யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/10/17

JACTTO-GEO வுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு.

ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் "

ஊதியஉயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ'
அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


 வரும் 23ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன், பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை நீக்க, புதிய குழு அமைப்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.ஊதிய உயர்வு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், கடந்த மாதம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை, சமீபத்தில், அரசு வெளியிட்டது. 'ஊதிய உயர்வு, அக்., முதல் அமலாகும்' என, அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்ற எதிர் பார்த்திருந்த, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு, இம்மாதம்,13ம் தேதி,அவசர ஆலோசனை நடத்தியது.இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு விசாரணையின்போது, ஊதிய முரண்பாடு குறித்து முறையிடுவது எனவும், அரசு சாதகமான பதில் தராவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவக்கவும்,முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசு பரிந்துரையின் படி, 2016, ஜன., முதல், ஊதிய உயர்வு கணக்கிட வேண்டும். தமிழக அரசு, 21 மாத சம்பள உயர்வுக் கான நிலுவை தொகையை, தர மறுத்துள்ளது.

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தியதில் உள்ள, ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என, ஆறு ஆண்டுகளாக கோரினோம். அதை செய்யாமல், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அறிவித்ததால், குளறுபடி அதிகரித்துள்ளது.அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு, அடிப்படை ஊழியர்களுக்கு சாதகமாக இல்லை; அதிகாரிகளுக்கே சாதகமாக உள்ளது. எனவே, 20ம் தேதி, மாநிலம் முழுவதும் விளக்க கூட்டம் நடத்த உள்ளோம்.

ஊதியகுளறுபடிகளை, நீதிமன்றத்திலும் தெரிவிக்க உள்ளோம். தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, அரசுக்கு ஆதரவாக, ஜாக்டோ - ஜியோவில் இருந்து பிரிந்து உருவான, ஜாக்டோ - ஜியோ கிராப் நிர்வாகிகளும், முதல்வர், பழனிசாமியை சந்தித்து, மனு அளித்துள்ளனர். அதில், ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என, தெரிவித்துள்ளனர்.

அனைத்து தரப்பிலும், அதிருப்தி ஏற்பட்டு உள்ளதால், வரும், 23ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன், ஜாக்டோ - ஜியோவை சமரசம் செய்யும் முயற்சியை, அரசு துவக்கி உள்ளது. உயர்மட்ட குழுவினரை அழைத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது.அப்போது, சம்பள நிலுவைக்கு பதிலாக, சலுகை திட்டங் களை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைப்பதற்கும் அரசு தரப்பு முன்வந்துள்ளதாக தெரிகிறது.


அதேபோல், 'ஸ்டிரைக்' காலத்தில் ஊழியர்கள் எடுத்த விடுமுறையை சரிக்கட்டவும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக,தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள்

1. இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்கு சேருமா,சேராதா?

2. சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை எவ்வாறு சேர்ப்பது.

3) பதவி உயர்வுக்கு எவ்வாறு நி ர்ணயம் செயவது

4.) இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வரும் special Allowance ரூ .500
என்னானது.

5.) மூத்த ஆசிரியர்கள் பெறும், SA, ரூ.30,50 ஐ என்ன செய்வது.

6) 1.1.2016  ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் 31/12/2015 பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யலாமா?

7)ஆப்ஷன் கள் கொடுக்க மூன்று மாத அவகாசம் உள்ள நிலையில் இக்காலத்தில் வரும் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்ய வழி வகை உள்ளதா?

8) தேர்வுநிலை,சிறப்பு நிலை ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வழிவகை உள்ளதா?

9) 4(3) rule பயன்பாடு உள்ளதா?

போந்றவற்றிற்கான தெளிவான கருத்துக்கள் நிதித்துறை சார்பாக தெளிவுரைகள்  வழங்கப்படும் என எதிபார்க்கப்படுகிறது

வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'

வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி
உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்குபவர்களும், டிச., 31க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லியில் செயல்படும், செய்தி இணையதளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது.
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்:

வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை.சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், 1 ல், மத்திய அரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், புதிதாக கணக்கு துவக்குபவர்கள், தங்கள் ஆதார் எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஊதிய மாற்றம் என்ற பெயரில் தமிழக அரசு, ஊழியர்களை ஏமாற்றி வருகிறது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணை தலைவர் சுப்ரமணியம்

ஊதியமாற்றம் என்ற பெயரில் தமிழக அரசு, ஊழியர்களை ஏமாற்றி வருகிறது - மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணை தலைவர் சுப்ரமணியம் பேட்டி.

*வரும் 23ம் தேதி, உயர்நீதிமன்றம் வழங்கும் உத்தரவை தொடர்ந்து போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் - சுப்ரமணியம்

3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: ரூ.60 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்
என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 770 பள்ளிகள் மற்றும் 11 வட்டாரங்களில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு மெய்ந்நிகர் வகுப்பறை என்னும் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கப்பட்டன.
இவற்றின் மூலம் 770 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் நேரடியாக கற்றல் கற்பித்தல் பெற்றுவருகின்றனர். அதேபோல 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் ஆசிரிய மாணவர்களும் கற்றல் கற்பித்தலை பெற்று வருகின்றனர். இதையடுத்து, 3 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்ததை அடுத்து தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது ரூ. லட்சம் செலவில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கிளாசுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள உபகரணங்களை பள்ளிக் கல்வி அமைச்சரிடம் செயல்படுத்தி காட்டினர். இந்த ்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்களும் பங்கேற்று ஸ்மார்ட் கிளாஸ் உபகரணங்களை பார்த்தனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த உபகரணங்களை அமைச்சர் பார்ப்பார். அதற்கு பிறகு அந்த உபகரணங்கள் வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும். நவம்பர் மாதம் இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மாற்றி முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக வலுவானதாக அமையும்-ஜாக்டோ ஜியோ அறிவிப்பு .

இடைநிலை ஆசிரியர் ஊதிய நிர்ணயத்தில் பழைய ஊதிய அடுக்கை பின்பற்றியிருப்பது, அடிப்படை சமத்துவக்கொள்கைக்கு முரணானது .10+2 +2
என்பதை பழைய முறையான 10+2 என்று கருதி ஊதிய நிர்ணயத்தை செய்து அதையே நீடித்து வருவது ஒரு சாராரை அரசே ஏமாற்றும் செயல் என்றும் .TET தேர்வு என்பது மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்வி உரிமைச்சட்டம் -2009 ன்படி வடிவமைக்கப்பட்டு திறன் அடிப்படையில் பல்வேறு கூறுகளின் அடிப்படையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான முழுத்தகுதியினை பெற்ற பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை விட குறைத்து நிரணயிப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ,பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் ரத்து சார்ந்த முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக வலுவானதாக அமையும்.

மத்தியரசின் ஊதிய அட்டவணையை பின்பற்றாமல் வேறு அட்டவணையை பின்பற்றுவது வேதனை அளிக்கிறது ஓய்வூ பெற்ற ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!!!

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.
தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ௨௩ மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, ௩௫ மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும். தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.
பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. 
எனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். 
அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றி, பட்டியலை தயாரித்து, சென்னையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, மாவட்ட வாரியாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது

துளசி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அற்புத நன்மைகள்!!!

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.
காய்ச்சல் :-
காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.
தொண்டைப்புண் :-
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.
தலை வலி :-
உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.
கண் பிரச்சனைகள் :-
கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.
வாய் பிரச்சனைகள் :-
ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.
இதய நோய் :-
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
சளி, இருமல் :-
கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.
நீரிழிவு :-
நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
சிறுநீரக கற்கள் :-
துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் :-
மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால், துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தைப் குறைக்கும்.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு :

தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

JACTTO - GEO உயர்மட்டகுழு சென்னையில் 24ம் தேதி ஆலோசனை :