யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/7/17

வினாத்தாள் தயாரிக்கும் உத்தரவால் ஆசிரியர்கள்அதிருப்தி! பிளஸ் 1 மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

நடப்பாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், 22ம் தேதி முதல், இடைத்தேர்வு துவங்க உள்ளது. ஆனால், இடைத்தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட கல்விக் குழுவால்
தயாரிக்காமல், பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.


 தமிழகத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, வேகமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுடன், பிளஸ் 1 மாணவ, மாணவி யருக்கும், நடப்பாண்டு முதல், பொதுத் தேர்வு நடைபெற உள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல் லாத நடைமுறை, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்பு பாடங்களை, மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு தயாராகும், பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை 22 - 31 வரை, முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

முதல் இடைத்தேர்வு அறிவிப்பு குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், பிளஸ் 1 வகுப்பிற்கு, அந்தந்த பள்ளிகளிலேயே இடைத்தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என, தெரிவித்து உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள், தலைமைஆசிரியர் தலைமையிலான கல்விக் குழு தயாரிக்க உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுற்றறிக்கை வந்ததில் இருந்து, ஆசிரியர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சீரான கேள்வி

கடந்த ஆண்டு போல இல்லாமல், பிளஸ் 1 வகுப்பிற்கும் நடப்பாண்டு முதல் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பள்ளிகளிலேயே வினாத்தாள் தயாரிப்பது சரியாக இருக்குமா என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.'நீட்' தேர்வு இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் சூழலில், அதற்கேற்றாற் போல, மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அதற்காக, சீரான, ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தேவைப்படுகின்றன என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வேறுபாடுகள்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட கல்விக் குழு தயாரிப்பதும், பிளஸ் 1 வினாத்தாள் பள்ளிகளிலேயே தயாரிப்பதும், மாணவர்களின் கல்வியை பாதிக்க செய்யும் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.மற்ற வகுப்புகளுக்கு தயார் செய்வது போல், பிளஸ் 1 வகுப்பிற்கும், மாவட்ட கல்விக் குழுவே வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளி திறந்தது முதல், இன்று வரை நடைபெற்ற பாடங்களிடையே, ஒவ்வொரு பள்ளிக்கும் வேறுபாடுகள் உள்ளன. அவை, மாணவர்களின் இடைத்தேர்வில் எதிரொலிக்கும். சில பள்ளிகள் கூடுதல் எண்ணிக்கையில் பாடம் நடத்தியிருப்பர்; சில பள்ளிகளில் இடைத்தேர்வுக்கு தேவையான பாடங்களை மட்டும் நடத்தியிருப்பர்.எனவே, பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கும் முடிவை மாற்றி, இயக்குனகரத்திலிருந்து கேள்வித்தாள் வடிவமைப்பை, முதன்மை கல்வி அலுவலகம் பெற வேண்டும் என, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


'புளூ பிரின்ட்' முறை தற்போது இல்லை. மேலும், கேள்வித்தாள் அமைப்பு இன்னும் எங்களுக்கு வரவில்லை. 10 மற்றும் பிளஸ் 2க்கு ஏற்கனவே வினாத்தாள் அமைப்பு உள்ளது. அது போல, ஜூலை வரை, பிளஸ் 1 வகுப்பிற்கு சேர்க்கை நடைபெறும்.மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தியிருக்கும் பாடங்களின் எண்ணிக்கை மாறுபடும். எனவே, பள்ளிகளிலேயே வினாத்தாள் தயாரிக்க கூறியுள்ளோம். இதில் எந்த தவறுமில்லை.திருவளர்ச்செல்விமுதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக