யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/3/17

DTED Exam: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு
எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டுவிண்ணப்பித்தனர்.
அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலைபதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, மார்ச், 6 முதல், 8 வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19- ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது - NCERT.

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற
நடைமுறைகள் எதுவும் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது.


  என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிவித்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு
அங்கீகாரம், அனுமதி நீட்டிப்பு வழங்குவது, புதிய படிப்புகள்- இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திகொள்ள அனுமதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்.சி.டி.இ. மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக என்.சி.டி.இ. உறுப்பினர் செயலர் சஞ்சய் அவஸ்தி வெளியிடப்பட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்ணப்பங்களைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்

மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசுஊழியர்கள்ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு


இலவச 'லேப் - டாப்' இந்த ஆண்டில் இல்லை

பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இலவச, 'லேப் - டாப்' கிடைக்காது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்; அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயின்ற, 40 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இதுவரை இலவச, லேப் - டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, 4,331 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசு துவங்கிய, இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங் கள் பின்பற்ற துவங்கியுள்ளன. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலவச லேப் - டாப் திட்டத்தைத் தொடரப் போவதாக, அ.தி.மு.க., அரசு தெரிவித்தது; சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது.


கோடைவிடுமுறை

ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை செயலருக்கு, மற்ற துறைகளின் பொறுப்பு தரப்பட்டதால், லேப் - டாப் வழங்கும் பணியில், அவர் தீவிரம் காட்டவில்லை.
பள்ளி தேர்வுகள் முடிவதற்குள், லேப் - டாப் தந்துவிட்டால், அது, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க உதவியாக இருக்கும் என, மாணவர்களும், பெற்றோரும்
எதிர்பார்க்கின்றனர். ஆனால், அது சாத்தியம் இல்லை என, தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:
இருவாரங்களுக்கு முன் தான், லேப் - டாப் கொள்முதலுக்கான, 'டெண்டர்' விண்ணப்பங்களை பெறும் தேதி நிறைவடைந்தது. அதை, தற்போது பரிசீலிக்க துவங்கியிருக்கிறோம். இதில், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. அதனால், தேர்வு துவங்கு வதற்குள், டெண்டரை இறுதி செய்வதற்கு வாய்ப்பு இல்லை.


அவகாசம்

அதைஇறுதி செய்தாலும், கொள்முதல் செய்ய, அவகாசம் தேவை. பின், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்; அதற்கும் கால அவகாசம் வேண்டும். அதனால், இந்த ஆண்டில் லேப் - டாப் வழங்குவது சிரமம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி : 3,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி : விரைவில் நிரப்ப வலியுறுத்தல்

*பள்ளிக்கல்வியில் காலியாக உள்ள, 3,000 ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், 30 கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள்; 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங் களும் காலியாக உள்ளன. அதனால், பொதுத் தேர்வு பணிகளை ஒருங்கிணைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.


  தமிழகத்தில், 145 இடங்களில் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில், பொறுப்பு பணிகளில் நியமிக்க, 100 அதிகாரிகளே உள்ளனர்; 45 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல், காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிக்கல்வியில், 3,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் தாமதமின்றி நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

\பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: 8.98 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

 2015-16ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த கல்வி ஆண்டில் 8.98 
லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

*கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 7 தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள்.

தனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தேர்வு கட்டண சலுகை பெற்றனர்.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படை வீதம் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு நடக்கும் போது, அனைத்து மையங்களில் திடீரென சோதனை மேற்கொள்வார்கள்.

மாவட்ட வாரியாக தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடக்கும் போது, மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க பல்வேறு கண்காணிப்பு ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் செருப்பு, ஷூ, டை அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. உரிய பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கு கால்குலேட்டர் எடுத்து வரக்கூடாது. ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாளிலும் மாணவர்கள் போட்டோ இடம் பெறுகிறது. வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறுகிறது.

ஹால்டிக்கெட்டிலும், வருகை பதிவேட்டில் உள்ள போட்டோவிலும் வேறுபாடு இருந்தால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட வாரியாக கலெக்டர்கள், எஸ்.பிக்கள், வருவாய்துறையினர் தலைமையில் தேர்வை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாளைதொடங்கும் பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் ‘தமிழ் தாள் 1’ தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு அறைக்குள் 9.30 மணிக்கு வர வேண்டும். 10 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்படும். அந்த விடைத்தாளில் மாணவர்களின் புகைப்படம், தேர்வு பதிவெண், தேர்வு எழுத வேண்டிய பாடம், தேர்வு மையம் போன்றவை முகப்பு தாளில் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்க 5 நிமிடம் மாணவர்கள் எடுத்து கொள்ள வேண்டும்.


  அதை சரிபார்த்த பிறகு மாணவர்கள் முகப்புதாளில் கையொப்பமிட வேண்டும். சரியாக 10.05 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். அதை படித்து பார்ப்பதற்கு மாணவர்கள் 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதைதொடர்ந்து 10.15 மணிக்கு, விடை எழுத தொடங்க வேண்டும். மொழி பாடத்திற்கு கோடிட்ட 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் விடைத்தாள் வழங்குவார்கள். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அறை போன் எண்கள்
பிளஸ் 2 தேர்வுகள் நாளையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 8ம் தேதியும் ெதாடங்க உள்ள நிலையில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகியஎண்களில் தேர்வு காலங்களில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வுக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என அரசுத்தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPS : வல்லுநர் குழு அமைத்து ஓராண்டு முடிந்தது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த ஆய்வறிக்கையை அளிப்பது எப்போது?

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அரசுக்கு எப் போது அறிக்கை அளிக்கும் என்று தமிழக அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர். 

பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த ஆண்டு பிப்.26-ம் தேதி அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் கடந்த டிச.25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வல்லுநர் குழு தலைவரான சாந்தா ஷீலா நாயர் பிப்.6-ம் தேதிதனது பதவியை ராஜி னாமா செய்துவிட்ட நிலையில், குழு அமைத்து ஓராண்டாகியும் எவ்வித அறிவிப்பும் இல் லாதததால் வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை எதுவும் அளித்ததா என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், தமிழக அரசு ஊதிய விகித மாற்றக் குழு அமைத்துள்ளது .

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற் றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: ஊதிய விகித மாற்றத்துக் காக குழு அமைக்கப்பட்டுள் ளதை வரவேற்கிறோம். ஆனால், இந்தக் குழுவின் மீது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அர சுக்கு அறிக்கை அளித்ததா?, அந்தக் குழு உயிர்ப்புடன் உள்ளதா? என்றே தெரிய வில்லை. எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அறிவித்தால்தான், ஊதிய விகித மாற்ற குழுவின் மீது நம்பகத்தன்மையும், அரசின் மீது நம்பிக்கையும் ஏற்படும். இல்லாவிட்டால், உள்ளாட்சித் தேர்தலுக்கான கண்துடைப்பு நாடகமாகவே இதைப் பார்க்க முடியும் என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் கூறும்போது, "ஊதிய விகித மாற்றக் குழுவை அமைத் ததற்கு முதல்வரை சந்தித்து வரவேற்பு தெரிவித்தோம். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு ஓராண் டாகிவிட்ட நிலையில், குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அதற்கு, ஒவ்வொன்றாக கவனிப்பதாக முதல்வர் உறுதி அளித்தார். ஊதிய விகித மாற்ற குழு அமைக்கும்போது வழங் கப்படும் இடைக்காலநிவா ரணத்தை உடனடியாக வழங்கினால்தான் அரசின் மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் களுக்கு நம்பிக்கை வரும்"என்றார்.

TNPSC - 'Group 2A' பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

'குரூப் - 2 ஏ' பதவிகளில்,நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட, 1,940 பணியிடங்களுக்கு, 2016 ஜன., 24ல், எழுத்துத் தேர்வு நடந்தது.

இதில் பங்கேற்ற தேர்வர்களின் மதிப்பெண், தர வரிசை விபரம், ஜூனில் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டோருக்கான, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 1 முதல் 10 ம் தேதி வரை நடக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் மழை - வரலாற்றில் இடம்பெறும்

மிக மோசமான பருவ மழைக் காலத்தைக் கடந்திருக்கும் தமிழகத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பேரானந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தனது பேஸ்புக் பதிவில் விரிவான தகவல்களை ஆராய்ந்து எடுத்து பதிவு செய்துள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்ய விருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மார்ச் மாதம் மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அந்த நாள் தற்போது வெகு விரைவில் வரவிருக்கிறது. ஆனால், இந்த மழையின் அளவு குறித்து இன்னமும் ஒரு உறுதியான தகவலை சொல்ல முடியாத நிலையிலேயே உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதங்களில் பெய்த மழை வரலாறு

வழக்கமாக தமிழகத்தில் மார்ச் மாதம் சராசரியாக 20 மி.மீ. மழை தான் பதிவாகும். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் போல எப்போதாவதுதான் இது அதிகமாகும். அப்போது 167 மி.மீ. மழை பதிவானது. இது கடந்த 150 ஆண்டுகளில் மிக அதிகம். அதோடு மார்ச் மாதம் வெள்ளம் ஏற்பட்டதும் அப்போதுதான். ஆனால், 2008 போல மீண்டும் ஒரு முறை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏன் என்றால் அது வாழ்நாளில் ஒரு முறை நிகழும் அதிசயம்.

கடந்த கால வரலாறு (மி.மீட்டர்களில்)
2008 - 166.9
1984 - 82.0
1879 - 76.8
1954 - 67.0
1893 - 62.0
1925 - 61.5
1944 - 57.5
2006 - 54.5
1936 - 52.9
1938 - 50.5

இந்த வரிசையில் 2017ம் ஆண்டு முதல் பத்து பட்டியலில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. அது மார்ச் மாத இறுதியில்தான் உறுதியாகும். நமது எதிர்பார்ப்பு 2006ம் ஆண்டு மழைப் பதிவையாவது இந்த ஆண்டு எட்ட வேண்டும் என்பதே.

சரி சென்னைக்கு வருவோம்.
சென்னையை எடுத்துக் கொண்டால், ஆண்டில் மிகக் குறைவான மழைப் பொழிவு இருக்கும் மாதம் பிப்ரவரி கூட இல்லை. மார்ச் மாதம் தான் என்று சொல்லலாம். சென்னையில் மார்ச் மாதங்களில் வெறும் 5 மி.மீ. மழைதான் பெய்யும். இது சாலையைக் கூட முழுதாக நனைக்காது.

சென்னையில் மார்ச் மாத மழை வரலாறு

2008 - 137.9
1933 - 86.9
1853 - 85.6
1925 - 72.6
1852 - 66.5
1919 - 49.8
1870 - 43.7
1893 - 42.2
1879 - 38.1
1938 - 36.8

சென்னைக்கு மிக அதிக மழை கூட எதிர்பார்க்கவில்லை. 10 முதல் 20 மி.மீ. மழை பெய்தால் கூட மகிழ்ச்சிதான். ஆனால் இது அணைகளின் நீர் மட்டத்தை எந்த வகையிலும் மாற்ற உதவாது.

மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி நகர்கிறது. இதனால், தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா பகுதி மாவட்டங்கள், திண்டுக்கல், திருச்சி, மதுரை, மத்திய மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. இதனால், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.


அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் பிறமொழி மாணவ மாணவிகள் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக் கேட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர், பிறமொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பிறமொழி மாணவர்கள் 30 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர்.
அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, மார்ச், 6 முதல், 8 வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் பழநியில் மொட்டை

பழநி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற வேண்டி, கோவை யைச் சேர்ந்த 48 மாணவர்கள் பழநிகோயிலில் முடிகாணிக்கை (மொட் டை) செலுத்தினர்.பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8ல் துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 48 பேர் ஆசிரியர்களுடன் நேற்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனர்.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவேண்டும் என வேண்டிமுடிகாணிக்கை செலுத்தினர். பின், மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
மாணவர்கள் கூறுகையில்,''பல பள்ளிகளில் தேர்வில் வெற்றிபெற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அத்துடன் முருகப்பெருமான் அருள்வேண்டி 'மொட்டை'அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளோம்,'' என்றனர்.

அச்சிட்ட 'டெட்' தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், டி.ஆர்.பி., தலைவராக இருந்த விபு நய்யர், 'டெட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இந்த நேரத்தில், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான, 'டான்சிக்கு' அவர் திடீரென மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அச்சிடப்பட்ட, 'டெட்' தேர்வு விண்ணப்பங்களில், சில பகுதிகள் விடுபட்டிருந்ததை, கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால், 15 லட்சம் விண்ணப்பங்கள் வீணாக குப்பைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி, பிப்., ௨௬ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. உடன் விசாரணை நடத்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார். 'ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்தால், பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என, அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களுடன், கூடுதலாக சில வரிகளை அச்சிட்டு இணைக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்: தகவல் அறியும் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் !!

கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர் தே. ராஜு. இவர் கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017 கல்வியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிர்யணிக்கப்பட்ட 
எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மொத்த இடங்கள் எத்தனை? இதில் சேர்க்கை பயனுற்ற அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? குறித்த தகவல்களை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரியுடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கோரியிருந்தார்.

இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் பொதுத் தகவல் அதிகாரி அளித்த தகவல் விவரம் வருமாறு,

கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017ம் கல்வியாண்டு வரையிலுமான 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை மொத்தம் 29,225 ஆகும். , இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் 213 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 மாணவர்கள் என மொத்தம் 278 அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜு கூறும்போது, "தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர்.

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது. இதனடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் 29,225 சேர்க்கப்பட்ட எம்.பி.பி.எஸ் மாணவர்களில் வெறும் 278 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களாக உள்ளனர். அதாவது வெறும் 1 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள். இதில் அரசு பள்ளியை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பயின்ற 99 சதவீதம் பேர் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சுமார் ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் பெருன்பான்மையான ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது வெறும் கனவாகவே உள்ளது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மேலும் பாதிக்கும். எனவே அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்" என்றார்.

பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை !!

பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி          பள்ளி மாணவர்களுக்கு யோகா வகுப்பு கொண்டு வர தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளதாக கோவையில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
மேலும் முதலமைச்சர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு!

25 வயதுக்கு மேற்பட்டவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்காதது ஏன்? என, இந்திய மருத்துவக் கவுன்சில் சி.பி.எஸ்.இ.,க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக பல குழப்பங்கள் நிலவிவந்த நிலையில், டெல்லியில் கடந்த மாதம் யூஜிசி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நீட் 
தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவு மாணவர்கள் 25 வயது வரை தேர்வை எழுதலாம் இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரை தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம் எனத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை 25 வயது வரைதான் எழுத முடியும் என்னும் வயது உச்சவரம்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 25 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்வு எழுத அனுமதிக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, தேர்வு எழுதுவது தொடர்பாக நீட் சட்டத்தில் விதிமுறைகள் எதுவும் விதிக்கவில்லை. வயது தொடர்பாக சி.பி.எஸ்.இ., தான் விதிமுறைகளை விதித்துள்ளது என இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளித்தது. அதைத் தொடர்ந்து, வயது உச்சவரம்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும். இல்லையெனில் அந்த விதிமுறை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PSTM என்பது Person Studied in Tamil Medium

அதாவது TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழை மட்டும் ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழியில் படித்தல் ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்து இருக்க வேண்டும்.


நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, TNPSC-க்கு நீங்கள் படித்த பள்ளி, மற்றும் கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி TNPSC ல் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழின் மாதிரி படிவம் TNPSC ஆல் கொடுக்க பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC), மற்றும் பட்ட படிப்பு (Degree) இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். முடிந்தால் 12 ம் வகுப்பிற்கும் சேர்த்து வாங்கி வைத்து கொள்ளுங்கள், தவறு இல்லை.

சான்றிதழ் படிவத்தை நீங்கள் தயார் செய்து கொண்டு நீங்கள் படித்த பள்ளிக்குச் சென்றால், அவர்கள் அதனை நிரப்பி பள்ளி / கல்லூரி முத்திரை இட்டு பள்ளி / கல்லூரி முதல்வர் கையொப்பம் இட்டு தருவார். அந்த பள்ளியில் தான் படித்தீர்கள் என்பதனை நிருபிக்க இந்த சான்றிதழை வாங்க செல்லும் பொழுது மதிப்பெண் நகல் அல்லது மாற்றுச் சான்றிதழை எடுத்துச் செல்லலாம்.

முக்கியமாக, இந்த PSTM சான்றிதழை, நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும்போது நான் தமிழ் வழியில் படித்து இருக்கிறேன் என்று தெரிவிக்க வேண்டும், மேலும் இந்த சான்றிதழ் வாங்கப்பட தேதியை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், நீங்கள் தமிழ் வழியில் படித்து உள்ளீர்கள் என்று TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்படும். உங்களுக்கான இட ஒதுக்கீடு சலுகையும் கிடைக்கும். மாறாக விண்ணப்பத்தில் நீங்கள் இதனை பற்றி குறிப்பிடாமல், பின்னர் சான்றிதழ் சரி பார்ப்பின் பொழுதோ அல்லது கலந்தாய்வின் பொழுதோ இந்தச் சான்றிதழை கொண்டு சென்றால் அது TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

PSTM சான்றிதழை, தமிழில் வாங்கி வைத்து இருப்பது தவறு இல்லை, ஆனால் TNPSC அதற்க்கான ஆங்கில படிவத்தை கொடுத்து இருப்பதால் அதனையே பயன்படுத்துதல் மிகவும் நன்று. அதாவது நமது அனைத்து சான்றிதழ்களிலும் நமது பெயர் ஆங்கிலத்திலயே இருக்கும். இந்த சான்றிதழில் மட்டும் தமிழில் இருந்தால் பெயர் குழப்பம் ஏற்படும் என்பதற்காக ஆங்கிலத்தில் வைத்து இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே தமிழ் படிவத்தில் விண்ணப்பித்து இருந்தால் பரவாயில்லை.