யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

அனைத்து மத்திய தேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம்: பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஆள் மாறாட்டத்தை தடுக்கஅனைத்து மத்தியதேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்றுமத்திய மனிதவள மேம்பாட்டுதுறை மந்திரி
பிரகாஷ் ஜவடேகர்தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரகாஷ் ஜவடேகர்கூறியதாவது:-

ஆதார் கார்டை பல்வேறுவி‌ஷயங்களுக்கும்பயன்படுத்தி வருகிறோம். இனி மத்திய அரசுநடத்தும் அனைத்துதேர்வுகளுக்கும் இதை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்என திட்டமிட்டுஇருக்கிறோம்.

இதை எப்படி செயல்படுத்துவதுஎன்பது பற்றிஆய்வு நடந்துவருகிறது. ஆதார்அட்டையில் புகைப்படம்மற்றும் அனைத்துவிவரங்களும் இருப்பதால் இதில் ஆள் மாறாட்டம்செய்ய முடியாது. சில மாநிலங்களில்ஆள் மாறாட்டம்நடப்பதாக தொடர்ந்துபுகார் வந்தவண்ணம் உள்ளன. இனியும் இப்படிநடக்க கூடாதுஎன்பதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநிலங்கள்தவிர, அனைத்துமாநிலங்களிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் மத்தியதேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படும்.

சேவை திட்டங்கள் சம்பந்தமாகஆதார் கார்டைகட்டாயமாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டுகூறி உள்ளது. ஆனால், தேர்வுஎன்பது சேவைதிட்டம் அல்ல. ஒரு அடையாளஅட்டையாகத்தான் நாங்கள் ஆதார் கார்டை பயன்படுத்ததிட்டமிட்டுள்ளோம். எனவே, இதுசுப்ரீம் கோர்ட்டுஉத்தரவுக்கு பொருந்தாது.

இதுவரை மத்திய தேர்வுகளைமத்திய செகன்டரிகல்வி வாரியம்நடத்தி வந்தது. இனி, தேர்வுநடத்துவதற்காகவே தேசிய தேர்வு கல்வியகம் ஒன்றைதொடங்குவதற்கு முடிவு செய்துள்ளோம். இது சம்பந்தமாகமத்திய மந்திரிசபையில்விவாதித்து முடிவு எடுக்கப்படும்.


இனி இந்த வாரியம்மூலம்தான் என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக