யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/16

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்தபணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில்வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை
தவிர்க்கும் வகையில்சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது.
அதன்படிவாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 1 ல் மாநிலஅரசு பணியில் உதவியாளர் தகுதிஅல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்குகுறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல்அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள்சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர்தகுதி அல்லது அவர்கள் சம்பளவிகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்கவேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களைநியமிக்க கூடாது.

அரசியல்சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தையதேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்தகூடாது. அதிக வாக்காளர்கள் அல்லதுபர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள்நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம்காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண்வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஒரே வாக்குச்சாவடியில்ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள்நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால்வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமேநியமிக்க வேண்டும். இவ்வாறு மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக