யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/9/18

அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் ஆசிரியர்பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கும் என தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், இன்று முதல் செயல்படத்தொடங்கும். சுமார்3000 ஆசிரியர்களை கொண்டு 3 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும்.ஜெ.இ.இ தேர்வை தமிழ் மொழியில் எழுத மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமேஇல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். சட்ட சிக்கல் தீர்ந்த பின் அவர்கள் நியமன தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்

                                          
பண்ருட்டி அருகே புதிதாக துவங்கிய இணைப்பு துவக்கப்பள்ளிக்கு  ஆசிரியர்கள் வர மறுத்ததால் தற்போது முன்னாள் ஆசிரியரை கிராம மக்கள் நியமித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காவனூர் ஊராட்சி உளுந்தாம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
அருகில் உள்ள காவனூர் கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியாக பள்ளி  வேண்டும் என பத்து வருடமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உளுந்தாம்பட்டு பள்ளிக்கு  காவனூர் மாணவர்களை அனுப்ப மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி நடந்த குறைகேட்பு  கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், காவனூர், உளுந்தாம்பட்டு, மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக உளுந்தாம்பட்டில் உள்ள பள்ளியில் காவனூர் மாணவர்கள்  செல்வதில் சிக்கல் உள்ளது என அதில் கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காவனூர்  கிராமத்துக்கு இணைப்பு பள்ளியை வட்டார கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் வந்தபோது ஆசிரியர்களும் துவங்கிய நாள் மட்டுமே வந்து கல்வி போதித்தனர். 4, 5, ஆகிய இரு தினங்களில் பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் வர மறுத்துவிட்டனர்.

இதனால் மாணவர்கள் வகுப்பறையில் கல்வி கற்க முடியாமல் அமர்ந்திருந்தனர். இதனால் பெற்றோர்கள் அவசர கூட்டம் கூட்டி முடிவெடுத்தனர். இதில் ஆசிரியர்கள் வராததால் நமது கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரும், பத்திரிகையாளருமான சகுந்தலாநாராயணன் என்பவரை கல்வி போதிக்க செய்தனர். சத்துணவு சமைப்பதற்கும் உள்ளூர் சமையலரை வைத்து சமையல் செய்து வழங்கப்பட்டது. நேற்று ஆசிரியர்கள் தினம் என்பதால் ஆசிரியர்கள் வருவார்கள் என நினைத்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து  காவனூர் கிராம பெற்றோர்கள் கூறியதாவது: உளுந்தாம்பட்டில் இயங்கி வரும் பள்ளிக்கு எங்கள் கிராமத்திலிருந்து பிள்ளைகள் செல்வதில் மிகுந்த சிரமம்  உள்ளது.

நாங்கள் தனியாக கேட்ட பள்ளி தற்போது கிடைத்துள்ளது, இந்த பள்ளிக்கு தேவையான இடங்கள் 20 சென்ட் 2009ம் ஆண்டே வாங்கி வைத்துள்ளோம். காவனூர்  பகுதி பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் வரவில்லை என உளுந்தாம்பட்டு பள்ளியில் கேட்டபோது எங்களுக்கு போதிய அளவிற்கு மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மீறி ஆசிரியர்கள் சென்றால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறினர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவனூர் பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு-மத்திய அரசு

குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பதை தடுக்க, ஆதரோடு இணைக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் அனைத்து விவரங்களும் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனை ஆதார் விவரங்களோடு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

 அதன்படி, இதுவரை குடும்ப அட்டையை ஆதாரோடு பதிவு செய்யாதவர்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயர் கல்வி உதவி தொகைக்கு வருமான வரம்பு உயர்வு!!

உயர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு, உயர்த்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமா முடித்து, உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்லுாரிகளில், இளநிலை பட்ட படிப்பில் சேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும், 82 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, கல்வி உதவித்தொகை, மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவர்களின், குடும்ப ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என, ஏற்கனவே நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது
தற்போது, வருமான உச்சவரம்பை அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இனி, ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய் வரை உள்ள, குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், மத்
...

கற்பித்தல் மட்டுமே ஆசிரியர் பணி அல்ல: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கற்பித்தல் மட்டும் ஆசிரியர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது. மாணவர்களுக்கு ஆலோசகராகவும், பல பரிமாணங்களில் தேடலுக்கு வழி செய்பவராகவும் விளங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் 130-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது விழா ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
373 ஆசிரியர்களுக்கு விருது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் காந்திய அனுபவக் கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி என்ற நூலை முதல்வர் வெளியிட்டார். 373 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளி விருதுகளை வழங்கி அவர் பேசியது:
ஆசிரியர் என்பவர் கற்பித்தலில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. அவதானி, ஆலோசகர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் தேடலுக்கு வழி செய்பவராக விளங்க வேண்டும் என கல்வியாளர் லூயில் கோகலே என்பவர் கூறியுள்ளார்.
ஏட்டுக் கல்வியின் வரையறையைத் தாண்டி, பரந்த பரிமாணத்தில், சமூக பொறுப்புடன் தீர்மானிக்கும் திறனோடும், வசீகரிக்கும் தன்மையோடும், சினேகித மனோபாவத்தோடும், சமூக மேம்பாட்டுக்கு வழிகாட்டும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
தியாக மனப்பான்மை கொண்டவராகவும் கற்பிக்கும் தொழிலில் பெரும் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள்.
மாணவ சமுதாயமும் தங்களின் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
கல்வித் துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள், 32 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகம் என மாணவர்களை மேம்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
மாணவ சமுதாயம் நினைத்தால்...மாணவ சமுதாயம் நினைத்தால் எதையும் செய்ய இயலும். இதை ஆசிரியர்களும் நன்கு அறிவர். எனவே, மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பாட நூல்களைத் தாண்டி, மாணவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தற்போது சமூக நலன் சார்ந்து தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
இந்த விழாவில் வழங்கப்பட்ட விருதின் மூலம், ஆசிரியர்களுக்கு புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. விருது என்கிற பயணச்சீட்டைத்தான் உங்களுக்கு வழங்கியுள்ளோம். இன்னும் நீங்கள் பயணிக்க வேண்டியது நீண்ட தொலைவு இருக்கிறது. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களாகவே இருந்து புதிது புதிதாகப் படிக்க வேண்டும். தான் படித்தவற்றை தன் மாணவர்களுக்கு தொடர்ந்து கற்பித்து வர வேண்டும். அதுதான் நீங்கள் மாணவர் சமுதாயத்திற்கு செய்யும் சீரிய தொண்டாகும் என்றார் முதல்வர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாணவ சமூகத்துக்குத் தேவையான அறிவாற்றல், தன்னம்பிக்கை போன்றவற்றைக் கற்றுத் தந்து மாணவர்களை அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னதப் பணியினை மேற்கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.
பள்ளிகளில் நிலவும் சூழலை மிகத் திறமையாகக் கையாண்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வியறிவை ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது உழைப்பால், சமூகத்தின் மீது உள்ள அக்கறையால் மேற்கொள்ளும் சிறப்பு பணியை பாராட்டியே, இன்றைய தினம் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது என்பது ஆசிரியர்களின் கல்விப் பணியை மேலும் சிறப்புடன் செய்வதற்காக வழங்கப்படும் பெருமையாகும்.
இதனைச் சரியான முறையில் ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொண்டு, சமூகத்தின் உயர்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார் அவர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்

துப்பட்டாவால் முகத்தை மூட தடை : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நிபந்தனைகள்

மாணவியர்,
 துப்பட்டாவால் முகத்தை மூடுவதற்கு, அண்ணா பல்கலை தடை விதித்துள்ளது
*சென்னை, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைமுடிந்துள்ளது
*புதிய மாணவர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், ஒருங்கிணைப்பு பயிற்சி துவங்கியது
*அதில், புதிய மாணவர் கள், பல்கலை மற்றும் கல்லுாரி வளாகத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும்; பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன
*சீனியர்' மாணவர்கள், 'ஜூனியர்' மாணவர்களை, 'ராகிங்' செய்யாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
*இதற்காக, அண்ணா பல்கலையின், கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் கட்டடவியல் கலை படிப்புக்கான, 'ஆர்கிடெக்ட்' கல்லுாரி வளாகங்களில், ராகிங் தடுப்பு வாகனம், ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது
*பல்கலையின் வளாகத்தில், ராகிங் தடுப்பு குழுவினர், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
அதேபோல், மாணவ - மாணவியருக்கு, சுய ஒழுக்கம் தொடர்பான, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன
அதன் விபரம்
*வளாக பகுதிகளில், அரட்டை அடித்து, நேரத்தை வீணடிக்கக் கூடாது; வகுப்புகளை புறக்கணிக்காமல், பங்கேற்க வேண்டும்
*மாணவ மாணவியரிடம் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
*பல்கலை வளாகத்திற்குள், காதில், 'ஹெட் போன்' கருவி அணிந்து வரக் கூடாது
*மொபைல் போன், 'ஹெட்செட்டை' கல் லுாரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களும், மாணவி யரும், கைக்குட்டை மற் றும் துப்பட்டா போன்ற வற்றால் முகத்தை மூடி, வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது
*வாகனத்தில் வரும்போது, 'ஹெல்மெட்' அணிந்திருந்தால், அதில், முகத்தை மூடும் கண்ணாடியை, திறந்து விட்டிருக்க வேண்டும்
*ஒவ்வொரு மாணவியும், அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்
*பேராசிரியர்களும், பல்கலை ஊழியர்களும், காவலாளிகளும், அடையாள அட்டையை காட்டச் சொன்னால், மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும்
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

சான்றிதழ்களில் ஆதார் பதிய தடை : கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு :

*மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு, திடீர் தடை விதித்துள்ளது.
*நாடு முழுவதும், அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நிர்வாக செயல்பாடுகளுக்காக, ஆதார் எண் சேகரிக்கப் பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ - மாணவி யரிடமும் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு, கல்வி நிறுவன தகவல் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளது.
*மேலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி, சான்றிதழ்களை சரி பார்க்கவும், சான்றிதழ்களை வழங் கவும், ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப் பட்டு இருந்தன. இந்நிலையில், ஆதார் எண்ணை, சான்றிதழ்களில் பதிவு செய்ய, மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
*இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல் கலைகளுக்கும், அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில், 2017 மார்ச்சில், கல்வி நிறுவனங் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
*இதில், மாணவ - மாணவி யரின் ஆதார் எண்ணை பயன்படுத்துவது தொடர்பான, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில், ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதன் வழியே, தனிநபர் ரகசியங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
*எனவே, பல்கலைகளும், கல்லுாரிகளும், தங்கள் மாணவர்களின் சான்றிதழ்களில், ஆதார் எண்ணை, எந்த காரணம் கொண்டும் பதிவிட வேண்டாம்.
*மேலும், ஆதார் எண்ணை, வேறு பயன்பாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.இந்த உத்தரவை பல்கலைகளும், கல்லுாரிகளும் உடனடியாக பின்பற்றி, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை தொட்டு வணங்கிய மாவட்ட ஆட்சியர்!

சேலம் கோட்டை  மாநகராட்சி
 பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 
பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை ஒருவரின் காலில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விழுந்து ஆசி பெற்றார். மேலும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்து தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்பறை ஆசிரியருக்கும் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியருக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகளை கொடுத்து வா
ழ்த்து தெரிவித்தனர்.





நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, ''மாணவ செல்வங்கள் ஒழுக்கத்தை கடைபிடித்து நன்றாக படிக்க வேண்டும் என்அறிவுரை கூறி அமர்ந்தார். அதையடுத்து பேசிய சேலம் கலெக்டர் ரோஹிணி, ''ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக் காட்டும் போது கோபித்துக் கொள்ளாமல் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய வளர்ச்சிக்கும் நன்மைக்குமே அக்கறையாக கண்டிக்கிறார்கள்'' என்று கூறினார்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் விபரம்!!!

27 ஆண்டுகளாக வாங்கப்படாத மதிப்பெண் சான்றிதழ், பட்டய சான்று பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவிப்பு...!!

EMIS' பதிவேற்றப் பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை!!!