யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/7/17

TRB மூலம் விரைவில் தேர்வு - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி: விரைவில் போட்டித் தேர்வு

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக
அரசு அனுமதி அளித்துள்ளது.
இப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
 பள்ளிக்கல்வித் துறையில் 2007-08 கல்வியாண்டு முதல் 2015-16 கல்வியாண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 525 பள்ளிகளில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவு தொடங்கப்பட்டன. தற்காலிக ஏற்பாடாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு அவை செயல்படுகின்றன. எஞ்சிய 240 பள்ளிகளில் கணினி அறிவியல்பாடப்பிரிவு இல்லை.அப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர போதிய மாணவர்கள் முன்வரும் நிலையில், நிதி ஆதாரம் இல்லாததால் பாடப்பிரிவு தொடங்க இயலவில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் தெரிவித்துள்ளார்.
 மேற்கண்ட 765 பள்ளிகளிலும் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தலாம் என்றும், அதற்கு வசதியாக, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றி ஒப்புதல் அளிக்குமாறும் அரசிடம் கோரியுள்ளார்.பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கல்வியை சீரிய முறையில் செயல்படுத்த வசதியாக, 765 பள்ளிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர் ஊதியத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிஆர்பி மூலம் விரைவில் தேர்வு

பி.எட். முடித்த பி.இ. (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ, பிஎஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) பட்டதாரிகள் கணினி அறிவியல் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையவர்.கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. எனவே, புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக