யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/12/18

முதல்வர் மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு: இன்று முதல் அமல் :

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் பேர் ரூ.5,133.33 கோடி அளவுக்கு பயன் அடைந்துள்ளனர்.
 முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இப்போது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதைப் பரிசீலனை செய்து ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

 இன்று முதல் நடைமுறை: மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள அறிவிப்பானது டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
 அடிப்படைத் தகுதி: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புவோர் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களைப் பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
 ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம்பெற்று இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பவர்களும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிப்பது முக்கியம். தமிழக முகாம்களில் உள்ள இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், முகாம்களில் தங்கியிருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமானச் சான்றும் இல்லாமல் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 இதுவரை எத்தனை பேர்: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதுவரை அதாவது கடந்த வியாழக்கிழமை வரை இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக, பெருநகரங்களைச் சேர்ந்த மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். சென்னையில் 1.95 லட்சம் பேரும், கோவை மாவட்டத்தில் 1.47 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 1.46 லட்சம் பேரும், விழுப்புரத்தில் 1.33 லட்சம் பேரும், வேலூரில் 1.35 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.43 லட்சம் பேரும், சேலத்தில் 1.38 லட்சம் பேரும், ஈரோட்டில் 1.10 லட்சம் பேரும், மதுரையில் 1.37 லட்சம் பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 1.01 லட்சம் பேரும் பயன்பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNTET லிருந்து விலக்கு: Minorities / Non-minorities பாகுபாடுகள் நீக்க கோரிக்கை:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்ப பயிற்சி:

விருதுநகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் ரோபோடிக் ப்ரோகிரமிங் தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அமைப்பு சார்பாக கிராமப்புற மாணவர்கள் ரோபோட்டிக் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வருங்காலத்தில் ரோபோட்டிக்
எனப்படும் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்த செயல் விளக்கம் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதல்முறை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் வெளிநாடு மற்றும் நகரங்களில் இருக்கும் மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த திறன் கிராமப்புற மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் ரோபோட்டிக் மற்றும் அதன் டெக்னாலஜி பற்றி விளக்கி கூறப்பட்டது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோக்களை இயக்கி காட்டியும், அதன் செயல்பாடு குறித்தும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சி தங்களுக்கு பயன் உள்ளதாக இருந்ததாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்

ஆசிரியர்கள் ,மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க C.E.O களுக்கு உத்தரவு :



டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணித்து, அறிக்கை சமர்பிக்குமாறு, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் விதமாக, 'டிஎன் அட்டென்டன்ஸ்' என்ற பிரத்யேக 'ஆப்' வெளியிடப்பட்டது.
இதை ஆசிரியர்கள் பதிவிறக்கி, காலை, மதியம் ஆகிய, இரு வேளைகளில், மாணவர்களின் வருகைப்பதிவு விபரங்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.கடந்த அக். மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், பல பள்ளிகள், முறையாக வருகைப்பதிவு உள்ளீடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட கல்வி அலுவலர்கள், டிஜிட்டல் வருகைப்பதிவு திட்டம் குறித்து, ஆய்வு மேற்கொள்ளுமாறு, ஒருங்கிணைந்த கல்வித்திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளில் வழக்கமான வருகைப்பதிவோடு, டிஜிட்டல் முறையிலும், மாணவர் வருகையை பதிவு செய்ய வேண்டுமென, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது

ஒருநாள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

அரசு பள்ளியில் டிஜிட்டல் நூலகம்: மாணவர்கள் வரவேற்பு:

தர்மபுரி கல்வி மாவட்டத்தில் முதன்முறையாக, லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திறக்கப்பட்ட டிஜிட்டல் நூலகம் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பங்களிப்புடன், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், 13 கம்ப்யூட்டர்களுடன், கல்வி மாவட்ட அளவில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டது. இதை திறந்து வைத்த பின், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி கூறுகையில், '' டிஜிட்டல் நூலகத்தில் கணினி மூலம், 600 நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொது அறிவு, நீட், போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள், தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவும். இதில் படித்து, அறிவுத்திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளலாம்' என்றார்.

இரண்டாம் பருவத் தேர்வு கால அட்டவணை: 2018-2019 :

பள்ளிகளில் பிற மொழி பயிற்சி மத்திய அரசு உத்தரவு!

பள்ளிகளில், தமிழ், ஹிந்தி உள்பட, ஐந்து மொழிகளில் பயிற்சி தர வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்திய அலுவல் மொழிகளாக, 22 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு, அவை அட்டவணைபடுத்தப் பட்டுள்ளன. தமிழ், ஹிந்தி, கன்னடம், உருது, காஷ்மீரி, தெலுங்கு உள்ளிட்ட, இந்த மொழிகள், மாநில ஆட்சி மொழியாகவும் திகழ்கின்றன.இந்த மொழிகளை, நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அனைத்து பள்ளிகளிலும், ஏதாவது ஐந்து அலுவல் மொழிகளை, ஒவ்வொரு வாரமும் பயிற்றுவித்து, மாணவர்களுக்கு பிறமொழிகளையும் பரிட்சயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, 'பாஷா சங்கம்' என்ற, மொழி மேம்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும், மாநில பள்ளி கல்வி துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், மாணவர்களிடையே பிறமொழி அறிவையும் வளர்க்கும் வகையில், குறைந்தபட்சம், ஐந்து மொழிகளில், முக்கிய வார்த்தைகளை கற்றுத் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும், ஒரு மொழியை தேர்வு செய்து, அதில் உள்ள முக்கியமான, ஐந்து சொற்றொடர்களை, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் வாசிக்க வேண்டும். இந்த வழக்கத்தை பின்பற்றி, சாதனை செய்யும் பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மொழி பயிற்சி கையேடுகள், மத்திய அரசின்,epathshala.gov.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் காலி:

நீட், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நலன் கருதி, காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். இல்லாவிட்டால் 5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி என்று கல்வியாளர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் மேனிலை வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சுமார்  12 லட்சம் பேர் மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அதன் பிறகு நீட் உள்பட போட்டி தேர்வுகளை எழுத உள்ளனர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு, இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.



காலாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் இந்த மாதம் நடக்க உள்ளன. கடந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அரசுப் பள்ளிகள் மூலம் ேதர்வு எழுத உள்ள பிளஸ்1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களில் பலரின் கல்வித்தரம் கேள்விக்குரியதாக உள்ளது. குறிப்பாக 50 மாணவர்கள் படிக்கும் வகுப்பில் 4 அல்லது 5 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து கேள்வி கேட்டதற்கு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழலில், பாடங்களை படிக்கவே நேரம் இல்லை. இதில் நீட் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற மாட்டோம் என்பதாலேயே விண்ணப்பிக்க வில்லை என்றனர்.

அதாவது மாணவர்களின் கூற்றுப்படி தமிழகத்தில் 3000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பாடம் கற்க முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். மேலும், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.


கடந்த 2016-17ம் ஆண்டில் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள், ஏற்கனவே உள்ள காலியிடங்கள் என மொத்தம் 3000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு நடத்தியபோது 2000 பேர்தான் தேர்வு பெற்றனர்.

அவர்களைக் கொண்டு காலியாக இருந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 1000 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு பிறகு இரண்டு கல்வியாண்டுகள் முடிந்த நிலையில் 2000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது 3000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில் முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

காலியாக உள்ள இடங்களில் உடனடியாக ஆசிரியர்களை நிரப்பினால், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியும். அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வுகளை நடத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உபரி ஆசிரியர்களாக 5000  பேர் உள்ளனர். அதனால், இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தவிர்த்து 3000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பிளஸ்1, 2 படிக்கும் 5 லட்சம் மாணவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பது சந்தேகமே என்று அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்கள் கல்வியாளர்கள், பெற்றோர். அரையாண்டு தேர்வுக்கு பிறகாவது காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்குமா?

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) - CEO proc

26-11-2018 அன்று அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) ஒழுங்கு நடவடிக்கை - CEO செயல்முறைகள்.

போராட்டத்தில் பங்கேற்ற 4,500 ஆசிரியர்களுக்கு 17 (A) நோட்டீஸ் - சஸ்பெண்ட் செய்ய முடிவா?

தமிழகத்தில் அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 4,500 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதிய உரிமையை குறைத்து, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை நிர்ணயம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.


இழந்த உரிமையை மீட்ெடடுக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தியும், கடந்த 26ம் தேதியன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், போராட்டம் நடந்தது.

மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், தங்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தி, அரசாணை 234 மற்றும் 303-ன் நகலை எரிக்க முயன்றனர்.

ஒருசில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடந்தது. பிற இடங்களில் அரசாணை நகலை எரிக்க முயன்றதை கண்ட போலீசார், சுமார் 4,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கைது செய்து, அன்று மாலையிலேயே விடுவித்தனர். இவர்களில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமின்றி, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் உள்ளனர்.அனைவர் மீதும், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கோரிக்ைககளை வலியுறுத்தி கடந்த 9 ஆண்டுகளாக, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.

தற்போது, அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒருசில மாவட்டங்களில் நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், பிற மாவட்ட சிஇஓக்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 4,500 பேரையும் சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது’’ என்றனர். 

ஜாக்டோ-ஜியோ சங்கத்தினருடன் நடத்திய தமிழக அரசின் பேச்சு தோல்வி: வரும் 4ம் தேதி திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடத்த ஊழியர்கள் தீவிரம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அச்சங்கத்தின் நிர்வாகிகளுடன் தமிழக அரசு நேற்று தலைமைச் செயலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், சம்பள முரண்பாடு களைதல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனித்தனியாக போராடி வந்த இவர்கள், ஒரே அமைப்பின் கீழ், ஜாக்டோ-ஜியோ என்று இணைந்து போராடி வருகின்றனர். ஆனாலும், அரசு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

 வரும் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்தனர். இந்த போராட்டத்தை முடக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. போராட்டம் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியமா? என்று விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.  மேலும், அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், என்ஜிஓ, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் அழைத்து பேசினார்.

பேச்சுவார்த்தை முடிவில் இந்த 4 சங்கங்களும், டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தனர். ஆனால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வருகிற 4ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர். இதைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்து அழைப்பு விடுத்தது. அரசின் அழைப்பை ஏற்று, நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில், அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், நிதித்துறை செயலாளர் சண்முகம், பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சுவர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு சங்க நிர்வாகிகள் 20 பேர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

அமைச்சர், ஏதாவது ஒரு உறுதிமொழியாவது ருவார் என்று எதிர்பார்த்தோம். எந்த உறுதிமொழியும் அவர் தரவில்லை. நீங்கள் பேசியதையெல்லாம் முதல்வரிடம் சென்று நான் விவரிக்கிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார்.  நாளையதினம் சென்னையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டத்திற்கு எல்லோரும் மிகவும் வேகத்தோடு வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தை நிறுத்துவதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, மீண்டும் மீண்டும் அமைச்சரிடம் வற்புறுத்தி சொல்லியும்கூட எந்த வாக்குறுதியும் தரவில்லை.

எங்களுடைய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் இந்த அரசு புரிந்துகொண்டதாக தெரியவில்லை. எங்கள் கோரிக்கை மீது அரசு எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை. எல்லாவற்றையும் முதல்வரிடம் தெரிவிக்கிறோம் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். எனவே எங்களது நியாயமான கோரிக்கைகள் எதையும் இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். திட்டமிட்டபடி 4 ம் தேதி ஸ்டிரைக் செய்ய அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் தீவிரமாக உள்ளனர்.

கோரிக்கைகள் என்னென்ன?
* புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும்.
* இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
* அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்கு பிறகு, 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
* சத்துணவு பணியாளர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
* எதிர்கால இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கின்ற அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும்.
* 2003-04ம் ஆண்டில் தொகுப்பு ஊதியத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
* மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அரசு பள்ளிகளை மூடக்கூடாது.

சென்னை விமான பயிற்சி பள்ளி ஜனவரி 15 முதல் திருச்சிக்கு இடமாற்றம்:

சென்னையில் செயல்பட்டு வந்த மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் விமான பயிற்சி பள்ளி, திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் மற்றும் மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் விமான பயிற்சி பள்ளியை சேர்ந்த ஜேக்கப் செல்வராஜ் ஆகியோர் தெரிவித்தனர். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தற்போது 30 மாணவர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும், இதற்கு பனிரெண்டாம் வகுப்பு தகுதி போதுமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 4-ந்தேதி மீண்டும் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்:

வருகிற 4-ந்தேதி முதல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் 4-ந்தேதி மீண்டும் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்



தமிழகத்தில் 4-ந்தேதி மீண்டும் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்













சென்னை:

தமிழக கடலோரப் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் பரவி உள்ளது.இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் வட மாவட்டங்களில் தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்படுகிறது.


இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இது வருகிற 3-ந்தேதி தென் மேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை வரை பரவும்.
இதன் காரணமாக வருகிற 4-ந்தேதி முதல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு 4, 5-ந்தேதிகளுக்கு மட்டும் வடதமிழகத்துக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11 செ.மீ. அளவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகுமா? என்பதை வானிலை அதிகாரிகள் கணித்து வருகிறார்கள். அதன் பிறகே தொடர்ந்து மழை எச்சரிக்கை விடப்படும்.

இந்த மழையானது வட மாவட்டங்களில் நிலவும் பற்றாக்குறை மழை அளவை ஓரளவுக்கு ஈடுசெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கஜா புயலில் 200 தென்னைகள் பாதிப்பின்றி தப்பிய அதிசயம் துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவுமே காரணம் ..ஆசிரியர் இதனையும் மாணவர்கள் புரியும் வகையில் கற்பிக்கலாம்!!

பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திரு வாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ளது இடும்பா வனம் கிராமம். கஜா புயலின் கோர தாண்டவத்தால் அதிக அளவில் தென்னை மரங்களை பறிகொடுத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதே கிராமத்தில், சீனு என்ற விவசாயி மட்டும் குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளார். இதற்கு காரணமாக இருந்தது, ஆசிரியர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு.
தன்னார்வ அடிப்படையில் வானிலை நிகழ்வுகளைக் கணித்து கூறி வருபவர் ஆசிரியர் செல்வ குமார். கஜா புயல் வேதாரண்யம் அருகேதான் கரையைக் கடக் கும் என்று துல்லியமாகக் கணித்து கூறியிருந்தார். முன்பு தனுஷ் கோடியை அழித்த புயல் போலவே, கஜா புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு பேரழிவு ஏற்படக் கூடும் என்றும் எச்சரித்து வந்தார். அதைக் கேட்டதால்தான் தனது தென்னை மரங்களை கணிச மாக காப்பாற்ற முடிந்தது என் கிறார் இடும்பாவனம் விவசாயி சீனு. இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் ஒரு சாதாரண விவசாயி. 250 தென்னை மரங்களோட ஒரு தோப்பு இருக்கு. தோப்பிலேயே கூரை வீட்டில் குடியிருக்கோம். 10 மாடுகளும் வளர்க்கிறேன்.
கடந்த சில வருஷமாகவே பள்ளிக்கூட வாத்தியார் செல்வ குமார் சொல்ற வானிலை செய்தி களை கேட்டு, அதுக்கேத்தபடிதான் சாகுபடி செய்றேன். வேதாரண்யத் தில புயல் அடிக்கப் போவுதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே சொன் னாரு. தனுஷ்கோடிய அழிச்சது போல பயங்கரமா தாக்கப் போவு துன்னும் ஒரு வாரம் முன்னாடியே சொன்னாரு.
சேதத்தை எப்படி குறைக்க லாம்னு நிறைய ஆலோசனை களும் சொன்னாரு. தென்னை மரத்தோட தலைக்கனத்தைக் குறைச்சிட்டா மரங்களை ஓரளவு காப்பாத்த முடியும்னாரு.
பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு
அதனால, புயலுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆள் வச்சு, ஒவ்வொரு மரத்திலயும் தலா 10 பச்சை மட்டைய வெட்டினேன். தேங்காய், இளநீர், குரும்பை எல்லாத்தையும் இறக்கிட்டேன். குரும்பை மட்டுமே 12 ஆயிரத் துக்கு மேல இருக்கும். இதெல் லாம் நல்லா தேறி, தேங்காயா பறிச்சா ஒன்னேகால் லட்சம் ரூபா வரை விலை கிடைக்கும். இப்போ அவ்வளவும் நஷ்டம்தான். இதுகள வெட்டி இறக்கவே பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு.
வாத்தியார் சொன்னதுபோல, எங்க கூரை வீட்டுலயும், மாட்டு கொட்டகை மேலேயும் பச்சை தென்னை மட்டைய அடுக்கி, கயித்தாலே நல்லா வரிஞ்சு கட்டினேன். வீட்டுக்கு பக்கத்துல நின்ன ஒரு புளிய மரத்தை மட்டும் வெட்ட முடியல. அதனால, அந்த மரம் விழுந்து வீட்டோட அடுப்படி பக்கம் மட்டும் கொஞ்சம் சேதமாயிட்டு. மத்தபடி வீட்டுக்கோ, மாட்டு கொட்டகைக்கோ எந்த பாதிப்பும் இல்ல. தென்னையில 30 மரம் மட்டும் விழுந்துட்டு. இருநூத்தி சொச்சம் மரங்களைக் காப்பாத்திட்டேன்.
வாத்தியாரோட நீண்டகால முன்னறிவிப்பை கேட்டு, நெல் வயல்ல முன்னாடியே நடவை முடிச்சுட்டேன். அதனாலே இப்போ பயிர் நல்லா வளர்ந்து, பாதிப்பு இல்லாம தப்பிச்சது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘புயல் வர்றதுக்கு முன்னா டியே பச்சை மட்டைகளை வெட்டி னீங்களே, ஊர்ல யாரும் எதுவும் சொல்லலியா?’’ என்று கேட்டதற்கு, “ஊர் மக்களை விடுங்க. எங்க வீட்டுல என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா’’ என்று, மகளைப் பார்த்தார்.
எம்எஸ்சி படித்துள்ள அவரது மகள் சுப கூறும்போது, ‘‘பச்சை மட்டைகளை அப்பா வெட்டுறதை பார்த்து பதறிட்டோம். ‘நல்லா வளர்ந்துட்டு இருக்கிற மரத்தில் இப்படி வெட்டாதீங்க’ன்னு கெஞ்சி னோம். நாங்க சொன்னதால, சில மரங்களை மட்டும் விட்டுட்டாரு. அந்த மரங்கள்தான் இப்போ விழுந்து கிடக்குது. அப்பாவை அவர் போக்கிலேயே விட்டிருந்தா, இந்த மரங்களையும் காப்பாத்தி இருக்கலாம்னு இப்ப தோணுது” என்றார்.
தொடர்ந்து பேசிய விவசாயி சீனு, ‘‘ஒருவேளை புயல் வீசாமல் போயிருந்தால், பச்சை மட்டை களை வெட்டித் தள்ளிய நான் கிராமத்தில் பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருப்பேன். அதை நான் பெரிய விஷயமா நினைக்கல. அந்த கிண்டல், கேலியைக்கூட நான் ஏத்துக்கு வேன். ஆனால், அந்த நஷ்டம் என்னோட போயிருக்கும். இப்ப புயல் அடிச்சு ஊரே அழிஞ்சு கிடக்கிற சூழ்நிலையில, என் மரத்தைக் காப்பாத்திட்டேன் என்று என்னால் சந்தோஷப்பட முடிய வில்லை...’’ என்று வேதனையோடு கூறினார் சீனு.
துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடி வும் சேரும்போது, ஆக்ரோஷமாக தாக்கும் பேரிடரையே எதிர் கொண்டு ஓரளவு பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதா ரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள பல ருக்கு இது வழிகாட்டியாக இருக் கும் என்பது மட்டும் நிச்சயம்!

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாதோருக்கு சிக்கல்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி பணியாளர்களை பணி நிரவல் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் சிக்கல்ஏற்பட்டுள்ளது.நிதிநிலைமையை காரணம் காட்டி, உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அனுமதி வழங்க அரசு மறுத்து வந்தது.

பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் அப்பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.ஏற்கனவே 250 முதல் ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு எழுத்தர், ஆயிரம் முதல் 1,500 வரை 2 பேர், 1,500 க்கும் மேல் 3 பேரை நியமிக்கலாம்.ஆயிரம் மாணவர்கள் வரை ஒரு அலுவலகஉதவியாளர், ஆயிரம் முதல் 1,500 வரை 2 பேர், 1,500 க்கு மேல் 3 பேர் நியமிக்கலாம். எத்தனை மாணவர்கள் இருந்தாலும் ஒரு அலுவலக வேலையாள், காவலர் நியமிக்கலாம்.தற்போது அது மாற்றப்பட்டு 251 முதல் ஆயிரம் மாணவர்கள் வரை தலா ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் (அ) உதவியாளர் (அ) பதிவுருஎழுத்தர், 1001 க்கு மேல் 2 பேர் இருக்கலாம்.எத்தனை மாணவர்கள் இருந்தாலும் ஒரு காவலர் இருக்கலாம்.மேலும் 1991-92 ல் அனுமதித்த பள்ளிகளில் மட்டுமே ஆய்வக உதவியாளர் நியமிக்க முடியும். சுத்தம் செய்வோர், அலுவலக வேலையாளர்,துப்புரவாளர் பணியிடங்களை நிரப்பவும் அனுமதி வழங்கவில்லை.

விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு" - அமைச்சர் மணிகண்டன் தகவல்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழகத் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், மதிய உணவு திட்டம் போன்று பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு  வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவது எப்படி?

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில்அளிக்க வேண்டும்.

மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களை பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருப்பவர்களும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக முகாம்களில் உள்ள இலங்கையை சேர்ந்த தமிழர்கள் முகாம்களில் தங்கி இருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமான சான்றும் இல்லாமல் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமானது தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி நடைமுறைக்கு வந்தது.

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெற்றுள்ளனர்.

சென்னையில் 1.95 லட்சம் பேரும், கோவை மாவட்டத்தில் 1.47 லட்சம் பேரும், காஞ்சீபுரத்தில் 1.46 லட்சம் பேரும், விழுப்புரத்தில் 1.33 லட்சம் பேரும், வேலூரில் 1.35 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.43 லட்சம் பேரும், சேலத்தில் 1.38 லட்சம் பேரும், ஈரோட்டில் 1.10 லட்சம் பேரும், மதுரையில் 1.37 லட்சம் பேரும், நெல்லை மாவட்டத்தில் 1.01 லட்சம் பேரும் பயன் பெற்றுள்ளனர்.

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள் கேலிக்கூத்து: நீதிபதி கருத்து :

சென்னை: ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள் 
கேலிக்கூத்தாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வியை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.10000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகைகொற்கை பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி 3 கி.மீ தூரத்திலுள்ள பள்ளிக்கு பணி மாற்ற கோரினார். இடமாறுதல் கலந்தாய்வில் 104 கி.மீ தூரத்திலுள்ள பெரிய தும்பூருக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து ஆசிரியை வழக்கு தொடர்ந்தார். மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தில் பணி மாறுதலின் போது முன்னுரிமை தரவேண்டும் என்று உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
விதிகள் தெளிவாக உள்ள நிலையில் பணி மாறுதல் கலந்தாய்வு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி விமலா தெரிவித்தார் .

செல்பி’யால் பல உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், அமெரிக்காவில் செல்பி மூலம் ஒருவர் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பித்திருக்கிறார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், கிறிஸ்டோபர் பிரிகோபியா. அமெரிக்காவின் ஜார்ஜ் டவுனில் வேலைசெய்து வருகிறார். இவரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்தபோது திடீரென போலீஸ் கைதுசெய்தது. ஏன் கைதுசெய்யப்பட்டிருக்கிறோம் எனத் தவித்த கிறிஸ்டோபர், கைதுக்கான காரணத்தை போலீசார் விளக்கியபோது அதிர்ந்தார்.

இவர் தனது பள்ளிக்கால தோழியை வீடு புகுந்து தாக்கியதாகவும், அவரின் கழுத்தில் கத்தியைக்கொண்டு கீறியதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ‘நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட தினத்தில் நான் வீட்டில் இருந்தேன்’ எனக் கதறிய வரின் விளக்கத்தைக் கேட்காமல் அவரைச் சிறையில் அடைந்த போலீசார், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 99 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்தனர். ஆனால், கிறிஸ்டோபரின் பெற்றோர்கள் கோர்ட்டை நாடினர். ஒன்பது மாதம் சிறையில் இருந்த அவரை ஜாமீனில் வெளியில் எடுத்தனர்.

அதேநேரம், சட்டப் போராட்டத்தைத் தீவிரப் படுத்திய அவர்களுக்கு, கோர்ட்டில் தங்கள் மகன் குற்றவாளி அல்ல என நிரூபிக்க உதவியது ஒரு செல்பி படம்.

ஆம், கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சம்பவம் நடந்ததாக அந்தப் பெண் புகார் கொடுத்திருந்தார்.

ஆனால் கிறிஸ்டோபர் அதே நாளில், அதே நேரத்தில், சம்பவம் நடந்த இடத்துக்கு 65 மைலுக்கு அப்பால், தன் தாய் மற்றும் குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக, இவர்கள் அந்த நேரத்தில் குடும்பத்துடன் செல்பி ஒன்றை எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.

இதை ஆதாரமாக வைத்து வாதாடிய வக்கீல்கள், கிறிஸ்டோபரை 99 வருட ஜெயில் தண்டனையில் இருந்து வெளிக்கொண்டுவந்தனர். இதை முன்னிட்டு, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவரின் தாயார் எரினா, ‘தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் அனைவருக்கும் நீதி வேண்டிப் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். இது இங்கே முடிவுக்கு வரவில்லை. நாங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தப் போராடுவோம்’ என உருக்கமாகக் கூறியுள்ளார்.

மாணவிகள் கொலுசு அணிவதால் மாணவர்களுக்கு என்னவெல்லாம் ஆகுது தெரியுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொலுசு அணிந்து

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம், நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்களுக்கு 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும். யூடியூப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் தலா ரூ20 லட்சம் மதிப்பீட்டில் ஜனவரி 15க்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் செங்கோட்டையன் பேசுகையில், இந்தாண்டு நீட் தோ்வுக்கு தமிழகத்தில் இருந்து 26,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றார். அப்போது கொலுசு அணிந்து மாணவிகள் வகுப்பறைகளுக்கு வரக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்து தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், ஆனால், மாணவிகள் கொலுசு அணிந்து செல்லும்போது மாணவர்கள் கவனம் சிதறும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் அவர்கள் படிப்பு கெடும் என்றும், தெரிவித்தார். அதேநேரம் மாணவிகள் பூ சூடிக்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.