யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/6/17

எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி: ஜூன் 23-க்குள்விண்ணப்பிக்கலாம்:

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு பயிற்சிகளை மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு இயக்குநரகம்வழங்கி வருகிறது. இந்தப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதுடன் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.அந்த வகையில் பொது ஆங்கிலம், பொது அறிவு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய பயிற்சிகள் 11 மாத காலப் பயிற்சியாகவும், கம்ப்யூட்டர் மென்பொருள் பயிற்சி ஒரு ஆண்டு கால பயிற்சியாகவும் வழங்கப்பட உள்ளன.

 இவற்றுக்கானபயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.பயிற்சி பெறுவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.500 பயிற்சிக்காலம் முழுவதும் வழங்கப்படும். பொது ஆங்கிலம்,பொது அறிவு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கு வயது வரம்பு 27. அத்துடன் 10-ம் வகுப்பு அல்லது 12 – ம் வகுப்பு அதற்குச் சமமான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.ஒரு ஆண்டு கால கம்ப்யூட்டர் 'ஓ லெவல்' மென்பொருள் பயிற்சிக்கு வயது வரம்பு 18 முதல் 30 வரை ஆகும். அத்துடன், 10-ம் வகுப்பு அல்லது 12 – ம் வகுப்பு அதற்குச் சமமான கல்வித் தகுதி அல்லது தொழில்கல்வி (ஐடிஐ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூன் 23 -ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள தேசிய வேலைவாய்ப்பு மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலரை அணுகலாம் அல்லது 044-24615112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக