யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/16

அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய தகவல் டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட  விவரம்
3)பணி வரன்முறை
4)தகுதிகாண் பருவம்
5)அனைத்து கல்வி விவரங்கள்
6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை
7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்
8)FBF
9)SPF
10)GPF/CPS
11)பணிக்காலம் சரிபார்ப்பு
12)உயர் கல்வி பயில முன் அனுமதி
13)பதவி உயர்வு சார்பான பதிவுகள்
14)பணியிட மாறுதல் சார்பான விவரம்
15)ஊதிய நிர்ணயம் மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் பற்றிய விவரம்
16)ஊக்க ஊதியம் பெற்றதன் விவரம்
17)தேர்வு நிலை விவரம்
18)சிறப்பு நிலை விவரம்
19)சரண் விடுப்பு விவரம்
20)ஈட்டா விடுப்பு விவரம்
21)மருத்துவ விடுப்பு விவரம்
22)மகப்பேறு விடுப்பு விவரம்
23)கருச்சிதைவு விடுப்பு விவரம்
24)ஈட்டிய விடுப்பு இருப்பு விவரம்
25)ஈட்டா விடுப்பு இருப்பு விவரம்

26)அசாதாரணவிடுப்பு விவரம்

27)குடும்ப விவரங்கள்

28)SPF, FBF,GPF, DCRG, போன்றவற்றிற்கு வாரிசு நியமிக்கப்பட்ட விவரம்.

29)பதவி உயர்வு பெற்ற விவரம் .

30)பதவி உயர்வில் பணிவரன் முறை செய்யப்பட்ட விவரம்.

CCE - Worksheet - 4 Weeks Abstract Form (Excel Format)

ரயில்வே ஊழியர்களுக்கு முன் பணம்!

மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வரைஉள்ள 20 ரயில்வே நிலையங்களில் பணிபுரியும்1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்,
அதிகாரிகளுக்கு சம்பள பணத்தில் முன்பணமாக ரொக்கம் ரூ 10 ஆயிரம்ரூபாய், திருச்சி டிவிஷன் ரயில்வே உயர்அதிகாரிகள் உத்தரவுப்படி ரயில்வே அதிகாரிகள் காரில்போலீஸ் பாதுகாப்புடன் ரயில் நிலையங்களுக்கு வந்துரொக்க பணம் கொடுத்தனர். இதனால்ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரும்மகிழ்ச்சியில் உள்ளனர்

அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில்பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசுபள்ளியும் தேர்வாகவில்லை. மத்திய அரசின், தேசியகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய
அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள்அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும்இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது.

இதில், பல மாநிலங்களின், 209 படைப்புகள் இடம் பெற உள்ளன. தென் மாநிலங்களில், கர்நாடகாவில் ஒன்பது; கேரளாவில் ஒன்று; ஆந்திராவின் நான்கு அரசு பள்ளிகள், தேசிய போட்டியில் பங்கேற்கின்றன.


புதுச்சேரிசார்பில், மாகியில் உள்ள, ஜவஹர்லால் நேருஅரசு பள்ளி பங்கேற்கிறது. தமிழகத்தில், இரு தனியார் பள்ளிகள் மட்டுமேதேர்வாகியுள்ளன; அரசு பள்ளி எதுவும்தேர்வாகவில்லை. இது, அரசு பள்ளிமாணவர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி

 தமிழ்நாடுஇந்து சமய அறநிலையத்துறையில் தொகுதிசெயல் அலுவலர் நிலை 3 மற்றும்செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான2014 & 2015, 2015 & 16 மற்றும்2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர
அறிக்கைகளை தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இப்பதவிகளுக்குஇந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும்பூர்த்தி செய்யப்பட உள்ளன. செயல் அலுவலர், நிலை 3க்கு ஏதேனும் ஒருபட்டப்படிப்பில் தேர்ச்சியும், செயல் அலுவலர், நிலை4க்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சிஇரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க 24.12.2016 கடைசி நாள் ஆகும்.

செயல் அலுவலர், நிலை 3க்கான எழுத்துதேர்வு இரு தாள்களைக் கொண்டது. இவை 29.04.2017 அன்று காலை மற்றும்பிற்பகலில் நடைபெறுகிறது. செயல் அலுவலர், நிலை4க்கான இரு தாள்களைக் கொண்டது. இவை 30.4.2017 அன்று காலை மற்றும்பிற்பகலில் நடைபெறுகிறது.

இதற்கானதேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக 100 +50 = 150 ரூபாய் செலுத்தவேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்தவிண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று, இரண்டு முறைதேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவேபயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்தேர்விற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே போதியகால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில்அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில்தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோஎழ வாய்ப்புள்ளது.

விண்ணப்பதாரர்கள்தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில்சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குதேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை04425332855, 04425332833 மற்றும்கட்டணமில்லாத தொலைபேசி எண்: 18004251002ல் தொடர்பு கொண்டுஅறிந்துக் கொள்ளலாம்.


மேலும்முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2016_22_not_eng_eo_gr_iv_viii_services1.pdf  என்றஇணையதள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்துதெரிந்துகொள்ளவும்.

அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை

அமைச்சர்கள்பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர்அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கலை, ஓவியம், இசைஉள்ளிட்ட தனித்திறமைகளை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளாக, தமிழகஅரசு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தஆண்டுக்கான இறுதி போட்டியும், பரிசளிப்புவிழாவும், கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.

விழாவில், அமைச்சர்கள் பாண்டியராஜன், வேலுமணி, பள்ளிக்கல்வி செயலர் சபிதா, பள்ளிக்கல்விஇயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநில அளவிலான போட்டிகள் மற்றும்பரிசளிப்பு விழாக்களில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க, கோவை மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கமாநில தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் கலை, ஓவியம், இசை போன்ற தனித்திறன்பயிற்சி அளிக்கும் பணியில், 16 ஆயிரத்து, 500 பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மிக குறைந்த சம்பளம்வழங்கினாலும், கலை மீதான ஆர்வத்தால்அவர்கள் இப்பணியை சேவையாக செய்கின்றனர்.

'பகுதிநேரஆசிரியர்கள், கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்க கூடாது' என, கோவைமாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கலை ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆசிரியர்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி, வகுப்புகளை புறக்கணித்தபோது, பகுதிநேர ஆசிரியர்கள் தான் பள்ளிகளை இயக்கஉதவினர். ஆசிரியர்களை, இது போன்று அவமதிக்ககூடாது.

இவ்வாறுஅவர் கூறினார்.

SHAALA SIDDI - SCHOOL EVALUATION DASH BOARD - IN PDF FORMAT...

NPSSE - DEMOGRAPHIC PROFILE...

பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!

டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல்
மாநிலமாக கோவாமாற உள்ளது.

 டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவாமக்கள் அனைவரும் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்டஅன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் தங்களின்மொபைல் போனை பயன்படுத்தியே வாங்கஉள்ளனர்பணமில்லா கோவா :

கோவா மக்கள் இனி பொருட்கள்வாங்க புறப்படும் போது பணம் வைக்கும்பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும்இல்லாமல் போக உள்ளது. மொபைல்மூலமே பணபரிமாற்றம் அனைத்தும் செய்யப்பட உள்ளது. மொபைல் போனைபயன்படுத்தி ஒருவர் வாங்கும் பொருளுக்கானபணம், அவரது வங்கிக் கணக்கில்இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமைசெயலாளர் ஆர்.கே.ஸ்ரீவட்சவாதெரிவித்துள்ளார்.
மொபைலில்வியாபாரம் :

ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்திபணம் எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில் இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும், சாதாரணமொபைல் போனில் * 99# என்ற எண்ணிற்கு டயல்செய்தால் பணம் பரிமாற்றம் ஆகிவிடும். சிறு வியாபாரிகளும், தங்களிடம்ஸ்வைப்மிஷின் இல்லை என்றாலும் இந்தமுறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கானபணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடும்.
மக்களிடம்விழிப்புணர்வு :
பணமில்லாபணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பதுகுறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் நேரடியாகபணம் கொடுத்து வியாபாரம் செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பணவர்த்தனைக்குஎந்த கட்டுப்பாடும்
இல்லை எனவும், மொபைல் மூலம்நடக்கும் பணபரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாதுஎனவும் கோவா முதல்வர் லட்சுமிகாந்த்பர்சேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின்கனவுக்கு துணை நிற்போம் :

இதுதொடர்பாகநடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியமத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவைமுற்றிலுமாக பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர்மோடியின் கனவு. இதில் முன்னோடியாககோவா திகழ உள்ளது. நாம்பிரதமரின் கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும்என்றார். இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையேவங்கியாக பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல்போன் எண்ணை மத்திய அரசின்கீழ் உள்ள வங்கி ஒன்றில்பதிவு செய்து விட்டால், அனைத்துவிதமான பணபரிமாற்றத்தையும் அதனை பயன்படுத்தி செய்யலாம்.

நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு

அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து
வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
● மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும்

● திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் என்பதை, கிராமப்புற மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணியும் படியும், சோப்பு பயன்படுத்தி கை கழுவும்படியும் அறிவுறுத்த வேண்டும்

● பள்ளி வளாகத்தில் குப்பை, தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, மாணவர்களுக்கு துாய குடிநீரை வழங்க வேண்டும்

● நுாலகம், ஆய்வகம், வகுப்பறை, கணினிகள், ஆவணங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்ச் போன்றவற்றில் துாசி படியாமல், சுத்தமாக பராமரிப்பது அவசியம்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் இனி வங்கியில் தான் ஊதியம் வழங்க வேண்டும் !!

சம்பளத்தைரொக்கமாக வழங்க முடிவு.!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்க, சத்தீஸ்கர் அரசு முடிவு
செய்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

செல்லாதரூபாய் நோட்டு

அறிவிப்பால், நாட்டில் பண புழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், மூன்று மற்றும் நான்காம்நிலை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சம்பளத்தில், 10ஆயிரம் ரூபாய் மட்டும், ரொக்கமாக வழங்க, முதல்வர் உத்தரவிட்டார்.

CCE பணித்தாள் - மூன்றாம் கட்டத் தேர்விற்கான அனைத்து பாட வினாத்தாள்கள்

CCE WORKSHEET 3rd Week English Answer Key



CCE -THIRD WEEK - TAMIL TENTATIVE ANSWER KEY FOR 6 to 8th Std



CCE -THIRD WEEK - TAMIL TENTATIVE ANSWER KEY FOR 1 to 5th Std

வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தற்போது500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்துநிலவும் வங்கி நடைமுறைகளால் பணம்எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும்ஆண்டு இறுதியாக உள்ளதால்
விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள்வங்கிக்கு பணம் எடுக்கச் செல்லஇயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நவம்பர் மாத ஊதியத்தைவங்கிக்குச் சென்று எடுக்க வசதியாகவரும் சனிக்கிழமை (03.12.16) நடைபெற உள்ள குறுவளமையஅளவிலான பயிற்சியினை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்திடஅரசு ஆவன செய்ய வேண்டும்என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வி துறையும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் ஆசிரியர்களின்இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற ஆவன செய்வார்கள் என்றநம்பிக்கையில் ஆசிரியர்கள்.

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றுகளை ஜனவரி 15 வரை அளிக்கலாம்

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுச் சான்றிதழை வரும் ஜனவரி 15 வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள்நேரில் சென்று கையெழுத்திட்டு வாழ்வுச் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் செலுத்த வேண்டும். ஆனால், வங்கிக் கிளைகளில் 500, ஆயிரம் ரூபாய் செல்லாதது என்ற அறிவிப்பால் எழுந்துள்ள சூழலால் வாழ்வுச் சான்றிதழ்களை வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

● அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, 2014 ஜூலையில், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைகளைசுத்தப்படுத்த, தனியாக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்

● மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலில், கல்வி நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, திடக்கழிவுமேலாண்மை நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்

● அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சிகள் ஏற்க வேண்டும். இந்த பணிக்கு உள்ளாட்சிகள் தான் ஆட்களை நியமிக்க வேண்டும்.பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என, உள்ளாட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

● பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, காலையில் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், ஊழியர்கள் சென்று கழிப்பறைகளை சுத்தப்படுத்தவும், பள்ளி முடியும் நேரம் வரை அவர்கள் பணியில் இருக்கவும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்

● வகுப்பறை பராமரிப்பு, பள்ளி வளாகம் பராமரிப்பு பணிகளுக்கும் இந்த ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்

● அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்தையே, இந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்

● அரசு ஒப்பந்த விதிகளின் படி இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், மகளிர் சுய உதவிக்குழு, சமுதாய அமைப்புகளையும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம்

● பள்ளி தலைமை ஆசிரியர்கள், பராமரிப்பு பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு திருப்தியில்லாத பராமரிப்பு பணி ஒப்பந்ததாரரை, உடனடியாக நீக்க வேண்டும்

● பெண்கள் பள்ளியில் கட்டாயம் இரண்டு பெண் துப்புரவுபணியாளர்களும், ஆண்கள் பள்ளியில் இரண்டு ஆண் அல்லது பெண் துப்புரவு பணியாளர்களும், இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஒரு பெண், ஒரு ஆண் துப்புரவு பணியாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும்

● பெண்கள் பள்ளியில், 'நாப்கின்'களை பாதுகாப்பாக அகற்றுவது இந்த பராமரிப்பு பணி நிறுவனத்தின் வேலையாகும்

● அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் விபரங்களை, ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?

ரிலையன்ஸின் ஜியோ நிறுவணம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை வெளியிட்டது. அறிமுக சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை அளவற்ற இலவச 4G இனையதள வசதியும், இலவசமாக பேசும் வசதியையும் அளித்திருந்தது. இந்நிலையில் குறுந்தகவல் செயிலியான வாட்ஸாப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவணம் கொல்கத்தாவில் உள்ள வடிகையாளர் ஒருவருக்கு, ரசீது அனுப்பியுள்ளதாக அந்த ரசீதின் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது. அவர் 554.37 GB data உபயோகித்துள்ளதகவும், 44.4 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும் இதற்கு அவர் 27,718 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து ஜியோ நிறுவணம் விளக்கம் அளித்துள்ளது. “எங்கள் நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை இலவச இனையதள சேவையும், இலவச தொலைபேசி சேவையும் வழங்கியுள்ளது. தற்போது வாட்ஸாப்பில் பரவி வரும்ரசீதின் புகைப்படம் போலியானது எனவும், எங்கள் நிறுவணம் அவ்வாறு எந்தவொரு வடிக்கையாளருக்கும் ரசீது அனுப்பவில்லை” என தெரிவித்துள்ளது.இதன்மூலம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை கலக்கி வந்த ஜியோ புரளி முற்றுப் பெற்றுள்ளது

SSLC SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Em/Tm) NEW VERSION UPDATED Posted: 27 Nov 2016 09:26 AM PST 10th - SSLC SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Em/Tm) NEW VERSION | Download *Click here 10th - SSLS - SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Tamil Medium) *Click here 10th - SSLS - SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (English Medium) Thanks To, Mr V. Subramanian M.A.,M.A.,M.A.,B.Ed., B.T.Asst, M.N.U. Jayaraj Nadar Hr. Sec. School, Nagamalai, Madurai- 625 019. CCE WORKSHEET 3rd Week English Answer Key Posted: 27 Nov 2016 09:26 AM PST CCE Worksheet Key Answers CCE WORKSHEET 3rd Week English Answer Key | Download ... தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRC அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள்பயிற்சி!

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிவழங்க திட்டம்...