யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/16

அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை

அமைச்சர்கள்பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர்அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கலை, ஓவியம், இசைஉள்ளிட்ட தனித்திறமைகளை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளாக, தமிழகஅரசு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தஆண்டுக்கான இறுதி போட்டியும், பரிசளிப்புவிழாவும், கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.

விழாவில், அமைச்சர்கள் பாண்டியராஜன், வேலுமணி, பள்ளிக்கல்வி செயலர் சபிதா, பள்ளிக்கல்விஇயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநில அளவிலான போட்டிகள் மற்றும்பரிசளிப்பு விழாக்களில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க, கோவை மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கமாநில தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் கலை, ஓவியம், இசை போன்ற தனித்திறன்பயிற்சி அளிக்கும் பணியில், 16 ஆயிரத்து, 500 பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மிக குறைந்த சம்பளம்வழங்கினாலும், கலை மீதான ஆர்வத்தால்அவர்கள் இப்பணியை சேவையாக செய்கின்றனர்.

'பகுதிநேரஆசிரியர்கள், கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்க கூடாது' என, கோவைமாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கலை ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆசிரியர்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி, வகுப்புகளை புறக்கணித்தபோது, பகுதிநேர ஆசிரியர்கள் தான் பள்ளிகளை இயக்கஉதவினர். ஆசிரியர்களை, இது போன்று அவமதிக்ககூடாது.

இவ்வாறுஅவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக