யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/7/17

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு: செங்கோட்டையன் அறிவிப்பு.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

செங்கோட்டையன் அறிவித்துள் ளார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடி,
‘‘கடந்த 2012-ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால்கூட போதும். ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.

இதனைவலியுறுத்தி சென்னையில் இன்று (ஜூலை 12) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்’என்றார்.அவருக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஊதிய உயர்வு உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்து தீர்வு காணப்படும்’’ என்றார்.

CPS-புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை என்ன? : தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி:*

புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆய்வுகள் பற்றிய
அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு திட்ட செயலாக்க துறை முதன்மை செயலாளர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வேண்டாம்'... உயர் நீதிமன்றத்தில் மனு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல மாற்றங்களைத் தற்போது கொண்டுவந்துள்ளார். 'எதிர்வரும் காலங்களில்
பள்ளி கல்வியில் புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம், எல்லா வகுப்புகளிலும் பாடத்திட்டங்கள் மாறலாம்' எனவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் 11-ம் வகுப்பையும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளைப்போல் அரசு பொதுத்தேர்வாக மாற்றியுள்ளார். சுமார் 37 ஆண்டுகளுக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வு அரசு தேர்வாக மாறியுள்ளது. அதற்கு முன் 12-ம் வகுப்பு என்பதே இல்லாத சூழ்நிலையில்தான் இருந்துவந்துள்ளது. தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வும் அரசுத் தேர்வாக மாறியுள்ளது.

இதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "தமிழக அரசு கடந்த மே மாதம் 22-ம் தேதி 11-ம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசாணையை வெளியிட்டுள்ளது. இது அவசியமற்றது, 10-ம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாணவர்கள் உறக்கமின்றி கடினமாக உழைக்கின்றனர். அதற்காகத் தனியே டியூசனுக்கும் ஸ்பெஷல் கிளாசுக்கும் செல்கின்றனர். இதே போலவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற இரவு பகலாக கண் விழித்து உழைக்கின்றனர்.

இந்நிலையில், 11-ம் வகுப்பும் பொதுத்தேர்வு என்ற அரசாணையால் மாணவர்களும் அவரது பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர். 10, 11, 12 ஆகிய 3 ஆண்டுகளும் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கும், விரக்தி நிலைக்கும் ஆளாவர். எனவே 11-ம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக நடத்த வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.


இந்தமனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போட்டிச்சூழல் அதிகமிருக்கும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்பு பாடத்தைத் படித்து மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் 11-ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் கடந்து வருகின்றர். இதனால் அதிக மதிப்பெண்களைப் பெற்றபோதிலும் உயர்கல்வி சென்றபின் மாணவர்கள், முதலாம் ஆண்டில் கஷ்டப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல தரப்பு வல்லுநர்களும் தெரிவித்தனர். அதனடிப்படையில், வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆலோசித்து அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்
ஜெகநாதன் தெரிவித்தார்.
அரசுமேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணிகளில் 1,663 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பும் வகை யில் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. இத்தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்தனர். எழுத்துத் தேர்வு ஜூலை 2-ம் தேதி நடை பெற இருந்த நிலையில், தேர் வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக கூடுதலாக 1,712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து காலியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கடந்த 2-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் தேர் வெழுதினர். தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக பெரும்பாலான தேர்வர்கள் கவலை தெரிவித்தனர். தேர்வு முடிந்த அன்றைய தினமே தனியார் பயிற்சி மையங்கள் இணை யதளத்தில் உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) வெளியிட்டன. ஒருசில கேள்விகளுக்கான விடைகள் சரியாக தெரியாததால் அவற்றுக்கு விடைகள் குறிப் பிடப்படவில்லை. தனியார் பயிற்சி மையங்கள் கீ ஆன்சர் வெளி யிட்டாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் கீ ஆன்சர் தான் அதிகாரப்பூர்வமாக ஏற்கப் படும்.

வாரியத் தலைவர் விளக்கம் எனவே, தேர்வெழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது கீ ஆன்சரை வெளியிடும்? என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருமான (பொறுப்பு) ஜெகநாதனிடம் கேட்டபோது, "முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கீ ஆன்சரை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்தில் கீ ஆன்சர் வெளியிடப்படும்" என்றார்.

JACTO-GEO குழுவில் மேற்கொண்ட முடிவுகள் - பத்திரிக்கை அறிக்கை வெளியீடு



RTE படி ஆசிரியர் மாணவர் விகிதம்



826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால்,
அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசு தொடக்க பள்ளிகளில், சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. சில மாவட்டங்களில், மாணவர், ஆசிரியர் விகிதம் குறைவாகவும், சில மாவட்டங்களில், அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்னையால், தொடக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தமிழக பள்ளிகள் செயல்பாட்டை, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. இதில், பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழகத்தில், 817 தொடக்க பள்ளிகளிலும், ஒன்பது நடுநிலை பள்ளிகளிலும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவது தெரிய வந்துள்ளது. இந்த ஒரு ஆசிரியரும், விடுப்பு எடுத்தாலோ அல்லது கல்வித்துறையின் வேறு பணிகளுக்கு சென்றாலோ, பாடம் நடத்த ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஓர் ஆசிரியர் பள்ளியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


ஆனால், தமிழகத்தில் மட்டும், ஓர் ஆசிரியர் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றி, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர் முறை

GRIEVANCE DAY IN DSE, DEE DIRECTOR OFFICE,DPI CAMPUS"
பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், குறை தீர் முறை அறிமுகமாகி உள்ளதை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வரவேற்று உள்ளனர். சென்னை,
நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் என, பல இயக்குனர்களுக்கு தனியாக அலுவலகங்கள் உள்ளன. 


 அனைத்துக்கும் தலைமை அலுவலகமாக, பள்ளிக்கல்வி இயக்குனரகம் செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல், ஓய்வூதிய பிரச்னை, பள்ளிகளின் அங்கீகாரம், நலத்திட்ட உதவிகள் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும், தலைமை அதிகாரியாக, பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்படுகிறார்.

கோரிக்கை : இதனால், ஆசிரியர்கள், ஊழியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க வருகின்றனர். பின், கோரிக்கை மனு நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தவும், பல முறை அலையும் நிலை இருந்தது. இதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் முற்றுப்புள்ளி வைத்து, புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார்.

இயக்குனர் அலு வலகத்திற்கு வருவோரின், பெயர், முகவரி மற்றும் மொபைல்போன் எண்களும், அவர்களின் கோரிக்கை விபரங்களும், பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.பின், பார்வையாளர் களின் காத்திருப்பு அறைக்கே, இயக்குனர் வந்து குறைகளை கேட்கிறார். மனுவை, உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, பதில் அனுப்பும்படி உத்தரவிடுகிறார். கோரிக்கையின் நிலை, அது, சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பன போன்ற விபரங்களை, மனுதாரர்களுக்கு மொபைல் போனில் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மனு கொடுத்த ஒரு வாரத்திற்குள், மனுதாரர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரக ஊழியர்களே, போனில் தகவல் அளிக்கின்றனர்.


அலைச்சல் குறைவு : கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் எந்த துறை அதிகாரியை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்களும், தனியார் பள்ளி நிர்வாகிகளும் கூறுகையில், 'இயக்குனரகத்தின் புதிய முறை, எங்களின் அலைச்சலை குறைத்துள்ளது. 'எங்களின் கோரிக்கையின் நிலை என்ன; அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், தெரிந்து கொள்ள முடிகிறது' என்றனர்.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன்
தெரிவித்தார்.


 மதுரையில் அவர் கூறியதாவது: ஏழாவது சம்பளக் கமிஷனை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஜாக்டோ ஜியோ சார்பில் ஜூலை 18 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆக., 5 ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்பர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2003 ல் அமல்படுத்தியது முதல் 4.44 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என தெரியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எனில் மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக வேண்டும். ஆனால் இதுவரை மாநில அரசு அதில் இணையவில்லை. ஏற்கனவே இத்திட்டம் சாத்தியப்படாது என கைவிடப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஆயிரம் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே புதிய

ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும், என்றார்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர்

கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள், மீண்டும் அதை புதுப்பிக்க சலுகை வழங்கப்படும்,'' என,
தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.


 சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:ராணுவ ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி, 2,000 இளைஞர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள, 385 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஆண்டுக்கு இரண்டு முறை திறன் பயிற்சிக்கான முகாம்கள் நடத்தப்படும்; இதற்காக, 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள், திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை, இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக, நான்கு லட்சம் ரூபாயில், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படும்.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின், சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை, வெளி மாநில தொழிலாளர்களும் பெறுவதை உறுதி செய்யும் வகையில், 26 லட்சம் ரூபாய் செலவில், 254 கள அலுவலர்களை பயன்படுத்தி, அவர்கள் பணிபுரியும் இடங்களில் பதிவு மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 முதல், 2015 வரை, பதிவினை புதுப்பிக்க தவறிய, இரண்டு லட்சம் பேருக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர்

தெரிவித்தார்.

சாதனை மாணவர் விருது விண்ணப்பம் வரவேற்பு

மதுரை பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளதாவது:
இவ்வமைப்பு சார்பில் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப் பணி, பரதநாட்டியம், பேச்சு, கவிதை உட்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும்
எல்.கே.ஜி., -- பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 'யுவஸ்ரீ கலா பாரதி' விருதும், கல்லுாரி மாணவர்களுக்கு 'சுவாமி விவேகானந்தர்' விருதும் மாவட்டம் தோறும் வழங்கப்படுகின்றன. 

பரிசு பெற்றதற்கான ஆவணங்களுடன் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் 15 நாட்களுக்குள், 'நிறுவனர், பாரதி யுவ கேந்திரா, ஜி102, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை, 625 016' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விபரங்களுக்கு 94426 30815 எண்ணில் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் தயாரிக்கும் உத்தரவால் ஆசிரியர்கள்அதிருப்தி! பிளஸ் 1 மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

நடப்பாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், 22ம் தேதி முதல், இடைத்தேர்வு துவங்க உள்ளது. ஆனால், இடைத்தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட கல்விக் குழுவால்
தயாரிக்காமல், பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.


 தமிழகத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, வேகமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுடன், பிளஸ் 1 மாணவ, மாணவி யருக்கும், நடப்பாண்டு முதல், பொதுத் தேர்வு நடைபெற உள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல் லாத நடைமுறை, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்பு பாடங்களை, மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு தயாராகும், பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை 22 - 31 வரை, முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

முதல் இடைத்தேர்வு அறிவிப்பு குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், பிளஸ் 1 வகுப்பிற்கு, அந்தந்த பள்ளிகளிலேயே இடைத்தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என, தெரிவித்து உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள், தலைமைஆசிரியர் தலைமையிலான கல்விக் குழு தயாரிக்க உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுற்றறிக்கை வந்ததில் இருந்து, ஆசிரியர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சீரான கேள்வி

கடந்த ஆண்டு போல இல்லாமல், பிளஸ் 1 வகுப்பிற்கும் நடப்பாண்டு முதல் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பள்ளிகளிலேயே வினாத்தாள் தயாரிப்பது சரியாக இருக்குமா என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.'நீட்' தேர்வு இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் சூழலில், அதற்கேற்றாற் போல, மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அதற்காக, சீரான, ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தேவைப்படுகின்றன என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வேறுபாடுகள்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட கல்விக் குழு தயாரிப்பதும், பிளஸ் 1 வினாத்தாள் பள்ளிகளிலேயே தயாரிப்பதும், மாணவர்களின் கல்வியை பாதிக்க செய்யும் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.மற்ற வகுப்புகளுக்கு தயார் செய்வது போல், பிளஸ் 1 வகுப்பிற்கும், மாவட்ட கல்விக் குழுவே வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளி திறந்தது முதல், இன்று வரை நடைபெற்ற பாடங்களிடையே, ஒவ்வொரு பள்ளிக்கும் வேறுபாடுகள் உள்ளன. அவை, மாணவர்களின் இடைத்தேர்வில் எதிரொலிக்கும். சில பள்ளிகள் கூடுதல் எண்ணிக்கையில் பாடம் நடத்தியிருப்பர்; சில பள்ளிகளில் இடைத்தேர்வுக்கு தேவையான பாடங்களை மட்டும் நடத்தியிருப்பர்.எனவே, பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கும் முடிவை மாற்றி, இயக்குனகரத்திலிருந்து கேள்வித்தாள் வடிவமைப்பை, முதன்மை கல்வி அலுவலகம் பெற வேண்டும் என, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


'புளூ பிரின்ட்' முறை தற்போது இல்லை. மேலும், கேள்வித்தாள் அமைப்பு இன்னும் எங்களுக்கு வரவில்லை. 10 மற்றும் பிளஸ் 2க்கு ஏற்கனவே வினாத்தாள் அமைப்பு உள்ளது. அது போல, ஜூலை வரை, பிளஸ் 1 வகுப்பிற்கு சேர்க்கை நடைபெறும்.மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தியிருக்கும் பாடங்களின் எண்ணிக்கை மாறுபடும். எனவே, பள்ளிகளிலேயே வினாத்தாள் தயாரிக்க கூறியுள்ளோம். இதில் எந்த தவறுமில்லை.திருவளர்ச்செல்விமுதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரம்

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா? : டி.ஆர்.பி., மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம்

அரசுபாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான அரசாணையை,
சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வு நடக்குமா என, பட்டதாரிகள் குழப்பம்
அடைந்துள்ளனர்.
'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ௧,௦௫௮ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆக., ௧௩ல் எழுத்து தேர்வு நடக்கும்' என, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. தேர்வுக்கு, ஜூன், ௧௭ முதல் விண்ணப்பமும் பெறப்பட்டது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான அரசாணையில் குழப்பம் உள்ளதாக, பட்டதாரிகள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 'பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிப்படி, முதுநிலை பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும்.
'டி.ஆர்.பி., அறிவித்த தேர்வுக்கு, பி.இ., என்ற இளநிலை இன்ஜினியரிங் முடித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது.இதை ஏற்று, தமிழக அரசின் அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின், டி.ஆர்.பி., எந்த தகவலையும்
வெளியிடவில்லை. அரசாணை ரத்தால், எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதா; புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுமா; அரசு மேல்முறையீடு செய்துள்ளதா என, தெரியாமல், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., - தமிழக அரசின், டி.என்.பி.எஸ்.சி., அமைப்பும், போட்டி தேர்வு நடத்துவதில், வெளிப்படையான முறைகளை கையாள்கின்றன. 'அதே போல, டி.ஆர்.பி.,யும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்களை, இணையதளத்திலாவது, தாமதமின்றி வெளியிட வேண்டும். தேர்வர்களை குழப்பத்தில் தள்ளக்கூடாது' என்றனர்.

அரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள்

ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழு செயல்பாடு -அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு