் தானா என்று உடனடியாக சரிபார்க்க இயலாது என்று எங்கள் சார்பில் தேர்வை நடத்தும் அமைப்பு தெரிவித்தது. எனவே, தேர்வை ரத்து செய்து விட்டு, கேள்வித்தாளை சரிபார்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட இரு தேர்வுகளும், எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை.

வேலைநிறுத்தப் போராட்டம் - பணியாளர் சங்கம் - 02.09.2015 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது - போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்களின் அன்றைய தினம் ஊதிய வழங்க ஆட்சியர் உத்தரவு

நாளை மாலை 4 மணிக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோவிற்கு அவசர அழைப்பு

பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் (பொறுப்பு) திரு.செல்வராஜ் அவர்களும் அவசர பயணமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
 
 
அதேபோல் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.இரா. தாஸ் அவர்கள் மும்பையிலிருந்து அவசர பயணமாக நாளை சென்னைக்கு விரைகிறார். பள்ளிக் இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் நாளை மறுநாள் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.சபிதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.