யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/16

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்

கறுப்புபணம், கள்ள நோட்டு பிரச்னைக்குதீர்வாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடைசெய்த மத்திய அரசு, அடுத்தஅதிரடியாக, சொத்து
பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளைஆராய துவங்கி உள்ளது.


கறுப்புபணம், கள்ள நோட்டு புழக்கத்தைகட்டுப்படுத்தும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன, மத்திய அரசு அறிவித்துஉள்ளது. அடுத்தகட்டமாக, தங்க நகை விற்பனை, சொத்து பரிமாற்றத்திலும் அதிரடி கட்டுப்பாடுகள் வரலாம்என கூறப்படுகிறது.


சொத்துபத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதைகட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவுஅசையா சொத்து உள்ளது என்பதைகண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக


கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கத்துக்காக உருவாக்கப்பட்ட, வரைவு விற்பனை பத்திரநகலில், விற்பவர், வாங்குபவர் இருவரும், ஆதார் மற்றும் பான்எண்களை குறிப்பிடுவது கட்டாயமாக் கப்பட்டு உள்ளது.


பரிமாற்றத்துக்குவரும் சொத்துக்கள், யார் பெயரில் இருந்துயார் பெயருக்கு செல்கிறது என்பது, இதனால் வெளிச்சத்துக்குவந்துவிடும்.


இதேபோலபரிமாற்றத்துக்கு வராமல், ஒரே நபர்பெயரில் நீண்ட காலமாக இருக்கும்சொத்துக்களின் பத்திரங்களி லும், ஆதார் எண்களைசேர்ப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்க, மத்தியஅரசு தயாராகி வருகிறது.


விற்பவர், வாங்குபவரின் நிலவரத்தை ஆதார் எண்ணை பயன்படுத்திகண்காணிக்க இது உதவ லாம். மேலும் விற்பனைக்கு வராத சொத்துக்களை, கணக்கில்கொண்டுவரும் முயற்சியாக, அதிலும் ஆதார் எண்சேர்ப்பதை கட்டாயமாக்க போவதாக தெரிகிறது.


இதுகுறித்து, சட்ட வல்லுனரும், கேரள அரசின் ஆலோசகருமானஷியாம் சுந்தர் கூறியதாவது:


சொத்துபத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதில்,சில நடைமுறை சிக்கல்கள்இருக்கின்றன. ஆனாலும்,


ஒவ்வொருசொத்துக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்குவது, அரசின் நோக்கத்தை நிறைவேற்றும். சார் பதிவாளர் அலுவலகம், கிராமம், பகுதி, பதிவு செய்யப்பட்ட ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கியதாக, பிரத்யேக எண் இருக்க வேண்டும்.



கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், இத்திட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டாதது, முறைகேடுகளுக்குவழிவகுப்ப தாக உள்ளது. இவ்வாறுஅவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக