யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/16

மொட்ட கடிதாசி' புகார்கள் : தேர்தல் ஆணையம் உத்தரவு

சிவகங்கை: 'ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது பெயர் இல்லாமல் புகார் வந்தால், அவற்றை விசாரிக்க தேவையில்லை' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது புகார்கள் எழுந்தன. இதில் பல புகார்களை முறையாக விசாரிக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து இந்த தேர்தலை எந்தவித புகாரும் ஏற்படாத வகையில் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஓட்டுப்பதிவின் போது ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நடத்தை குறித்து புகார் எழுந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர் முறையாக விசாரிக்க வேண்டும். அந்த புகார் எழுத்து மூலமாக பெயர், கையெழுத்துடன் இருக்க வேண்டும். விசாரணை அறிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
பெயர் இல்லாமல் கொடுக்கப்பட்ட புகார்களை விசாரிக்க தேவையில்லை. விருப்பம் இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர் விசாரிக்கலாம் என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக