யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/16

வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!

 பிரபல இணைய தேடுபொறிநிறுவனமான கூகுள் 'அல்லோ என்றபெயரில் புதிய செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

          கூகுள் நிறுவனம் இந்தஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவைவசதி செயலி மற்றும் 'அல்லோ' எனப்படும்
செய்தி பரிமாற்ற செயலிஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது.  

அதைத் தொடர்ந்து கடந்த மாதம்  'டியூ' சேவை முறைப்படிஅறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் பத்துலட்சம் பேர் அதனை தங்கள்அலைபேசிகளில்  பதிவிறக்கம்செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள்தற்போது 'அல்லோ செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 'அல்லோ செய்தி பரிமாற்றசெயலியானது உள்ளிணைந்த கூகுள் தேடுபொறி வசதியுடன்வெளிவருகிறது. இதன் காரணமாக ஏதாவதுஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக உரையாடல் செயலியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய அவசியம்இல்லை. கூகுள் உதவு ஒருங்கிணைப்புவசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள்  கணக்கை இத்துடன் இணைத்துக்கொள்ளலாம்.
இத்துடன்இதில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவதற்குஏதுவான 'எமோஜிகள் . மற்றும் 'ஸ்டிக்கர்களும்' இடம் பெற்றுள்ளன.
ஆனால் வாட்சப்பில் இடம் பெற்றுள்ள கோப்புகள்  பரிமாற்றம்மற்றும் குரல்வழி  அழைப்புவசதி போன்ற வசதிகள் தற்போதுஇந்த செயலியில் இடம் பெறவில்லை. ஆனால்வெகுவிரைவில் குரல்வழி  அழைப்புவசதி 'அல்லோ ' செயலியில் இடம்பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.


நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக