யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/5/17

நீட்’ தேர்வு; மூக்குத்தி, மோதிரம், பைஜாமாவுக்கு தடை

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ’நீட்’ நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்போர், மூக்குத்தி, மோதிரம் போன்ற ஆபரணங்களும், குர்தா, பைஜாமா போன்ற உடைகளும் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், ’நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், ’நீட்’ தேர்வு நாடு முழுவதும், நாளை நடக்கிறது. 

தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர், இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார், திருநெல்வேலி உட்பட, நாடு முழுவதும், 103 நகரங்களில், ’நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடியும்; 9:30 மணி வரை மட்டுமே, தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வருவோருக்கு அனுமதி இல்லை. தேர்வு மைய வாசலில், ’நீட்’ இணையதள நேரப்படி இயங்கும் கடிகாரம் இருக்கும். 

அந்த நேரப்படியே தேர்வுகள் நடக்கும் தேர்வறைக்குள், பாஸ்போர்ட் வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ஹால் டிக்கெட்; போஸ்ட்கார்டு வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ’புரோபர்மா’ படிவம் மற்றும் தேர்வறையில் பதிவேட்டில் ஒட்டுவதற்கு, ஒரு பாஸ்போர்ட் வடிவ புகைப்படம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தேர்வறையில் பேனா வழங்கப்படும்  காலை, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, தேர்வறையில் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9:30 முதல், 9:45 மணி வரை, ஹால் டிக்கெட் சோதனை நடக்கும். 9:45க்கு வினா, விடைத்தாள் உறை வழங்கப்படும். 

9:55க்கு உறையை பிரித்து, 10:00 மணிக்கு தேர்வை எழுதலாம் 
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில், வினாத்தாள்கள் வழங்கப்படும். 

எந்த மொழிக்கு, தேர்வர்கள் விண்ணப்பித்தார்களோ, அதில் வினாத்தாள் வழங்கப்படும்; அதே மொழியில் பதில் எழுதலாம்.
பேனா, பென்சில், எழுத்தை அழிக்கும் ரப்பர், எந்த விதமான வெற்று அல்லது எழுத்துகள் கொண்ட காகிதம், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள். 

மொபைல்போன், பேஜர், இயர்போன், ஹெல்த் பேண்ட் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை 
தொப்பி, கைப்பை, தோள் பை, பெல்ட், கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவற்றையும் கொண்டு செல்லக்கூடாது 
’ஹாப் ஸ்லீவ்ஸ்’ என்ற, அரை கை உடைய, மெல்லிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். 

பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்ற சிறப்பு அலங்காரம் கூடாது. சல்வார் மற்றும் பேன்ட் அணிந்து வர வேண்டும். ஹீல்ஸ் அதிகம் இல்லாத சாதாரண வகை, செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். ஷூ, சாக்ஸுக்கு அனுமதி கிடையாது.

அடையாள அட்டை அவசியம்

’நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் சிலர், புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றி பதிவேற்றியுள்ளனர். எனவே, ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறி வந்த தேர்வர்கள், தங்களின் அசல் ஆதார் அட்டை அல்லது அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தேர்வு மையத்துக்கு கட்டாயம் எடுத்து வரவேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக