யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/1/17

அனுமதியின்றி உயர் கல்வி; 3,000 ஆசிரியர்களுக்கு சிக்கல்

தமிழக அரசு பணியில் சேர்ந்தோர், உயர் கல்வி படிப்பது, வெளிநாடுகள் செல்வது, சொத்து வாங்குவது என, ஒவ்வொன்றுக்கும், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இதன்படி, பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியராக சேருவோர், முதுநிலை பட்டம், ஆராய்ச்சி படிப்பு போன்றவற்றை படிக்க, அரசு அனுமதி பெற வேண்டும். 


தொடக்க கல்வித்துறையில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்து விட்டு, தற்போது ஊக்க ஊதியம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. 2009 வரை, அனுமதியின்றி உயர் கல்வி முடித்தோருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், பின்னேற்பு அனுமதி அளித்தனர். 

அதிகாரத்தை பயன்படுத்தி பல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததால், 2009க்கு பின், இந்த பின்னேற்பு அனுமதி தரும் அதிகாரம், பள்ளிக்கல்வி செயலருக்கு வழங்கப்பட்டது. ஆனால், செயலர் இதுவரை, பின்னேற்பு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனுக்கு, பள்ளிக்கல்வி செயலர் சபிதா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

அதில், ’அனுமதி இன்றி உயர் கல்வி படித்தவர்கள் எத்தனை பேர்; அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து, விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, தெரிவித்துள்ளார். 

அதனால், அனுமதியின்றி உயர் கல்வி முடித்து, ஊக்க ஊதியத்திற்காக விண்ணப்பித்துள்ள, 3,000 ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள், விளக்கம் கேட்டு, ’நோட்டீஸ்’ அனுப்பி உள்ளனர். விளக்கம் வந்த ஒரு வாரத்தில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கற்றல் குறைபாடு; மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம்!


கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் பட்டியலை துல்லியமாக கண்டறிய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு செயல்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர். 


’டிஸ்லெக்ஷியா’ - வாசித்தல் குறைபாடு, ’டிஸ்கிராபியா’- எழுதுவதில் குறைபாடு, ’டிஸ்கால்குளியா’ - கணக்கு போடுதல் குறைபாடு, ’டிஸ்பிராக்சியா’, ’டிஸ்பேசியா’ என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன. 

இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இதனைக் கண்டறிந்து, அதற்கான பயிற்சி அளித்து, மாணவர்களை, மேம்படுத்தவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கற்றல் குறைபாடுள்ளவர்கள், மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், ஓரளவு மட்டுமே கல்வியில் பின்தங்கி இருப்பவர்களாக துவக்கத்தில் காணப்படுவர். இதனை சரிசெய்யாமல் விடுவதால், அடுத்தடுத்த வகுப்புகளில், அவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. 

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, இக்குறைபாடுகளுக்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ’ஆல்பாஸ்’ முறையினால், இவ்வாறு கற்றலில் பின்தங்கும் மாணவர்கள் குறித்தும் பெரிதானதொரு விழிப்புணர்வு இல்லை. இதனால், பொதுத் தேர்வு வகுப்புகளில், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் இல்லாமல், தேர்ச்சி விகிதம் சரிந்தது. 

இக்குறைபாடுகளை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கு முறையே பயிற்சி அளித்து, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, கல்வித்துறை பல்வேறு தேர்வுகளை, நடத்த துவங்கியது. மாணவர்களின், கல்வித்திறன் மட்டுமின்றி, பல்வேறு இணை செயல்பாடுகள் மூலம், அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் அளவிடப்படுகிறது. 

இந்த அளவுகளைக் கொண்டு, அம்மாணவர் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை ஆசிரியர் பயிற்றுனர்கள் பதிவு செய்தனர்.ஒருங்கிணைந்த கோவை, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்குட்பட்ட, 22 வட்டாரங்களில் கடந்த 2014-15 கல்வியாண்டில் 40, 2015-16 ல் 39, நடப்பு கல்வியாண்டில், 43 குழந்தைகளும், கற்றலில் பின்தங்கியவர்களாக உள்ளனர். 

மாவட்ட திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ”இதுவரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், மாணவர்களுக்கு அளித்த பயிற்சி அடிப்படையில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்தனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பட்டியல் தயார்படுத்தப்படவில்லை. 

ஒரு மாணவர் நுாறு சதவீதம் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை துல்லியமாக கண்டறிய, ’சிறப்பு செயல்திறன் பயிற்சியை, கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இதன்படி, குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

நடப்பு கல்வியாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருமென கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில், மாணவர்களுக்கு எழுத்து தேர்வு, செயல்திறன் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது, ” என்றார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்; ’இஸ்ரோ’ தகவல்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஐந்து ஆண்டுகளில் இது நிறைவேறும்,” என, ’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.


விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப கண்காட்சியை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:

வெளிநாடுகளில் உடல் நலம், சுகாதாரம் குறித்து உயிரியல், ’நானோ’ அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. மந்தபுத்தி உள்ளவர்களுக்கு ’நியூரான்’ செலுத்தி சோதனை நடக்கிறது. 

அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூக ரீதியில் மாறி வருகின்றன. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் குச்சியில், ’சென்சார்’ கருவிகள் பொருத்தினால் துணை இல்லாமல் செல்லலாம். இந்த ’சென்சார்’ குறைந்த விலையில் சிங்கப்பூரில் கிடைக்கிறது. 

’இஸ்ரோ விண்வெளி வாரம்’ ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பரில் நடக்கிறது. அப்போது பள்ளி, கல்லுாரிகளில் ராக்கெட் தயாரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 

இந்தியாவில் இருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்த 5 ஆண்டுகளில் இது நிறைவேறும், என்றார்.

nata | பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


DEE PROCEEDINGS- தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் RIESI ஆல் 16/1/17 முதல் 14/2/17 வரை பயிற்சி அளித்தல் - கலந்துகொள்ளும் ஆசிரியர் விவரம் கோருதல் சார்பு

DSE PROCEEDINGS- DETAILS CALLED FOR PTA LEADERS LIST - REG

தொடக்கக்கல்வி செயல்முறைகள் நாள்:06/01/2017 - ஆசிரியர்களின் ஊதியம், பணப்பலன்கள், பணிப்பதிவேடு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - AEEO களுக்கு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்(பழைய பதிவுகள் ஏதேனும் விடுபட்டு இருப்பின் தற்போது உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலரே ஆவணங்களை சரிபார்த்து பதிவுகளை மேற்கொள்ளலாம்)



பேச்சு நடத்த அமைச்சரை அழைத்த ஆசிரியர்கள் கைது

Image may contain: text

TRB - அரசுப் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு. (நாள்:06.01.2017)

📝 அரசு பொறியியல்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடிநியமனத்துக்கு
நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர்தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
📝 இதில் தகுதிபெற்றவர்களுக்கு வருகிற 19,20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

📝 அரசுப் பொறியியல்கல்லூரிகளில் காலியாக இருந்த 192 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பைகடந்த 2014 ஆம் ஆண்டு டிஆர்பிவெளியிட்டது.

📝 அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக, இந்தப் பணியாளர் தேர்வுப் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

📝 அதன் பிறகுவயது உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

📝 விண்ணப்பதாரருக்கான அதிகபட்சவயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

📝 பின்னர் மீண்டும்அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 22-10-2016 அன்று எழுத்துத் தேர்வுநடத்தப்பட்டது.

📝 மொத்தம் 48,286 பேர்விண்ணப்பித்ததில் 27,635 பேர் பங்கேற்று தேர்வுஎழுதினர்.

📝 இந்தத் தேர்வுக்கானமுடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

📝 தேர்வு எழுதியஅனைவருக்குமான முடிவுகள் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

📝 அதனுடன் சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

📝 ஒரு இடத்துக்குஇருவர் என்ற அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்கள்தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

📝 சான்றிதழ் சரிபார்ப்பானதுசெனனை கிழக்கு தாம்பரத்தில் பாரத்மாதா சாலையில் அமைந்துள்ள ஜெய் கோபால் கரோடியாதேசிய உயர்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

📝 இதற்கான அழைப்புக்கடிதத்தை டிஆர்பி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்துகொள்ள வேண்டும்.


📝 அழைப்புக் கடிதம்தனியார் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை !!

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக, 15.04 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஜன., 
25க்கு பின் வழங்கப்படும். தற்போதே அடையாள அட்டை பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்காக, புதிய மென்பொருள் தயார் செய்துள்ளோம். இதன்மூலம், புதிய வாக்காளர்களுக்கு, ஜன., 25க்கு பின், அவர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை, அரசு இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக அடையாள அட்டையை பெறலாம். புதிய அடையாள அட்டை வந்து சேரவில்லை என்ற புகாரை தவிர்க்க, இந்த ஏற்பாட்டை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை முதலிடம்! : வாக்காளர் எண்ணிக்கையில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 20.07 லட்சம் ஆண்கள்; 20.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், 40.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன.
அரியலுார் மாவட்டத்தில், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில், 2.49 லட்சம் ஆண்கள்; 2.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் !!

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., 
பதவிக்கான, 11 காலியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஆகஸ்டில் நடந்தது; 2,432 பேர் பங்கேற்றனர். மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வான, 30 பேருக்கு நேர்காணல், வரும், 19ல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்.

வேலை இல்லையா ?? மாதம் ரூ.40 ஆயிரம் உதவித்தொகை !

பின்லாந்து நாட்டில், வேலை இல்லாதவர்களுக்கு, மாதந்தோறும், 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென, அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில்ஒன்றான பின்லாந்தில், தனியார் துறையில் பணிபுரி வோர், சராசரியாக மாதந்தோறும், 2.50 லட்சம் ரூபாய் 
சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையில், வேலை இல்லாத, 2,000 பேருக்கு, மாதத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென, அந்நாட்டு அரசுஅறிவித்துள்ளது.

’சோதனை முறையில், இரு ஆண்டுகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படும். முதற்கட்டமாக, 2,000 பேர், இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். உதவித்தொகை பெறுவோர், செலவுக்கான ஆதாரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை’என, பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இதே போல், சுவிட்சர்லாந்து நாட்டு அரசு, உதவித்தொகை வழங்குவதாக அறிவித்த போது, ’வேலை கொடுத்தால் போதும்; உதவித்தொகை தேவையில்லை’ என, அந்நாட்டு மக்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும்; அரசு அறிவிப்பு!!!

ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக வணிகவரி கமி‌ஷனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;–அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி.



நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விரைவில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு (ஜி.எஸ்.டிஎன்.) நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (டி.ஐ.என்.) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். 1.1.2017 முதல் இந்த பதிவை வணிகர்கள் மேற்கொள்ளலாம்.இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய தற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு, வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித்துறை இணையதளம் https://ctd.tn.gov.in மூலமாக வழங்கப்படும்.முகாம்கள் நடக்கும்

தற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு பெற்றவுடன் ஜி.எஸ்.டி. இணையதளத்தை உபயோகப்படுத்தி இந்த பதிவை பூர்த்தி செய்ய வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி. பதிவை பூர்த்தி செய்ய https://ctd.tn.gov.in இணையத்தில் உள்ள உதவி கோப்பை (ஹெல்ப் பைல்) பயன்படுத்திக் கொள்ளலாம்.வணிகவரித்துறையின் சார்பில் மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட உள்ளது. அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணைய தளத்தில் பதிவு பெற இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த முகாம்களின் விவரம் வணிகர்களுடைய வரிவிதிப்பு வட்டங்களில் தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.