யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/1/19

அண்ணா பல்கலை வினாத்தாள், 'லீக்' : போலீஸ் விசாரணைக்கு முட்டுக்கட்டை

சென்னை: அண்ணா பல்கலையின் வினாத்தாள், 'லீக்' விவகாரத்தில், பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க, போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில், தேர்வுத் துறை முறைகேடு, பேராசிரியர்கள் நியமனம், நிர்வாக பிரச்னை என, பல்வேறு விதிமீறல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி., - சி.ஐ.டி., போலீசார், விசாரித்து வருகின்றனர். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முதல், தேர்வு துறையின் பெண் ஊழியர் வரை, முறைகேடு விவகாரங்களில் சிக்கியுள்ளனர்.ஏற்கனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்கிய விவகாரம், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச., 3ல், பருவத் தேர்வுக்கான கணித வினாத்தாள், லீக் ஆன விவகாரம், அண்ணா பல்கலைக்கு, மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்னையில், இன்ஜி., கல்லுாரிகளின் இரண்டு மாணவர்களும், தேர்வு துறை தலைமை அலுவலக ஊழியர் ஒருவரும், சி.பி., - சி.ஐ.டி., போலீசிடம் சிக்கியுள்ளார். அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில், பல தேர்வுகளுக்கு வினாத்தாள் லீக் ஆனதாக, தகவல் வெளியாகியுள்ளது.முந்தைய தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தாலும், அவை ரகசியமாக வைக்கப்பட்டதால், ஊழியர்கள் யாரும் சிக்கவில்லை என்றும், இந்த முறை, 'வாட்ஸ் ஆப்'பில் பகிர்ந்ததால் சிக்கியதும், தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பிரச்னையில், தேர்வுத் துறையின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, சந்தேகத்துக்குரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களை விசாரிக்க, அண்ணா பல்கலை தரப்பில் ஒப்புதல் அளிக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால், வினாத்தாள், லீக் ஆன வழக்கு விசாரணையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. உண்மையை கண்டறிய, போலீஸ் விசாரணைக்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துஉள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக