யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/12/18

இதெல்லாம் நடக்கும் என்று 100,101 G.O வெளிவந்த போதே யூகித்தோம். அதனால் தான் அதனை எதிர்த்தோம்.அடுத்து...........நடுநிலைப்பள்ளிகளை இணைத்தால் ஆசிரியர் பற்றாக்குறையே இருக்காது.போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.BEO அலுவலகங்களையும் மூடி விட்டால் ஊழியர் பற்றாக்குறையும் இருக்காது. பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு போடுவார்,Ceo,Deo க்கள் Mail ல் போடுவர்.தலைமை ஆசிரியர்கள் Mail பார்த்து Particulars அனுப்புவர். நிர்வாகம் சுலபம்,நிர்வாக செலவுகள் மிகவும் குறையும்.ஆசிரியர், ஆசிரியரல்லா பணியாளர் நியமனமே குறைந்தது 10 ஆண்டுகளுக்கு செய்யப்போவதில்லை.(மாணவர்கள் இருந்தால் Appointment செய்வோம் என மக்களை ஏமாற்றலாம்) சீர்திருத்தம் என்ற பெயரில் இலவசக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து கல்வித்துறையை படிப்படியாக தனியாருக்கு முற்றிலும் தாரை வார்ப்பதுதான் Plan. வழக்கம்போல இது அரசின் முடிவு.நாமென்ன செய்ய முடியும்?என ஆசிரிய சமூகம் வாளாயிருந்தால் பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல நமது தலைமுறையினர் அனைவரும் என்பதை உணர்வீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக