குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1⃣8⃣ வயதிற்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் இருந்து வந்தது. இந்நிலையில், இத்தகைய குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.