யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/4/18

போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது!!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் 
போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு கட்டமாக தமிழகத்தில் நாளை முதல் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே நீதிமன்றம் தாமாக முன்வந்து போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 2) விசாரித்த நீதிமன்றம், போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக