யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/16

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி

 தமிழ்நாடுஇந்து சமய அறநிலையத்துறையில் தொகுதிசெயல் அலுவலர் நிலை 3 மற்றும்செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான2014 & 2015, 2015 & 16 மற்றும்2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர
அறிக்கைகளை தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இப்பதவிகளுக்குஇந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும்பூர்த்தி செய்யப்பட உள்ளன. செயல் அலுவலர், நிலை 3க்கு ஏதேனும் ஒருபட்டப்படிப்பில் தேர்ச்சியும், செயல் அலுவலர், நிலை4க்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சிஇரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க 24.12.2016 கடைசி நாள் ஆகும்.

செயல் அலுவலர், நிலை 3க்கான எழுத்துதேர்வு இரு தாள்களைக் கொண்டது. இவை 29.04.2017 அன்று காலை மற்றும்பிற்பகலில் நடைபெறுகிறது. செயல் அலுவலர், நிலை4க்கான இரு தாள்களைக் கொண்டது. இவை 30.4.2017 அன்று காலை மற்றும்பிற்பகலில் நடைபெறுகிறது.

இதற்கானதேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக 100 +50 = 150 ரூபாய் செலுத்தவேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்தவிண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று, இரண்டு முறைதேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவேபயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்தேர்விற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே போதியகால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில்அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில்தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோஎழ வாய்ப்புள்ளது.

விண்ணப்பதாரர்கள்தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில்சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குதேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை04425332855, 04425332833 மற்றும்கட்டணமில்லாத தொலைபேசி எண்: 18004251002ல் தொடர்பு கொண்டுஅறிந்துக் கொள்ளலாம்.


மேலும்முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2016_22_not_eng_eo_gr_iv_viii_services1.pdf  என்றஇணையதள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்துதெரிந்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக