ஆ.வ.அண்ணாமலை, மாநில சிறப்புத்தலைவர்,பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,விழுப்புரம் கைபேசி எண், 9443619586.
அன்பார்ந்த பட்டதாரி ஆசிரிய பெருமக்களே வணக்கம். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வினை சார்நிலைப் பணிவிதிகளைப் பின்பற்றாமல் மேல்நிலைப் பணிக்குச் சென்று பணப்பலன் பெற்றுவிட்ட பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தாரை வார்த்து வழங்கிக்கொண்டு வந்தது. இது சார்நிலைப் பணி விதிகளுக்கு முரணானது என நீதிமன்றத்தின் மூலம் தற்காலிகமாக தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் கொண்ட சிலர் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகின்றனர். அதாவது பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உ.நி.ப.த.ஆசிரியராக பதவி உயர்வில் சென்றால் தான் பட்டதாரிகளுக்கு மு.க. ஆ. பதவி உயர்வு கிடைக்கும் இல்லையேல் பதவி உயர்வு வாய்ப்பே இல்லை என கூப்பாடு போடுகிறார்கள். உதாரணமாக 500 ப.உ.பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணப்பலன் இல்லாத பதவியான உ.நி. ப.தலைமை ஆசிரியர்களாக மீண்டும் பணி மாறுதலில் வருவதால் ஏற்படும் 500 PPG காலிப் பணியிடங்களில் 250 PPgபணியிடங்களில் மட்டும் தான் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல முடியும்.
மீதியுள்ள 250 Ppg பணியிடங்கள் நேரடி நியமனம்மூலம் தான் நிரப்பமுடியும். எனவே 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்வது சிறந்ததா அல்லது 250 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் செல்வது சிறந்ததா என்பதை பட்டதாரி ஆசிரியர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பணி விதிகளின்படி தான் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அதை யாராலும் தடுத்து நிறுத்தி விடமுடியாது. உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு 100% பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் அவரவர் சார்ந்துள்ள அமைப்பின் மூலம் பள்ளிக்கல்வித் துறையை வலியுறுத்துமாறு பணிவோடு வேண்டுகிறேன்.நன்றி.இவண், ஆ.வ.அண்ணாமலை, மாநில சிறப்புத்தலைவர்,பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,விழுப்புரம் கைபேசி எண், 9443619586
அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம். உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே என்பது வெறும் கோரிக்கை மட்டுமல்ல. அது நம்முடைய தார்மீக உரிமை.
நன்றாக சிந்தித்துப் பாருங்கள்... தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்ந்தோர் பட்டியலில் 70 சதவீதம் பேர் முதுகலையாசிரியர்களே உள்ளனர். இதே நிலை நீடித்தால் ஆண்டுதோறும் அவர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சென்று கொண்டிருக்கிறது.
பதினைந்து ஆண்டு காலம் பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலைக் கல்வித் தொகுதியிலேயே 6-10 வகுப்புகளைக் கையாண்டுக் கொண்டு பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியரும், இடைநிலைக் கல்வித் தொகுதியில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பணியாற்றி முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணப்பலனை அனுபவித்தவரும் ஒன்றாகி விட முடியாது.
முதுகலையாசிரியராகப் பதவி உயர்வில் சென்றவர்களுக்கு அத்துடன் அவர்களின் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அவர்கள் எந்தத் தேதியில் முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தாரோ, அந்தத் தேதி முதலே அவர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கும் தகுதியாகிறார்.
தற்போதுள்ள நிலைப்படி ஒரே சமயத்தில் இரண்டு பதவி உயர்வுகளைப் பெறும் அதிர்ஷ்டம் இந்த பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களுக்கு மட்டுமே உண்டு.
இரண்டு பதவி உயர்வில் எது சுலபமானது அல்லது எது இலாபகரமானது என்று ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் பாக்கியசாலிகள் இவர்கள் மட்டுமே.....
பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியருக்குண்டான உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை ஆண்டுதோறும் 70 சதவீதத்திற்கும் மேல் கபளீகரம் செய்வது மட்டுமல்லாமல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
1. மேல்நிலைக் கல்வித் தொகுதியில் ஒட்டு மொத்தமாக நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலமாக 24000 முதுகலையாசிரியர்கள் உள்ளார்கள் என்ற புள்ளி விவரம் காண்பிக்கப்பட்டு கருணாகரன் கமிட்டி மூலம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் முதுகலை ஆசிரியர்களுக்கான விகிதாச்சாரத்தை 5ல் இருந்து 7 ஆக உயர்த்தி அரசாணை எண் 720 ஐத் திருத்தம் செய்யப்படக் காரணமாக இருக்கிறார்கள். இவர்கள் நல்லவர்களாக இருந்தால், நாங்கள் முதுகலை ஆசிரியராக வந்தாலும் , உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியாகிறோம். எனவே, மேல்நிலைக் கல்வித் தொகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு எமக்குத் தேவையில்லை எனக் கூறி கடிதம் கொடுத்திருப்பார்களேயானால், முதுகலையாசிரியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டு அவர்களின் விகிதாச்சாரத்தை 5ல் இருந்து மூன்றாகக் குறைத்திருக்கலாம். ஆனால், இரண்டு வரும்போது எது சிறந்ததோ, அதை எடுத்துக் கொள்ள வசதியாக இரண்டையுமே தக்க வைக்கத்தான் நினைக்கிறார்கள்.
அடுத்ததாக இவர்கள் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகக் கல்வியாண்டின் துவக்கத்திலேயே பதவி உயர்வில் சென்று விடுவதால், அவர்களால் ஏற்படும் காலிப் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் அனைத்தும் நேரடி நியமனத்திற்கே சென்று விடுவதால் அதிலேயும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
ஆக இவர்களால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விலும், முதுகலையாசிரியர் பதவி உயர்விலும் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
நண்பர்களே.....இனி வரும் காலங்களில் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் ஆண்டுக்கு 100 கூட வராது. ஏனெனில், நடுநிலை பள்ளிகளில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால் தரம் உயர்த்தப்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.
ததற்போது உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியில் சென்றுள்ளவர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மிகக் குறவாகவே கிடைக்கும். ஏனெனில் விகிதாச்சாரம் குறைக்கப் பட்டுவிட்டது. ஆக பதவி உயர்வில் அதிகம் பேர் செல்லாமல் அப்படியே இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் இளம் வயதினர் ஏராளமானோர் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு விருப்பக் கடிதம் கொடுத்து விட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் இனி வருங்காலங்களில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் உருவாவது மிகக் குறைவாக இருக்கும்.
காலியாகும் 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30 இடங்களும், முதுகலையாசிரியர் பதவி உயர்வில் ஆண்டுக்கு ஒட்டு மொத்தமாக 500 இடங்களும் கிடைக்கப் பெற்றால், காத்திருக்கும் 65000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்........
நாம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. விதிகளுக்குப் புறம்பாக ஒரு கூட்டம் பெரும்பாலானவர்களின் உரிமையை கபளீகரம் செய்வதை எக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எமது நோக்கம்.
மேற்கண்ட நியாயங்களின் அடிப்படையில்தான் ஓர் இயக்கம் போராடி வருகிறது. பெரிய பெரிய பட்டதாரி ஆசிரியர் இயக்கங்கள் இந்த யதார்த்தமான உண்மையைப் புரிந்து கொண்டு பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையைக் காக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
பெரிய இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பதும், பட்டதாரி ஆசிரியர் உரிமைக்கு எதிராகச் செயல்படுவதும் வேடிக்கையாக உள்ளது. எனவே இனி வருங்காலங்களிலாவது அவ்வியக்கங்கள் புரிந்து செயல்படவேண்டும் என காத்திருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக