யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/16

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.), தமிழக அரசு துறைகளில் ஏற்படும் மருத்துவம் தொடர்பான பணியிடங்களை நிரப்பி வருகிறது.
தற்போது இந்த அமைப்பு உதவி அறுவைசிகிச்சை மருத்துவர் (அசிஸ்டன்ட் சர்ஜன்) பணிகளை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1,223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 1079 பணியிடங்கள் புதிய பணியிடங்களாகும். மீதியுள்ள 144 இடங்கள் பின்னடைவுப் பணிகளாகும். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி. பி.சி.எம். பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் 48 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். 1-7-2016-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:
எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புடன், முதுநிலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள், மருத்துவ மேற்படிப்புகள், சிறப்பு பிரிவு படிப்புகள், டி.என்.பி. ஆகிய படிப்புகளை படித்து மெட்ராஸ் மருத்துவ பதிவு மையத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகளுடன், தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ)., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.375 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும், செலான் மூலம் இந்தியன் வங்கி கிளைகளிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-11-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். 2-12-2016-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு 22-1-2017-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக