யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/1/18

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என,பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் தெரிவித்தார்.


 கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். நிருபர்களிடம், அமைச்சர் கூறியதாவது:படித்து முடித்ததும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மூன்று ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

 இதில், 72 பாடங்கள், தொழில்கல்வி கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைவிட சிறந்ததாக இருக்கும்.அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து500 பேர் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பணி நிரந்தரம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களுக்கு, அரசு உதவி செய்யும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்நிலை முடித்தவர்கள் மேல்நிலையில் என்ன படிக்கலாம் என்றும், மேல்நிலை முடித்தவர்கள், கல்லுாரியில் என்ன படிக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில், 'படிக்காலம் பாடங்களை' என்ற தலைப்பில், 256 பாடங்களை பெயர் பலகையில் எழுதி ஒரு வார காலம் வைக்கப்படும்.


பெற்றோர், மாணவர்கள் கலந்து பேசி படிப்பதில் ஏற்படும்சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, ஒரு வழிகாட்டியாக இந்த பெயர் பலகை வைக்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு, ஓராண்டுக்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக