யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/2/17

இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா? தகவல் ஆணையம் கேள்வி?

இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) இருந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் பிரத்யோத் குமார் மித்ரா என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவை ஆட்சிபுரிந்து வந்த பிரிட்டீஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்காக இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நாட்டின் பல்வேறு 
பகுதிகளில் இருந்து ஆட்களைத் திரட்டி இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்தார்.
ஆனால், சில காலத்துக்குள்ளாக எனினும், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் யாரும் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை. பிரிட்டீஷ் ராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் என்பதால் அவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. உண்மையிலேயே, இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா அல்லது பிரிட்டீஷ் ராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களா? என அந்த மனுவில் தகவல் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்துக்கு இந்த மனுவை அனுப்பியது.
இந்த மனுவை ஆய்வு செய்த தேசிய ஆவணக் காப்பகம், அதுதொடர்பான சில ஆவணங்களை மனுதாரருக்கு அனுப்பி வைத்தது. அதிலிருந்து தேவையான தகவலை எடுத்துக்கொள்ளுமாறும் மனுதாரரிடம் தெரிவித்தது.
இதனால் அதிருப்தியடைந்த மனுதாரர், இதுதொடர்பாக தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். அதன் விவரம்: ஆவணங்கள் அல்லது கோப்புகள் தொடர்பாக தகவல்களைக் கோரும்போது, அதனை தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைப்பது உள்துறை அமைச்சகத்தின் உரிமைதான்.
ஆனால், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிய இந்திய தேசிய ராணுவத்தினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்படாததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமையாகும். இதனைத் தெளிவுபடுத்துவதன் மூலமாகவே இந்திய தேசிய ராணுவத்தினர் மீது படிந்திருக்கும் களங்கத்தை துடைக்க முடியும்.
எனவே, இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் இந்த மனுவுக்கு உரிய பதிலளிக்க வேண்டும்

வேலைவாய்ப்பு செய்திகள் !!

முக்கிய அறிவிப்பு...!

வருகின்ற 18-02-2017 சனிக்கிழமை,  சென்னையில் உள்ள  Tambaram தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது  இதில் தலை சிறந்த Corporate Companyகள் கலந்து கொண்டு  வேலை வாய்ப்பு வழங்குகின்றன.  Core - B.E, M.E, M.Tech, B.Tech, MBA, MCA, MA,  BCA, BISM, BBA, BSC, BA,கள் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...


 1500+ பேர் வரை பயன் பெறுவர்.

[நேரம்  காலை 9.00 - மாலை 3.00 மணி]

இதில் ITI முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...
இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை Tambaram Dhanalakshmi Engg College - DCE மற்றும் Genius Consultant Ltd, இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு: 8939174777- க்கு தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது  மற்ற குரூப்க்கு பகிருங்கள்...

உங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...

மெரீனா பக்கமே யாரையும் போக விடாதீங்க.. பழனிச்சாமிக்கு 'ஆர்டர்' போடும் சு. சாமி !!



சென்னை மெரீன் கடற்கரை முழுவதுமே 144 தடை சட்டத்தைப் பிரயோகித்து யாரையுமே அந்தப் பக்கம் போக விடக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிட்டத்தட்ட உத்தரவிடுவது போல கூறியுள்ளார் சு.சாமி.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதோ அரசாங்க உத்தரவிடுவது போல உள்ளது சாமியின் டிவீட். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பழனிச்சாமி அரசு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் மெரீனாவில் உள்ள கலங்கரை விளக்கம் வரை 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இங்கு கூடுவோர் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பிரயோகித்து கைதாவோரை குறைந்தது 1 மாதம் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.
முன்பு சசிகலாவுக்கு ஆதரவாக பேசி எழுதி வந்த சாமி தற்போது சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கிளம்பியுள்ளார்.

எம்.எல்.ஏ. பதவி போனாலும் பரவாயில்லை மனசாட்சிப்படி வாக்களிப்பேன்: மயிலாப்பூர் நடராஜ் ,போர்கொடி !!

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த பின்னர் சசிகலா தரப்புக்கு 122 பேரும், ஒ.பன்னீர்செல்வத்துக்கு 10 பேரும் ஆதரவு அளித்தனர். இதில் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் மவுனம் காத்து வந்தனர்.


*இந்த நிலையில் இன்று நடராஜ, தனது எம்.எல்.ஏ. பதவி பறிபோனாலும் பறவாயில்லை. நான் நம்பிக்கை* *வாக்கெடுப்பின்போது மனசாட்சிப்படி வாக்களிக்க முடிவு செய்துள்ளேன் என கூறி பரபரப்பை ஏறுபத்தியுள்ளார்.

அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்!!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்த, 'மேத்ஸ் கார்னர்' விரைவில் துவக்கப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் உள்ளது. ஆனால், இது சில நேரங்களில் எதிர்மறையாக அமைந்து 
விடுகிறது.பாஸ் செய்து அடுத்தடுத்த வகுப்புகளில் காலடி எடுத்து வைத்தும், மாணவர்கள் குறைந்தபட்ச கற்றல் திறன்கூட இல்லாமல் உள்ளனர். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வந்தும்கூட மாணவ, மாணவியரில் சிலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுகின்றனர்.தமிழ் மொழியை வாசிக்கத் திணறும் இந்த மாணவர்கள் கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களைப் படிப்பது கடினமாகும்.எனவே, தனி கவனம் எடுத்து தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும், கணிதம் கற்றுத் தருவதும்அவசியமாகிறது.இதற்காக, புதுச்சேரி அரசு துவக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வாசிப்புடன் கூடிய 'மேத்ஸ் கார்னர்' துவங்க, திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய அரசின் சர்வ சிக்க்ஷா அபியான் திட்டத்தின் துணை திட்டமான 'பதே பாரத்; படே பாரத்' (படிக்கும் இந்தியா; முன்னேறும் இந்தியா) திட்டத்தின் கீழ், ரொக்கமில்லாத பரிவர்த்தனை முறையில் 5 ஆயிரம் ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் சுகாதார துாதர் திட்டம் அறிமுகம் செய்து, கழிப்பறை சுகாதாரம் குறித்து கண்காணிக்கப் பட்டது. இதற்கு, நல்ல பலன் கிடைத்தது. அதேபோன்ற நடைமுறையை 'மேக்ஸ் கார்னர்' விஷயத்திலும் நடைமுறைப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு துாதர் என, ஒரு மாணவர் நியமிக்கப்பட உள்ளார்.இந்த 'ஹைக்டெக்' திட்டத்தின் மூலம், புதுச்சேரி பிராந்தியத்தில் 5117 மாணவர்கள், காரைக்கால்- 1859, மாஹி-505, ஏனாம்-775 என, ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8,256 பேர் பயனடைய உள்ளனர்.அதன்படி, 3,993 மாணவர்கள், 4,263 மாணவிகளுக்கு எழுதவும், வாசிக்கவும், கணிதத்தில் சாதிக்கவும் கற்றுக்த் தரப்பட உள்ளது. இதற்காக, 2 ஆயிரம் புத்தகங்கள் கதைகளுடன் கூடிய கல்வி நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.என்.சி.இ.ஆர்.டி., புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும் ஆய்வு நடத்தியது. இரண்டு வகுப்புகளிலும், தேசிய சராசரியை காட்டிலும் புதுச்சேரி துவக்கப் பள்ளி மாணவர்கள் மேலோங்கியே இருந்தனர்.மூன்றாம் வகுப்பில் தேசிய அளவில் மொழிப்பாட கற்றல் திறன் 64 மதிப்பெண் ஆக இருந்தபோது, புதுச்சேரி மாணவர்களின் கற்றல் திறனில் 73 மதிப்பெண் ஸ்கோர் செய்து சாதித்தனர். கணிதத்தில், தேசிய சராசரி 60 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 75 மதிப்பெண் பெற்று, முத்திரை பதித்தனர்.ஐந்தாம் வகுப்பிலும் கணித பாடத்தில் தேசிய சராசரி 241 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 246 மதிப்பெண் ஸ்கோர் செய்திருந்தனர்.தற்போது, ஒன்றாம், இரண்டாம் வகுப்பில் வாசிப்புடன் கூடிய 'மேக்ஸ் கார்னர்' விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆர்கிடெக்சர் மாணவர்களுக்கான தேசிய வடிவமைப்பு போட்டி!!!

கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு துறைசார்ந்த மாணவர்களுக்கு, ’டிரான்ஸ்பரன்ஸ் 2016’ எனும் தேசிய அளவிலான கட்டடக்கலை வடிவமைப்பு போட்டியை, செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது.



’ஸ்பேஷ் இன் மோஷன்’ எனும் தலைப்பிலான இப்போட்டியில், நாடு முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்று, தங்களது படைப்புத்திறன்களை சமர்ப்பித்தனர். இதில், தகுதி பெற்ற சிறந்த 8 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.

இறுதி போட்டி சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பி.சந்தானம், கே.வி.ஆர்., நிறுவனத்தின் இயக்குனர் சென் கபாடியா, டி.பி.ஏ., நிறுவனர் சோனாலி பகவதி மற்றும் ஆர்கிடெக்சர் அட் ஸ்பேஸ் மேட்ரிக்ஸ் இயக்குனர் அனுப் நாயக் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ஐ.பி.எஸ்., இந்தூர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், குணால் ஜெயின் மற்றும் ஷிவானி அகர்வால் முதல் பரிசு (ரூபாய் 75 ஆயிரம்) பெற்றனர். இரண்டாம் பரிசை (ரூபாய் 50 ஆயிரம்) சித்தகங்கா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த மாணவர்கள், ஐஸ்வர்யா, ராகவேந்திரா மற்றும் ரக்சா மனோகர் ஷெட்டி ஆகியோர் பெற்றனர்.

’டிரான்ஸ்பரன்ஸ் 2016’ல் மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டியும் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூபார் 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

அசரவைக்கும் தொழில்நுட்பம்: 7D!

புதுமையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் தினமும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு திரைப்படங்களைக் கண்டு நாம் வியந்ததற்கு காரணம் அதன் கிராஃபிக் தொழில்நுட்பம் தான். அந்த தொழில்நுட்பம் கொண்டு வேறு உலகத்துக்கு நம்மைப் பல இயக்குநர்களும் அழைத்து சென்றுள்ளனர் என்பதை மறுக்க

முடியாது. உதாரணமாக ஜுராசிக் பார்க், அவதார், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், என பல்வேறு திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் . இவை அனைத்தும் நாம் நேரில் காண முடியாத ஒரு உலகினை நம் கண்முன்னே கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்தியவை என்பதே உண்மை.



எனவே நாம் காண விரும்பும் சில அதிசயமான காட்சிகளை தொழில்நுட்பத்தை கொண்டு நேரில் காண உதவியாக ஜப்பான் புதிய 7D தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. நேற்று வெளியான ஒரு வீடியோ ஒன்றில் ஜப்பானில் புதிதாக அமைத்துள்ள 7D தொழில்நுட்ப பூங்கா பற்றிய தகவலை வெளியிட்டனர். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நூலகர் பணியிடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்ம் வேடசந்தூரைச் சேர்ந்த ராஜசெல்வன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கடந்த 2006ஆம் ஆண்டு, தமிழக அரசு பிறப்பித்த 
அரசாணையின் அடிப்படையில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த நூலகங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலான இடங்களில் நூலகங்கள் ரேஷன் கடைகளாகவும், கிராம நிர்வாக அலுவலகங்களாகவும் இயங்கி வருகின்றன. இதனால் கிராமப்புற மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நூலகங்களை பராமரிக்கவும், மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன், 'தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு, 12,522 நூலகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. 2,075 நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன’ என வாதிட்டார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

நூலகத்தைப் பராமரிக்கும் நூலகரின் பணி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பல நூலகங்களுக்கு ஆலோசகராகச் செயல்படும் வாய்ப்பு நூலகத் துறையில் உள்ளது. புத்தகங்களை பரிந்துரை செய்யவும், கிடைக்கும் இடத்தை முறையாகப் பயன்படுத்தவும் ஆலோசனை வழங்க முடியும். நூலக மேலாண்மை படிப்பை தேர்வுசெய்து படிப்பதன்மூலம், சிறந்த நூலகராகப் பணியாற்ற முடியும்.

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் : சுஷ்மா சுவராஜ்

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், மார்ச் 31ஆம் தேதிக்குள் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா‌ சுவராஜ் தெரிவித்துள்‌‌ளார்.‌



இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘முதற்கட்டமா‌க மார்ச் 31ஆம் தேதிக்குள் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும். பாஸ்‌‌போர்ட் சேவையை தொடங்குவதற்கான ஏற்பாடுக‌ள் ரூ‌ர்‌கேலா, சம்பல்பூர், ஜெய்சால்மர், பிகானீர், அவுரங்காபாத், உதய்பூர், கோட்டா, ராஜஸ்தானின் ஜலாவர், ஜுன்ஜுனு உள்ளிட்ட நக‌ரங்களில் ‌உள்ள தபால் நிலையங்களில் ‌நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, உதய்பூர் தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் முதல் வாரத்தில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும்.

மேலும் பா‌ஸ்போர்ட் சேவை எந்தெந்த தபால் நிலையங்களில் கிடைக்கும் என்பதை வெளியுறவுத்துறையின் அதிகாரபூ‌ர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தை வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் திறந்துவைத்தார். அப்போது அவர், ‘ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

எழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு : ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பம் வீணானது !!

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி 
வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது..

அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்.

புதுச்சேரி அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்த, 'மேத்ஸ் கார்னர்' விரைவில் துவக்கப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம்அமலில் உள்ளது. ஆனால், இது சில நேரங்களில் எதிர்மறையாக அமைந்து விடுகிறது.பாஸ் செய்து அடுத்தடுத்த வகுப்புகளில் காலடி எடுத்துவைத்தும், மாணவர்கள் குறைந்தபட்ச கற்றல் திறன்கூட இல்லாமல் உள்ளனர். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வந்தும்கூட மாணவ, மாணவியரில் சிலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுகின்றனர்.தமிழ் மொழியை வாசிக்கத் திணறும் இந்த மாணவர்கள் கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களைப் படிப்பது கடினமாகும்.எனவே, தனி கவனம் எடுத்து தமிழில்தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும், கணிதம் கற்றுத் தருவதும்அவசியமாகிறது.இதற்காக, புதுச்சேரி அரசு துவக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வாசிப்புடன் கூடிய 'மேத்ஸ் கார்னர்' துவங்க, திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய அரசின் சர்வ சிக்க்ஷா அபியான் திட்டத்தின் துணை திட்டமான 'பதே பாரத்; படே பாரத்' (படிக்கும் இந்தியா; முன்னேறும் இந்தியா) திட்டத்தின் கீழ், ரொக்கமில்லாதபரிவர்த்தனை முறையில் 5 ஆயிரம் ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சுகாதார துாதர் திட்டம் அறிமுகம் செய்து, கழிப்பறை சுகாதாரம் குறித்து கண்காணிக்கப் பட்டது.இதற்கு, நல்ல பலன் கிடைத்தது. அதேபோன்ற நடைமுறையை 'மேக்ஸ் கார்னர்' விஷயத்திலும் நடைமுறைப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு துாதர் என, ஒரு மாணவர் நியமிக்கப்பட உள்ளார்.இந்த 'ஹைக்டெக்' திட்டத்தின் மூலம், புதுச்சேரி பிராந்தியத்தில் 5117 மாணவர்கள், காரைக்கால்- 1859, மாஹி-505, ஏனாம்-775 என, ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8,256 பேர் பயனடைய உள்ளனர்.அதன்படி, 3,993 மாணவர்கள், 4,263 மாணவிகளுக்கு எழுதவும், வாசிக்கவும், கணிதத்தில் சாதிக்கவும் கற்றுக்த் தரப்பட உள்ளது.

இதற்காக, 2 ஆயிரம் புத்தகங்கள் கதைகளுடன் கூடிய கல்வி நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.என்.சி.இ.ஆர்.டி., புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும் ஆய்வு நடத்தியது.இரண்டு வகுப்புகளிலும், தேசிய சராசரியை காட்டிலும் புதுச்சேரி துவக்கப் பள்ளி மாணவர்கள் மேலோங்கியே இருந்தனர்.மூன்றாம் வகுப்பில் தேசிய அளவில் மொழிப்பாட கற்றல் திறன் 64 மதிப்பெண் ஆக இருந்தபோது,புதுச்சேரி மாணவர்களின் கற்றல் திறனில் 73 மதிப்பெண் ஸ்கோர் செய்து சாதித்தனர்.

கணிதத்தில், தேசிய சராசரி 60 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 75 மதிப்பெண் பெற்று, முத்திரை பதித்தனர்.ஐந்தாம் வகுப்பிலும் கணித பாடத்தில் தேசியசராசரி 241 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 246 மதிப்பெண் ஸ்கோர் செய்திருந்தனர்.தற்போது, ஒன்றாம், இரண்டாம் வகுப்பில் வாசிப்புடன் கூடிய 'மேக்ஸ் கார்னர்' விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது

NCRTE புத்தகத்தை மட்டும் பயன்படுத்த CBSE.க்கு உத்தரவு

புதுடெல்லி: தரமான பாடத் திட்டங்களை தரும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் வரும் கல்வியாண்டில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
இங்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தயாரித்து வழங்கும் பாடத் திட்டத்தின் அடிப்படையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்சிஇஆர்டி புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் புகார் தெரிவித்துள்ளன. இதனால் தனியாரிடம் புத்தகங்களை கூடுதல் விலை கொடுத்து வேறு புத்தகங்கள்வாங்குவதாகவும் மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தரமான கல்வி வழங்கும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாணவர்களின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய மனிதவளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல பள்ளிகளில் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தனியார் கடைகள் இயங்கி வருகின்றன.

 இந்த கடையில் கூடுதல் விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக பள்ளிநிர்வாகிகளை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அந்த கடை அதிபர்கள் இலவசமாக சுற்றுலா அழைத்து செல்வதாக தெரியவந்துள்ளது.எனவே முறைகேட்டை தவிர்க்கும் வகையில் 2017-18ம் ஆண்டு முதல் என்சிஇஆர்டி புத்தகங்கள் போதுமான அளவுக்கு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் நாடு முழுவதும் உள்ள 680 மையங்கள் மூலம் மார்ச் மாத இறுதியில் விநியோகம் செய்யப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ப்ளஸ்: மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஏற்கனவே இருந்த மத்தியக் கல்விக் கழகம் உள்ளிட்ட 7 அமைப்புகளை ஒருங்கிணைத்து,தன்னாட்சி அமைப்புடன் 1961ல் நிறுவப்பட்டது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு.

+2 வினாத்தாள்கள் தயார்.

மாணவர்கள் நீண்ட விடுப்பு 100 சதவீத கனவு தகர்ப்பு!

நீண்ட நாள் விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்காத பட்சத்திலும், தோல்வியை தழுவியவர்களாக குறிப்பிடப்படுகிறது. இதனால், நுாறு சதவீத தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகம்முழுக்க, மார்ச் 2ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 8ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட, மாணவர்களின் தகவல்கள் கொண்டு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், ஆண்டு துவக்கத்திலே பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டவை. எனவே, அனைத்துமாணவர்களின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.இதில், தொடர்ந்து நான்கு மாதங்களாக, பள்ளிக்கு வராமல், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், பல அரசுப்பள்ளிகளில், தலா நான்கு மாணவர்கள் வீதம், நீண்டநாள் விடுப்பில் உள்ளனர்.இவர்களில், பெரும்பாலானோர் செய்முறை பொதுத்தேர்வு எழுதவரவில்லை என கூறப்படுகிறது. எழுத்துத்தேர்வுக்கும் வராத பட்சத்தில், 'ஆப்சென்ட்' என குறிப்பிட்டு, தேர்ச்சியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால்,நுாறு சதவீத தேர்ச்சி பெறும் முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'நீண்டநாள் விடுப்பில் இருக்கும் மாணவர்கள், எந்த தேர்வும் எழுதாதபட்சத்தில், அவர்களை தோல்வியடைந்தவர்களாக குறிப்பிடக்கூடாது.

ஒரு தேர்வு கூட எழுதாதபட்சத்தில், விடுப்பில் இருக்கும் மாணவர்களால், 100 சதவீத தேர்ச்சிஇலக்கு, தடைபடுகிறது. 'எனவே, தேர்வு எழுதியோரை கணக்கிட்டு,நுாறு சதவீத தேர்ச்சி பள்ளிகளின் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றனர்.

TNTET -2017: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பங்களை திருப்பி அனுப்ப உத்தரவு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில்  நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு  விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பவிநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும்என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.