யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/6/17

இந்தியர்களின் கறுப்பு பணம் குறைந்தது: சுவிஸ் வங்கி அறிவிப்பு!

சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளை விட, சுவிஸ் வங்கிகளில், இந்தியர்கள், குறைந்தளவே கணக்குகள் வைத்திருப்பதாக, சுவிஸ் நாட்டை சேர்ந்த, தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத் துள்ள கறுப்புப்பணத்தை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளது குறித்த
விபரங்களை அளிப்பதற்கான ஒப்பந்தம், அந்நாட்டு அரசுடன் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த முடிவை, சுவிஸ் அரசு, சமீபத்தில் உறுதிப்படுத்தியது. வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கணக்குவிபரங்களை அளிப்பதற்கு, அவற்றின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது.
இந்நிலையில், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, சுவிஸ் தனியார் வங்கிக ளின் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:

சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளை ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகள் மிகக்குறைவு.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு துவக்குவதை விட, ஆசியாவில் நிதி மையங்களாக திகழும் நாடுகளில், இந்தியர்கள் வங்கிக் கணக்கு துவக்குவது சுலபம்.

சமீப காலமாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் கணிசமாக குறைந்து வருகின்றன. 2015ம் ஆண்டு, இறுதி நிலவரப் படி, சுவிஸ் வங்கிகளில், 8,392 கோடி ரூபாய் மட்டுமே, இந்தியர்களின் முதலீடாக உள்ளது. இருப்பினும், பிற நாடுகளில், இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக