பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங்களில் பயிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
2016-17ம் கல்வி ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி, பல் கலைக்கழகங்களில் பயிலும்தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கான ஊக்கத் தொகை (SDAT) வழங்கப்பட உள்ளது.உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வீரர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப் பட உள்ளது.2015 ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஜூன் 30-ம் தேதி வரையிலான காலங்களில், தேசிய அளவிலான பள்ளி விளை யாட்டு குழுமம், அங்கீகரிக்கப் பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள்,இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய போட்டிகள் மற்றும் அகில இந்திய பல் கலைக்கழகங்களுக்கு இடையே யான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற விளை யாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் இந்த ஊக்கத் தொகையை பெற விண்ணப் பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள லாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம்பதிவிறக்கமும் செய்துக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்ப படிவங்களை வரும் 30-ம் தேதிக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில், தகுந்த அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகிய வற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக