யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/3/18

Blackboard Jungle. | ஆசிரியர் மாணவர் பற்றிய கதை :

நகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி.
போதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள்.
கல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்ட காலம்.
கற்பித்தலில் ஆர்வமுடன் புதிய ஆசிரியர் வருகிறார். டேடியே என்பது அவர் பெயர்.
மாணவர்களின் ஒழுங்கீனச்செயல்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது‌.
தலைமையாசிரியர் முதல் மூத்த ஆசிரியர்கள் அனைவருமே அவர் கூறுவதை ஏற்காமல் மாணவர்கள் அமைதியானவர்கள் என்று கூறுகின்றனர்.
வகுப்பிற்குப் போ. மாணவர்களைப் பார்த்து நின்று பாடம் நடத்திவிட்டு வந்துவிடு. அவர்களுக்கு உன் முதுகைக் காட்டிவிடாதே. வேறு எதையும் கவனிக்காதே. என்பது மூத்த ஆசிரியரின் அறிவுரை.

ஆசிரியர் மீது எதையாவது எறிவது, அவரின் பொருட்களை உடைத்தெறிந்து, பெண் ஆசிரியரை மானபங்கம் செய்ய முயல்வது என்று மாணவர்களின் செயல்கள் அனைத்துமே வன்முறையின் உச்சம்.

இருந்தாலும் தொடர்ந்த முயற்சியால் மாணவர் மனங்களை மாற்ற முடியும் என்று டேடியே நம்புகிறார்.

ஆசிரியருக்கு வேறு தொடர்பு இருக்கிறது என்று அவர் மனைவிக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. பார்த்து எழுதக்கூடாது என்று எச்சரிக்கும் போது ஒரு மாணவர் கத்தியைக்காட்டி மிரட்டுகிறார்.
கத்தியைப் பறிக்கும் போராட்டத்தில் ஆசிரியரின் கையில் வெட்டுக்காயம் ஏற்படுகிறது.
சிறிய கண்டிப்புடன் அவனையும் அவனது நண்பரையும் ஆசிரியர் மன்னிக்கிறார்.
மாணவர்களிடையே மாற்றம் மலர்கிறது.

வகுப்பறை ஒரு வித்தியாசமான போர்க்களம். குழந்தைகளின் வயதுக்கேற்ற சேட்டைகளைச் செய்கிறார்கள். ஆசிரியர் தமது பக்குவத்திற்கேற்ப செயல்படவேண்டும். மாற்றம் என்பது நொடியில் மலர்வதல்ல. தொடர்ந்த முயற்சியின் கனி என்பதைச் சொல்லும் படம்
கரும்பலகைக்காடு.

முக்கியக் குறிப்பு.
இந்தப்படம் வெளியான  ஆண்டு 1955.
நாம எவ்வளவு பின்தங்கி இருக்கோம்! நம்ம பசங்க இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க!

- கலகல வகுப்பறை சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக