யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/12/16

தமிழகத்தை மிரட்ட அடுத்து உருவாகிறது 'அஸ்ரி' புயல் : அதிர்ச்சி தகவல்

தமிழகத்தை மிரட்ட அடுத்து உருவாகிறது 'அஸ்ரி' புயல் : அதிர்ச்சி தகவல்

அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் மண்டலம் உருவாகி வருகிறது. இது புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது.

இந்த புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாகி வருவதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது,
பருவமழை தாமதமாகத் தொடங்கியிருப்பதால் இந்த ஆண்டு மழை தாமதமாகத்தான் முடியும்.

எனவே வர்தா புயலோடு மழை முடிவுக்கு வந்து விடாது. இன்னும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையோ அல்லது புயலோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்தா புயலின் தாக்கத்தால் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் அதிகபட்சமாக குன்னூரில் நேற்று 10 செமீ மழை பெய்துள்ளது. நீலகிரி 7 செ.மீ, தாராபுரம் 5 செ.மீ பீளமேடு, போளூர், கோவை 1 செ.மீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளது.

இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு அஸ்ரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இனி ஏழைகளுக்கு ரூ.5க்கு மதிய உணவு : அரசு அதிரடி உத்தரவு

இனி ஏழைகளுக்கு ரூ.5க்கு மதிய உணவு : அரசு அதிரடி உத்தரவு

ஜெய்ப்பூர்: தமிழகத்தை போல் ராஜஸ்தானிலும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் வசுந்துரா ராஜே தொடங்கிவைத்தார்.
ராஜஸ்தானில் வசுந்துரா ராஜே தலைமையிலான பாஜ அரசு செயல்பட்டுவருகிறது.

விரைவில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வசுந்துரா ராஜே ஏழைகளின் வாக்குகளை கவரும் வகையில் புதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.

‘அன்னபூர்ணா ரசோய்’ என்ற பெயரில் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்தை ஜெய்ப்பூரில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் நேற்றுமுன்தினம் அவர் தொடங்கி ைவத்தார்.

தமிழகத்தில் அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவது போல் இங்கும் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.5க்கு டிபனும், ரூ.8க்கு முழு சாப்பாடும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ராஜஸ்தானியர்கள் விரும்பி சாப்பிடும் பஜ்ரே கி கிச்சடி, பேசன்கட்டா, பூண்டு சட்னி ஆகியவை பரிமாறப்படுகிறது.

இது தவிர பாரம்பரிய உணவான தால் பதி குருமா, பஜ்ரி கி ரொட்டி, மேக்கி கி கிச்சடி ஆகிய உணவுகளும் பரிமாறப்படுகிறது.

கிராமப்புறத்தில் உள்ள ஏழைகள் வயிறார சாப்பிடும் வகையில் முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்ட உணவுகளை 80 வேன்களில் ஏற்றி சென்று கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் மற்றும் தலித்களுக்கு குறைந்த விலையில் சப்ளை செய்யப்படுகிறது.

விரைவில் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

டியூசன் நடத்தி 25 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : அதிர்ச்சி தகவல் உஷார் பெற்றோர்களே

டியூசன் நடத்தி 25 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : அதிர்ச்சி தகவல் உஷார் பெற்றோர்களே

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(25). தனது நண்பர்கள் ஈஸ்வரன்(26), மற்றொரு சிவக்குமார்(27) ஆகியோருடன் சேர்ந்து தர்மபுரி,
பாலக்கோட்டில் டியூசனுக்கு வந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள சிவகுமார் தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால், ஆசிரியர் பணியில் சேர முடியாததையடுத்து தர்மபுரி அரசு மகளிர் பள்ளி அருகில், துளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் தொடங்கினார்.

அவரது நண்பர் ஈஸ்வரனும், டியூசன் சென்டருக்கு கீழே ெசல்போன் கடை வைத்துள்ள மற்றொரு சிவகுமாரும், அடிக்கடி அங்கு வந்து சென்றனர்.

பின்னர் பாலக்கோட்டிலும், அதே பெயரில் டியூசன் சென்டர் ஆரம்பித்தார். இங்கு 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகள் அதிகம் சேர்ந்தனர்.

டியூசனுக்கு வந்த மாணவிகள் சிலருக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிவகுமாரும், அவரது நண்பர்களும் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். மேலும், அதை ஒருவருக்கொருவர் ெமாபைலில் படம் எடுத்து, அந்த வீடியோவை பார்த்து ரசித்து வந்தனர்.

இந்நிலையில் டியூசன் சென்டர் தொடங்கியபோது சேர்ந்த மாணவி ஒருவருக்கு சிவக்குமார் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவக்குமார் மிரட்டியுள்ளார். அந்த மாணவி அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் படிப்பை முடித்த அந்த மாணவிக்கு திருமணம் நடந்துள்ளது.

பழைய ஆபாச வீடியோ பதிவை காட்டி தனது இச்சைக்கு இணங்கும் படியும், இல்லையென்றால் இணையதளத்தில் வீடியோ பதிவை வெளியிடப்போவதாகவும் டியூசன் ஆசிரியர் சிவக்குமார் மிரட்டியுள்ளார்.

அந்த மாணவி தனது குடும்பத்தினர் துணையுடன் பாலக்கோடு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாருக்கு பின்னர் தான் விஷயம் போலீசுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலக்கோடு போலீசார் விசாரிக்க தொடங்கியபோது,

சிவக்குமார் மீது மேலும் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த வாரம் புகார் அளித்துள்ளனர். அப்போது தான் 25 மாணவிகளை டியூசன் என்ற போர்வையில் சிவக்குமார் சீரழித்தது தெரியவந்தது.

இதற்கு உடந்தையாக சிவக்குமாரின் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் ஆகியோரும் இருந்தது தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், ‘‘ திருமணமான பின்னரும் ஒரு மாணவிக்கு மிரட்டல் விடுத்தபோதுதான் சிக்கி கொண்டனர்.

ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளோம். அவரது டியூசன் சென்டரில், மெமரி கார்டு ஒன்று சிக்கியது.

அதில் மேலும் பல மாணவிகள் ஆபாசமாக இருப்பது போன்ற படங்கள் உள்ளது. இதில் சில வீடியோக்கள் செல்போன் மூலம் வேறு நபர்களுக்கு வைரலாக பரப்பப்பட்டுள்ளது.

இவை வேறு ஏதேனும் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்கிறோம்,’’ என்றனர்.

மின்னணு முறையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: மோடி

மின்னணு முறையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: மோடி


மின்னணு முறையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அளிக்க போவதாக பிரதமர் மோடி பாராளுமன்ற குழு கூட்டத்தில் பேசியுள்ளார்


புதுடெல்லி:மின்னணு முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு ‘லக்கி கிரகாஹ் யோஜனா’ திட்டத்தையும், வியாபாரிகளுக்கு ‘டிஜி-தன் வியாபாரி யோஜனா’ திட்டத்தையும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பேசியதாவது:-

மின்னணு முறையை ஊக்குவிக்க ‘லக்கி கிரகாஹ் யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 8-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை ரூ.50-ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரை மின்னணு முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

இந்த பரிசு திட்டம் 25-ந்தேதியான கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தொடங்கும். அன்று முதல் 100 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசு வழங்கப்படும். இந்த பரிசு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த திட்டம் பணக்காரர்களுக்கானது அல்ல. பொதுமக்களுக்கான உன்னதமான திட்டம். இது அவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு போன்றது ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை : அதிரடி உத்தரவு

பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை : அதிரடி உத்தரவு


பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.


பெங்களூரு:ஏவியேடர்ஸ் ஏர் கெஸ்க்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்) சேவை தொடக்க விழா பெங்களூரு எச்.ஏ.எல்.

விமான நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-


பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், நோயாளிகளை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

அவசரமான நேரங்களில் இது பாதிப்பை உண்டாக்குகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றாலும் வாகன நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இதனால் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.

மிக அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நோயாளிகள் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல முடியும்.

இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறவர்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி விவரங்களை தெரிவிக்கலாம்.

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தேவைப்படும் பட்சத்தில் நோயாளியை சாலை மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வந்து அதன் பிறகு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள்.

இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்சில் மருத்துவர்கள் குழு இருக்கிறது. அவசரமான நேரத்தில் இந்த சேவை மிக முக்கியமானது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
அந்த நிறுவனம் ஹெலிகாப்டர் ஆம்புலன்சுக்காக 3 ஹெலிகாப்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒரே என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர்களில் அவசரமான நேரங்களில் சிகிச்சை அளிக்கக்கூடிய ஐ.சி.யு. வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் இதற்கு என்றே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒலியும் மற்ற ஹெலிகாப்டர்களை விட குறைவாக இருப்பதாக அந்த நிறுவனத்தினர் கூறினர்.

டன் கணக்கில் வெளிநாடுகளில் குப்பைகளை வாங்கி குவிக்கும் சுவீடன்! அதிர்ச்சி செய்தி

டன் கணக்கில் வெளிநாடுகளில் குப்பைகளை வாங்கி குவிக்கும் சுவீடன்! அதிர்ச்சி செய்தி


சுவீடன் நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, அந்நாட்டு அரசு வெளிநாடுகளில் இருந்து டன்கணக்கில் குப்பைகளை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சுவீடன் நாட்டில் மின்சார உற்பத்தி பெருமளவு அந்நாட்டு குப்பைகளில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

அதாவது குப்பைகளை மறுசுழற்சி செய்து அதை மின்சாரமாக்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்நாட்டில் மின்சார உற்பத்தி பெருமளவு இதன் மூலம் தான் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் தங்களுடைய கழிவுகளை எரித்தால் கூட அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு அரசுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உள்ளது எனவும் கூறப்படுகிறது.

தற்போது அந்நாட்டில் உள்ள குப்பைகளை எல்லாம் மறு சுழற்சி செய்து முடித்து விட்டதால், மின்சாரம் தயாரிப்பதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக, சுவீடன் அரசு வெளிநாட்டிலிருந்து குப்பைகளை டன் கணக்கில் கன்டெய்னர்களில் இறக்குமதி செய்து மின் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் சுவீடனோ இதை, மறுசுழற்சி புரட்சி என்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் வெறும் 97 சதவிகிதமாக இருந்த இந்த அளவை தற்போது அந்நாட்டு அரசு 99 சதவிகிதமாக உயர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

17.12.2016 ஓய்வூதியர் உரிமை நாள்.

17.12.1982 அன்று உச்ச நீதிமன்றதலைமை நீதிபதிசந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுஓய்வூதியம் உரிமை என உச்ச நீதிமன்றம்தீர்ப்பு வழங்கியநாள்.
ஓய்வூதியர்களால் கொண்டாடப்படும் நாள்.
ஓய்வூதியம் என்பது கருணைஅல்ல.
அரசு ஊழியர்களின் நீண்டகாலபணிக்கு வழங்கப்படும்கொடுபடா
ஊதியம்.

ஊழியர்களின் சமூக பொருளாதாரபாதுகாப்பு.
ஆகவே, நண்பர்களே
பெற்ற உரிமையை பாதுகாப்போம்.
வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீட்போம்.
போராட்ட வாழ்த்துகளுடன்

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

ஆசிரியர்களுக்கு உதவும் ஆன்ட்ராய்டு செயலி

டிச.26-ல் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்க தேர்வு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகதொலைதூரக் கல்விஇயக்ககத் தேர்வுகள், டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குகின்றனஎன
பதிவாளர்கே.ஆறுமுகம்அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தேர்வுக்கு பதிவுசெய்துள்ள தேர்வர்கள், அவர்களுக்குரிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் (www.annamalaiuniversity.ac.in)அறிந்துகொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அருகிலுள்ளபல்கலைக்கழக படிப்பு, தகவல் மையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். செய்முறை, வாய்வழிதேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

 தேர்வுகள் நாட்டின்பல்வேறு மையங்களில்நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை(Hall Ticket) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து சனிக்கிழமை (டிச.17) முதல் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.


 மாணவர்கள் தங்களுக்குஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவர். மின்னணுப் பொருள்களைதேர்வு அறைக்குள்எடுத்துச் செல்லஅனுமதி இல்லைஎன்றார் பதிவாளர்கே.ஆறுமுகம்.டிச.26-ல் அண்ணாமலைப்பல்கலை. தொலைதூரக்கல்வி இயக்கதேர்வு தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகதொலைதூரக் கல்விஇயக்ககத் தேர்வுகள், டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குகின்றனஎன பதிவாளர்கே.ஆறுமுகம்அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தேர்வுக்கு பதிவுசெய்துள்ள தேர்வர்கள், அவர்களுக்குரிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் (www.annamalaiuniversity.ac.in)அறிந்துகொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அருகிலுள்ளபல்கலைக்கழக படிப்பு, தகவல் மையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். செய்முறை, வாய்வழிதேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

 தேர்வுகள் நாட்டின்பல்வேறு மையங்களில்நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை(Hall Ticket) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து சனிக்கிழமை (டிச.17) முதல் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.

 மாணவர்கள் தங்களுக்குஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவர். மின்னணுப் பொருள்களைதேர்வு அறைக்குள்எடுத்துச் செல்லஅனுமதி இல்லைஎன்றார் பதிவாளர்கே.ஆறுமுகம்.

SR DIGITIZATION 01.07.2017 முதல் நடைமுறைப்படுத்தப்படும் !

2016-November-B.Ed Result For BHARATHIDHASAN UNIVERSITY

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகளை உணர்ந்த ஒருவரின் உணர்வு பூர்வமான கவிதை

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாம்
இது பாடாய் படுத்திடும்திட்டமாம்!
திட்டம் என்னவென்று தெரியவில்லை-இதில்
எத்தனை அபாயம் என்றுபுரியவில்லை!
ஓய்வூதியம் என்பது எனதுரிமை
ஆனால் உரிமை கோரஇயலவில்லை!
மதில்மேல் பூனையைப் போல

பங்குச் சந்தை முதலீடு!
தனியார் நிறுவன இலாபத்திற்காக
தாரை வார்க்குது அரசாங்கம்!
ஊழியனாகிய எனது விருப்பத்தை
உதறி தள்ளுது அரசாங்கம்
சமூக பாதுகாப்பு இல்லை
இப் புதிய ஓய்வூதியதிட்டத்திலே!
உறவுகள் என்னை கைவிடும்போது
உழைக்கவும் எனக்கு உடலில்தெம்பில்லை!
உடல் உபாதைகளுக்குக் கூட
ஔடதம் வாங்கவும் வழியில்லை!
என் கையில் காசுஇருந்தாலே
என் சமூகம் என்னைமெச்சிடுமே!
வெறுங்கையுடன்(ஓய்வூதியம் இல்லாமல்) இருக்கும் எனக்கு
வீட்டுக்குள்ளே அனுமதியில்லை!
படித்து வாங்கிய பட்டமெல்லாம்
காற்றில் இன்று பறந்ததுவே!
புதிய பட்டம் கிடைக்குதுவேஅது
தண்டச் சோறு என்பதுவே!
ஏன் இந்த நிலைமையென்று
என்னால் கூற இயலுமே
இதற்கெல்லாம் ஒரே காரணம்தான் அது
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்தான்!
ஓன்று கூடுவோம் போராடுவோம்
உடைத்தெரிவோம் CPS திட்டத்தை
இணைந்திடு தோழா!
வென்றிடு தோழா!
இணைவோம்! இணைவோம்!!
இறுதி முடிவு கிடைக்கும்வரை
இணைந்து போராடுவோம்!

இப்படிக்கு
பாதிக்கப்பட்டவர்களில்ஓருவன்
சி.தீர்த்தகிரி M.Sc.,B.Ed.
இ. நி.உ.ஆ., அரூர்ஒன்றியம்

தருமபுரி மாவட்டம்

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS) 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் படி 05.12.2016 முதல் 17.12.2016 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது


குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு !!

உளவுத்துறை அறிக்கைகளை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் மால்வேர் நிறைந்த செயலிகளை முக்கிய பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், இவற்றை பயனர்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் பட்சத்தில் ஹேக்கர்களால் பயனர்களின் வங்கி சார்ந்த அதிமுக்கிய தகவல்களை திருட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog உள்ளிட்ட செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் துவக்கம் முதலே சைபர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து இருக்கின்றன. இத்துடன் இந்திய ராணுவ நடவடிக்கைகளை கன்காணிக்க இது போன்ற செயலிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் கூகுள் SmashApp எனும் செயலியை உடனடியாக தடை செய்திருக்கிறது. இத்துடன் இந்திய ராணுவ வீரர்களையும் இது போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் டிஜிட்டல் வாலட் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சார்ந்த பயன்பாடுகள் அதிகரித்து இருக்கும் போது வெளியிடப்பட்டிருக்கும் இது போன்ற அறிவிப்பு மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் பொது மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருப்பது அவசியமாகி இருக்கிறது...

சத்துணவு ஒதுக்கீடு ஒழுங்காக இல்லை "சனி வந்தாலே சத்துணவு கட்..முட்டையும் இல்லை

தொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு

இந்த வாரத்தில் அதாவது 12.12.2016 முதல் 23.12.2016 வரைக்கும் இரண்டாம் பருவத் தேர்வு,தமிழ் கற்பித்தலில் இரண்டு கட்ட பயிற்சி,19.12.2016 முதல் 22.12.2016 வரை SLAS என்னும் இளம் பிள்ளைகளுக்கு IAS  தேர்வுக்கு நிகரான தேர்வு,14.12.2016 ல் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி 15.12.2016 ல் ஒன்றிய அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,NMMS தேர்வுக்கான விண்ணப்பங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் இப்படி படாதபாடு படுத்துவது சரியா.மனவியல் அடிப்படை செயல்பட வேண்டிய இடம் பள்ளி.பள்ளிகளில் உள்ள பணியை இப்படி அவசர கோலத்தில் செய்ய கட்டாய படுத்தும் நிலையால் என்ன பயன் கிடைக்கும் என்று கூற முடியும்.பள்ளி பணிகளை பொறுத்தமட்டில்  எந்த விடயத்திலும் கோபப்பட கூடாது முடியாது.கல்வி துறையில் மாணவர்களை மட்டும் மனவியல் அடிப்படையில் நடத்த வேண்டும் ஆனால் மாணவர்களை சீர்படுத்தும் ஆசிரியர்கள் மனவியல் நிலைக்கு அப்பார்ப்பட்ட இயந்திரங்களா? இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து அமையுமானால் ஆசிரியர்களில் மன நோயாளிகள் அதிகம் உருவாவது உறுதி. இதைத்தான் கல்வித்துறை விரும்புகிறதா? அவசரமாக எதையாவது செய்தால் தவறாக முடிந்துவிடுகிறது எதை எப்படி செய்வது என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள்....

தொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'?, பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவு.

NEET' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது. 

பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும்.இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும்.இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும்.1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.
'நீட்' தேர்வின் முக்கியத்துவம்:
NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும்.
'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள்:
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் சம்பளம் உயருகிறது:

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், மத்திய அரசுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், 'சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, அரசு பரிசீலித்து வருகிறது; இதற்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவைகள் சட்டத்தில், திருத்தம் செய்து, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு, தற்போது, அனைத்து பிடித்தங்கள் போக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

புதிய பணத்தை கொடுங்க; அப்புறம் எடுங்க'

மக்களிடம் தேங்கியுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்வது அதிகரித்தால் தான், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்' என, நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வது அதிகரித்துள்ளது. இதற்கான காலக்கெடு இம் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்காக, வங்கி களில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும், ஏ.டி.எம்.,களில், ஒரு நாளில் அதிகபட்சம், 2,500 ரூபாயும் மட்டுமே எடுக்க முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிப்பு : இதற்கான கட்டுப்பாடு எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது: 

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடு வதற்கு முன், 200 கோடி எண்ணிக்கை உடைய, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பட்டன.இந்த, நான்கு லட்சம் கோடி ரூபாய் தான், முதலில் புழக் கத்தில் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

ஏ.டி.எம்., மற்றும் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள், புதிய நோட்டுகளை அதிக அளவில் கையில் இருப்பு வைக்கத் துவங்கி யுள்ளனர். தற்போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பணத் தட்டுப்பாடு குறைந்துள்ளது. வங்கிகள், ஏ.டி.எம்.,களில் கூட்டம் குறைந்துள்ளது. 

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் மாற துவங்கி யுள்ளதால், கையில் ரூபாய் நோட்டுகள் வைத்துக் கொள்வது குறைந்துள்ளது. இதனால், புதிய ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் மக்கள் டிபாசிட் செய்து வருகின்றனர். 

தற்போதைய கணக்கின்படி, புழக்கத்தில் விடப் பட்ட, புதிய ரூபாய் நோட்டுகளில், 50 சதவீதம் நோட்டுகள், வங்கிகளில் டிபாசிட் செய்யப் பட்டுள் ளன. இது, 80 சதவீதத்தை தாண்டும் போது தான், 
Advertisement
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப் பதற்கு உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்படும்.
டிபாசிட் அதிகரிக்கும் :

முதல்கட்டமாக, கூட்டுறவு வங்கிகளுக்கும், பின்னர் மற்ற வங்கிகளுக்கும் இந்தக் கட்டுப் பாடு தளர்த்தப்படும். தேவைக்கேற்ப, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி, தீவிர மாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், பணத் தட்டுப்பாடு முழுமையாக குறைந்து, மக்கள் பணத்தை டிபாசிட் செய்வது அதிகரிக் கும். அடுத்த மாத துவக்கத்தில் இருந்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

உங்கள் BP+GP ஐ மட்டும் நிரப்பினால் DA Arrear எவ்வளவு என்று கணக்கீடு செய்துகாட்டும்...

10th 12th PUBLIC EXAM MARCH 2017 TIME TABLE:

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுதேர்வு அட்டவணை:
02.03.17- மொழித்தாள் - 1
03.03.17 - மொழித்தாள் 2
06.03.17- ஆங்கிலம் 1 தாள்
07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள்
10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல்
17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்
21.03.17- இயற்பியல், பொருளாதாரம்
24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்
27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்
அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு துவங்கி நண்பகல் 12 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
08.03.17 - தமிழ் முதல்தாள்
09.03.17 - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- கணிதம்
23.03.17- அறிவியல்
28.03.17- சமூக அறிவியல்
30.03.17- விருப்ப பாடம்