யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/6/18

குரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப் 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான வயது உச்சவரம்பினை உயர்த்திடுமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதாக கூறினார்.

அதன் அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள வயது உச்சவரம்பினை போல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 1-A, 1-B பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்சி/எஸ்டி/எம்பிசி/பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35 வயதிலிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1-A பிரிவின் கீழ் வன பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1- B தேர்வு மூலம் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் பணியிடம் நிரப்பப்படுகிறது.

ஆசிரியர்களைப் பதறவைக்கும் அரசின் இரண்டு அரசாணைகள்!

நீ உன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை. அரசே தனியார் பள்ளிகளுக்குப் பணத்தைச் செலுத்தும்" என்று அரசு கூறுவது ஏற்புடையதா" என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம்.

அதனால், அரசுப் பள்ளிக்கு வர வேண்டியவர்களைத் தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கணும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம். இப்படியும் ஓர் ஆணை.

தனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில் விடுமுறை நாள்களில் மாணவர்களைச் சேர்க்க வீடுவீடாகச் சென்று அரசு பள்ளியில் சேர்க்க சொல்லி சேர்க்கை பேரணிகள், பிரசாரங்கள் செய்வதெல்லாம் வீணா?

தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாகப் பணியாற்றினாலும் கற்பித்தாலும், கற்றல் கற்பித்தல் சண்முகநாதன்பணிகளுக்குச் சொந்த பணத்தைப் போட்டு சில வசதிகளை அரசை எதிர்பாராமல் தாமே உருவாக்கிக் கொடுத்தாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகத்தால் பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில், "நீ உன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை. அரசே தனியார் பள்ளிகளுக்கு பணத்தைச் செலுத்தும்" என்று கூறுவது ஏற்புடையதா, எங்கேயாவது இப்படி நடக்குமா?

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகளால், பள்ளிக் கல்வித்துறை அதிரடி காட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், அவற்றில் முக்கிய அறிவிப்புகள் பலவும் அறிவிப்பு வடிவிலேயே இருப்பதுதான் கவலை அளிக்கிறது. Fees alligation against private schools

தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்  என்று ஓர் ஆணை. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் அதற்கான காரணம் கேட்கப்படும் என்று ஓர் ஆணை. இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர். தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தை அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்குப் பயன்படுத்துமேயானால் அரசுப் பள்ளி நலன் பெறுமே.

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசுப் பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தர இயலாதா. பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி. அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது. நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள். கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள்.

ஆனால், தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது? அரசுப் பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா, வாசித்தல் திறன் ஆய்வு உண்டா, அரசுப் பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்கு உண்டா, ABL SALM ALM முறைகள் உண்டா, இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசுப் பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு?

3-6-2018 நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் அரசு கேபிள் அனலாக் ஒளிபரப்பில் சன் குழும சானல்கள் எதுதையும் (25சேனல்கள்) ஒளிபரப்பக்கூடாதென அரசு கேபிள் மேலாண்மை இயக்குனர் திரு.குமரகுருபரன் IAS அவர்கள் அறிவிப்பு


முதல் நாளே அரசு பள்ளி மாணவர்களுக்கு..! தமிழக அரசு தந்த இன்ப அதிர்ச்சி

கடந்த 40 நாட்களாக கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடிய தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் பள்ளி திறந்ததால் உற்சாகத்துடன் பள்ளி சென்றனர். மேலும் இந்த வருடம் முதல் 9 ,10 ,11 ,12 மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்துள்ளதால் மாணவர்கள் புதிய சீருடையில் வந்தனர்.

இந்நிலையில், இலவச பஸ் பாஸ் இல்லாத பள்ளி மாணவர்களை அரசு பேருந்தில் பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை பலதரப்பினரும் முன் வைத்தனர். இதனையடுத்து, தமிழக பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தாலே போதும், பஸ் பாஸ் இருக்க வேண்டிய கட்டாயமில்லை, அவர்கள் பேருந்தில் பயணம் செய்யலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
முன்னதாக, தமிழக பள்ளி கல்வி முறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதில் முக்கியமாக +1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவந்ததை சொல்லலாம். இந்நிலையில், +1 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து புதிய பாடத்திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
மற்ற வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்ட நிலையில், +1 வகுப்பு பட புத்தகங்கள் மட்டும் இன்னும் முழுமையாக அச்சிடப்படவில்லை, இதனால் புத்தகமே இல்லாமல் அவ்வகுப்பு மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், தமிழக பள்ளி கல்வித்துறையில் இந்த கல்வியாண்டில் செய்யப்பட்ட மாற்றங்கள்,
* 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் மொழி பாடத்தேர்வு முறையில் இரண்டு தாள்களாக உள்ளதை, ஒரே தேர்வாக நடத்தப்படும்.
* தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்டவிதிகள் கொண்டுவந்து உரிய நடவடிக்கை. எடுக்கப்படும்.
* பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170 லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
* அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வருகைப் பதிவுக்கு இனி பயோமெட்ரிக் முறைபடி வருகை பதிவு செய்யப்படும்.
என பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது

ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டத்திற்கு முன்னுரிமையில் மாறுதல்: பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு!

அலுவலர்கள் பணியிடங்கள் கல்வித்துறை உத்தரவுக்கு காத்திருப்பு நிர்வாக மாற்றத்தில் குழப்பம்

தமிழகத்தில் சீரமைக்கப்பட்ட கல்வித்துறை நிர்வாகம் இன்றுமுதல் (ஜூன் 1) செயல்படவுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கல்வி அலுவலக பணியிடங்களுக்கான உத்தரவு வெளியாகாததால் குழப்பம் 
ஏற்பட்டுள்ளது.தொடக்க, மெட்ரிக் இயக்குனரகங்களுக்கு கீழ் இயங்கிய பள்ளிகள், அலுவலகங்கள் கல்வி இயக்குனரின் கீழ் செயல்படும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டது. அனைத்து பள்ளிகளும் முதன்மை கல்வி (சி.இ.ஓ.,) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) கட்டுப்பாட்டில் வருகின்றன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டு டி.இ.ஓ.,க்களாக மாற்றம் செய்யப்பட்டன.இந்நிலையில் சி.இ.ஓ., டி.இ.ஓ., மற்றும் பிரிக்கப்பட்ட கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. ஆனால் அதற்கான உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுவலக பணியிடங்கள் நிர்ணயத்திற்கு உத்தரவு வராததால், முழு அளவில் சீரமைக்கப்பட்ட நிர்வாகம் இன்று முதல் செயல்படுவதில் சிக்கல் நீடிக்கும். மெட்ரிக், தொடக்க கல்வி அலுவலகங்களில் ஏற்கனவே பணியில் இருந்த கண்காணிப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர், டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான பணியிடம், தற்போது இவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் இருந்தும் பணியாற்ற முடியாத மனவேதனையில் உள்ளனர், என்றார்.

40 தலைமை ஆசிரியர் ஒரே நாளில் ஓய்வு

தர்மபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 40 பேர், நேற்று ஓய்வு பெற்றனர்.

உதவி தலைமை ஆசிரியர், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக செயல்பட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

*தமிழகம் முழுவதும், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில், 100 மேல்நிலை, 112 உயர்நிலை, 837 நடுநிலை, 325 தொடக்கப் பள்ளிகள் உள்ளன

*இவற்றில், 19 மேல்நிலைப் பள்ளி, நான்கு உயர்நிலைப் பள்ளி, 17 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம், 40 பேர், நேற்று ஓய்வு பெற்றனர்.இதையடுத்து, அந்தந்த பள்ளிகளில், உதவி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

*தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பதவி உயர்வுக்கான பட்டியலில், முதல் இடத்தில் உள்ள ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக செயல்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் நாளையுடன் முடியுது அவகாசம்

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு, நாளையுடன் முடிகிறது. இதற்கு மேல் அவகாசம் இல்லை என்பதால், விரைந்து பதிவு செய்ய, மாணவர்கள் 
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக அரசு நடத்தும், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிவதாக அறிவிக்கப்பட்டது. துாத்துக்குடி கலவரத்தால், இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், தென் மாவட்ட மாணவர்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கவுன்சிலிங் பதிவுக்கான அவகாசம், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நேற்று வரை, 1.39 லட்சம் பேர் பதிவு செய்துஉள்ளனர். நாளை நள்ளிரவு, 11:59 மணியுடன், ஆன்லைன் பதிவு முடிய உள்ளது. எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள் விரைந்து பதிவை முடித்து கொள்ளும்படி, அண்ணா பல்கலைஅறிவுறுத்தியுள்ளது

பகுதி நேர பி.இ., நாளை கலந்தாய்வு

பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நாளை நடக்கிறது.மாநிலத்தில், ஒன்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கு, 
1,465 இடங்கள் உள்ளன. இக்கலந்தாய்வுக்கு, 725 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பங்கேற்கும் அனைவருக்கும், இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.நாளை காலை, 7:00 மணியளவில், ஜவுளி மற்றும் சிவில் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு துவங்கவுள்ளது.கலந்தாய்வு செயலரான, கோவை, சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் செல்லதுரை கூறியதாவது:பகுதி நேர கலந்தாய்வு, ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும். தகுதியுடைய, 725 பேர் பங்கேற்க உள்ளனர்.காலை, 7:00 மணியளவில், ஜவுளி, சிவில் படிப்புகளுக்கும், 9:30 மணிக்கு மெக்கானிக்கல் பிரிவுக்கும், மதியம், 2:00 மணியளவில், இ.இ.இ., --- இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடக்கும். தரவரிசை பட்டியல் படி, குறிப்பிட்ட சமயத்தில், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

5 ஆண்டு சட்டப்படிப்பு: இன்று முதல் விண்ணப்பம்

ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது.

தமிழ்நாடு, அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில், 11 சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பில் சேருவதற்கான, விண்ணப்ப பதிவு, மே, 28ல் துவங்கியது.இந்நிலையில், ஐந்தாண்டு ஹானர்ஸ் அல்லாத சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது. இன்று முதல், 29ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தரலாம்.

இந்த ஆண்டு முதல், ஆன்லைனிலும் சட்டப் படிப்பு விண்ணப்ப பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் விருப்பம் இல்லாதவர்கள், சட்ட கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தரலாம் என, அம்பேத்கர் சட்ட பல்கலை அறிவித்து உள்ளது.