யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/6/17

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - RTI

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89
லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய்ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை.தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது.இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார்.


அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு ஊழியர் கூட்டுறவு தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு

பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் அரசு, பொது மற்றும் தனியார்துறை பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு தனிநபர் கடன் 7 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது.
விலைவாசி மற்றும் சம்பள உயர்வு காரணமாக அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென, சிக்கன நாணயச் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் வங்கிகளில் பணியாளர்களின் ஊதியம் அடிப்படையில் தனிநபர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பை 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த உத்தரவில், கடனை 120 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். மொத்த சம்பளத்தில் 25 மடங்கு (அ) 12 லட்சம் ரூபாய் இதில் எது குறைவோ அத்தொகையே கடனாக வழங்கப்படும். பணியாளர்களின் மொத்த ஊதியத்தில் அனைத்து பிடித்தங்களும் போக வீட்டிற்கு கொண்டு செல்லும் ஊதியம் 25 சதவீதத்திற்கு குறைவாக இருக்காதபடி கடன் வழங்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்:
தரவரிசை பட்டியலை www.annauniv.edu, www.tnea.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
*பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 27ம் தேதிநடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
*பொறியியல் 200க்கு  200 கட்- ஆப்  59பேர்.இந்தாண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இன்ஜி., கலந்தாய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் 59பேர் 200க்கு 200-ம், 811 பேர் 199-ம், 2,097 பேர் 198, 3,766 பேர் 197 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.பொது தேர்வு முடிவுகளை போன்று முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

டிப்ளமா' ஆசிரியர்: இன்று ஹால் டிக்கெட்

டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்றுமுதல், ஜூலை, 5 வரை, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பில், இரண்டாம் ஆண்டுக்கு, ஜூன், 28 முதல், ஜூலை, 12 வரையும், முதல் ஆண்டுக்கு, ஜூன், 29 முதல், ஜூலை, 14 வரையிலும் தேர்வு நடக்கிறது.இதற்கு விண்ணப்பித்த, தனித்தேர்வர்கள் மற்றும் தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள், தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல்ஜூலை, 5 வரை, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் இன்று(ஜூன் 23ம் தேதி) வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.மறு கூட்டலில் மாற்றம் இல்லையெனில் இணையதளத்தில் முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு :

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அந்த பணியை செய்ய இருக்கிறது. அதில் கலைதிட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தயாரித்து  வடிவமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணியை அனுபவம் மிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இணைய தளம் மூலம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த கால அவகாசம் ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இன்ஜி., மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.
பின் அவர் அளித்த பேட்டி: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஜூன் 27ல் துவங்க திட்டமிட்டுள்ளோம்.ஆனால், நீட் தேர்வு முடிவு தாமதமானால், கவுன்சிலிங் தேதி தள்ளிப்போகும். தற்போதைய நிலையில் 200க்கு 200, 'கட் ஆப்' பெற்றவர்கள் 59 பேர் உள்ளனர். இவர்களில் 36 பேர் மருத்துவப் படிப்பில் இடம் பெற வாய்ப்புள்ளது. 199 கட் ஆப் பட்டியலில் உள்ள 811 பேரில் 645 பேரும்; 198 கட் ஆப் பட்டியலில் உள்ள 2,097 பேரில் 1,681 பேரும்; 197 கட் ஆப் பட்டியலில்உள்ள 3,766 பேரில் 3,014 பேரும் மருத்துவப் படிப்புஇடம் பெற தகுதியுடன் உள்ளனர்.இவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால், அவர்கள் இன்ஜி., படிப்புக்கு வர மாட்டார்கள். எனவே இன்ஜி., கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்தினால் மருத்துவம் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் இன்ஜி., இடங்கள் காலியாகி,அதை மீண்டும் நிரப்ப முடியாத சிக்கல் ஏற்படும்.எனவே, மருத்துவ கவுன்சிலிங்குக்கு பின்பே இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 31க்குள் இன்ஜி., கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும்.தற்போது நீட் தேர்வால், இன்ஜி., கவுன்சிலிங் தள்ளிப்போகும் என்பதால் ஜூலை 31க்கு பிறகும் கவுன்சிலிங் நடத்த, சட்டரீதியாக அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 11 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 67 படிப்புகள், கல்லுாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 527 கல்லுாரிகளில், இரண்டு லட்சத்து, 85 ஆயிரத்து 844 இடங்களுக்கு, அரசுமற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இடங்களின் எண்ணிக்கை, இறுதி நேரத்தில் மாறும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் தர்ணா - கைது :

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டில் கணினிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 330 பேர் கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு மாதம் ரூ.4000 என தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது.
இவர்கள், கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கால முறை ஊதியம் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு தரப்பில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு அறப்போராட்டம் நடத்தினர்.


நேற்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்த கணினி பயிற்றுநர்கள் அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு போவதாக பதிவு செய்துவிட்டு உள்ளே வந்தனர். பின்னர் 11.30 மணி அளவில் இரண்டாவது நுழைவாயில் அடுத்துள்ள அருங்காட்சியகத்தின் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சட்டப்பேரவை கூட்ட நிகழ்ச்சி தொடங்கி உள்ளே விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது கணினி பயிற்றுநர்கள் அந்த வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பதற்றம் அடைந்தனர். அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.கூடுதல் ஆணையர் கேள்வி : தர்ணாவில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பயிற்றுநர்களைபோலீசார் தூக்கி தலைமைச் செயலகத்துக்கு வெளியில் கொண்டு சென்றனர். அங்கும் அவர்கள் தர்ணாவில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

 இந்த பரபரப்பு சம்பவத்தால் அங்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்த கூடுதல் ஆணையர் ஜெயராமன், போலீசாரை கடுமையாக எச்சரித்தார். தர்ணாவில் ஈடுபட்டவர்கள் எப்படி உள்ளே வந்தனர். அவர்களை எப்படிஅனுமதித்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.இதனால் போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

CLICK HERE FOR NEET - 2017 RESULTS
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் கடந்த 12 ஆம் தேதி அனுமதி அளித்திருப்பதை அடுத்து, இன்று அல்லது நாளை என எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுவை சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) மே 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 11.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது சிபிஎஸ்இ பதில் விளக்கம் அளித்திருந்தது. அப்போது, ஜூன் 8 ஆம் தேதியே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

சிபிஎஸ்இ விளக்கத்தை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நீட் தேர்வு முடிவுகளை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Flash News:தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் தொடக்கம்.

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு வரும் ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்னரே தமிழகத்தில் மாநில மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படும், ஒரு வாரத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் SSA Upper Primary Block level பயிற்சிகள் RMSA உடன் இணைந்தே நடைபெறும் .

6,7,8,9,10 ஆகிய வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே வளாகத்தில் பயிற்சி

Upper Primary SSA block level training 
இனிமேல் RMSA உடன் இணைந்தே நடத்தப் படும் .
RMSA ஆசிரியர்கள் , BRTEs இதில்
சேர்ந்தே  கருத்தாளராக பங்கேற்க வேண்டும்

ஒரே வளாகத்தில் நடத்தப்படும் இப்பயிற்சியில்
 9,10 எடுக்கும் ஆசிரியர்களுக்கு தனி அறையிலும் ,
6,7,8 எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
 ( both middle , HIgh , and. Hr .sec school )
 தனி அறையிலும் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும்
( ஆனால் வளாகம் ஒரே வளாகம் தான் )


11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கு
 தயாராகும் விதத்தில்
RMSA
Rashtriya Avishkar Abhiyaan ( RAA ) என்ற பெயரில் விரிவடைகிறது .

நோக்கம் நல்ல நோக்கம்
NEET போன்ற போட்டித் தேர்வுக்கு
மாணவர்களை தயார் செய்தல்

பயிற்சியில் பாடம் தவிர பிற அரட்டைகள் , நகைச்சுவைக்காக வெளி விஷயம் கூறல் போன்றவை இருக்கக் கூடாது

பாடம் சார்ந்த பயனுள்ள தகவல் மட்டுமே
பகிரப்பட வேண்டும்

சரியாக பாடம் எடுக்காத கருத்தாளர் பற்றிய
புகாரை What's app logo வை scan செய்து
Education secretary க்கு பயிற்சி மையத்தில் இருந்தே பங்கேற்பாளர்கள் புகார் அளிக்கலாம்

Skype மூலம் ONLINE VIDEO CONFERANCE இல் பள்ளிக் கல்வி செயலர் , ஒவ்வொரு மையத்தையும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்வார் .நோக்கம் , தரமான பயிற்சி .

FEED BACK படிவங்களை பயிற்சி மையங்களில் இருந்தே , ONLINE மூலமாக
ஆசிரியர்கள் வழங்க , கூடிய விரைவில்,  வசதிகள் செய்யப்படும்

புதிதாக வரவிருக்கும் பாடத்திட்டத்திற்கு
புத்தகம் எழுதும் பணிக்கும் , ஆசிரியர்களுடன்
BRTE s உம் , சேர்ந்தே கலந்து கொள்ள வேண்ணடும்
*RMSA (SSA combined ) பயிற்சிகள்*
 நடைபெறும் மையங்களில் கருத்தாளர்கள் ( RPs ) முறையாகப் பாடம் மற்றும் பயிற்சி எடுக்கிறாரா ???
பயிற்சி முறையாக ,நன்றாகச் சென்று கொண்டிருக்கிறதா ???

 என்பதை நொடிக்கு நொடி கண்காணித்து
 Education Secretary க்கு அனுப்ப
*MICRO OBSERVER* ஒருவர் நியமிக்கப் பட்டு
அந்தப் பயிற்சி மையத்தின் பயிற்சியின் *current  status -  Education secretary க்கு* *Video conference* ( video call )  மூலம் Micro observer ஆல் தெரிவிக்கப்படும் . இதன் பிரதான நோக்கம் ஒன்றே ஒன்றுதான்
*பயிற்சி தரமான பயிற்சியாக சென்றடைய வேண்டும்*