ஓர்ஆசிரியருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பதுமாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தருகிறஅன்பும் மரியாதையும்தாம். அப்படியான அங்கீகாரம்
அரசுப் பள்ளி ஆசிரியர் வசந்த் அவர்களுக்குக்கிடைத்திருக்கிறது.
கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். அரசுப்பள்ளி என்றாலே மாணவர்களுக்குத் தேவையானவிஷயங்களில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.அதையே காரணமாக கூறி, வசந்த் தன் பணியின்கடமையிலிருந்து விலகி விடவில்லை. தன் சக்திக்குமீறியும் அந்தப் பள்ளிக்கு அவர் செய்தது ஏராளம். அவரிடம்பேசியபோது,

"ரொம்ப அழகான பள்ளி இது. அதை, இன்னும் அழகாகவும்கற்பதற்கும் சிறப்பானதாக மாற்ற வேண்டும் எனநினைத்தேன். பள்ளிக்குத் தேவையானவற்றைப்பட்டியலிட்டேன். தமிழ்நாடு அரசின் சிறப்பானதன்னிறைவுத் திட்டத்தில், பள்ளியின் தேவைக்கானதொகையில் மூன்றில் ஒரு பங்கை நாம் செலவிட்டால்மீதத்தை அரசு அளித்துவிடும். எனவே அதற்கானதொகையைச் சேகரிக்கத் தொடங்கினேன்.
அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இன்று, உலகம் முழுவதும்பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர். அவர்களுக்குஇதுபோன்ற பள்ளிகளுக்கு உதவ வேண்டும் எனும்எண்ணம் இருப்பதைத் தெரிந்துகொள்ள என் நண்பனே ஓர்உதாரணம். அவனிடம் பள்ளியைப் பற்றிக்கூறிக்கொண்டிருந்தபோது, 50 ஆயிரம் ரூபாய் தந்துஆச்சர்யப்படுத்தினான். முழுமதி அறக்கட்டளை எனும்அமைப்பு வெளிநாட்டில் இயங்கி வருகிறது. அது, ஒருலெட்சத்துக்கும் அதிகமான தொகையைத் தந்தனர்.இவற்றை வைத்து, 1,69.000 ரூபாயை தமிழக அரசுக்குஅனுப்பினோம்.

எங்களின் இந்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது.தமிழக அரசு ஒதுக்கிய சுமார் 5 லட்சம் நிதியால் 23கம்ப்யூட்டர்களும் அவற்றிற்கு 46 நாற்காலிகளும் எங்கள்பள்ளிக்குக் கிடைத்தன. மூன்று இன்வெர்ட்டர்பேட்டரிகளும் வாங்கினோம். இரண்டு வகுப்பறைகளைஏஸியாக்கினோம். தமிழக அளவில் ஒரு நடுநிலைப் பள்ளிஇவ்வளவு வசதிகள் இருக்குமா என்பது சந்தேகம்தான்.இவற்றையெல்லாம் செய்ததற்கு முதல் காரணம், எங்கள்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியைக் கற்கவேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில், பணம்கொடுத்து, இவற்றைக் கற்றுக்கொள்ளும் நிலையில்பொருளாதார நிலையில் அவர்கள் இல்லை." என்று சமூகஅக்கறையோடு பகிர்ந்துகொள்கிறார் வசந்த்.
பள்ளிக்கான பொருள்களின் தேவைகளைப் பூர்த்திசெய்பவராக மட்டும் ஆசிரியர் வசந்த் விளங்கவில்லை.மாணவர்களின் நடத்தையைச் சீர்செய்வது, மெள்ள கற்கும்மாணவர்களிடம் தனிக்கவனம் எடுப்பது என அனைத்துவேலைகளையும் சுயஆர்வத்தின் அடிப்படிப்படையில்செய்தவர். ஏறக்குறைய கீழப்பாலையூர் பள்ளியின்தேவைகளை நிறைவேற்றிய வசந்த் எடுத்த முடிவுபலருக்கும் ஆச்சர்யமானது.
கீழப்பாலையூரிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்தொலைவிலுள்ள கீரனூர் பள்ளிக்கு பணி மாறுதலில்சென்றுவிட்டார். அதற்கு அவர், "ஒரு பள்ளியின்தேவைகளை நிறைவேற்றியாச்சு. அவற்றைக் கொண்டுஇங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பாக மாணவர்களுக்குவழிக்காட்டுவார்கள் என்பது தெரியும். அதனால் வேறொருபள்ளிக்குச் சென்று இதேபோல வேலைகளைச் செய்யலாம்என்பதால் இந்த முடிவு எடுத்தேன்" என்கிறார் வசந்த்.
பள்ளி
பணிமாறுதல் கிடைத்து, கீரனூர் பள்ளியில் வேலைகளைத்தொடங்கியும் விட்டார். பள்ளியின் முன்புறம் குண்டும்குழியுமாக இருந்ததை மணல் அடித்து சமப்படுத்தும் வேலைமும்மரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வசந்தின்மொபைலுக்கு கீழப்பாலையூரிலிருந்து ஏகப்பட்டஅழைப்புகள். அப்படி அழைத்தவர்களில் ஒருவர்தான்பால்ராஜ். வசந்திடம் படித்துவிட்டு, தற்போது டிப்ளமோபடித்திருக்கிறார்.
"வசந்த் சார் எங்க பள்ளியை விட்டுப் போனதே தெரியாது.இந்த வருஷம் ஸ்கூல் திறந்ததும் சார் வரலைனு பசங்கசொன்னாங்க. சரி, எதுக்காச்சும் லீவு போட்டிருப்பாங்கனுநினைச்சிட்டிருந்தோம். இப்ப விசாரிச்சப்பதான் அவர் வேறபள்ளிக்கூடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறது. அவர்எங்க ஊருக்கே திரும்பவும் வரணும் சார். எங்க பள்ளியைவிட்டு அவரை அனுப்ப மாட்டோம். அதுக்காக ஸ்டிரைக்பண்ணக்கூட நாங்க ரெடியாயிட்டோம்." என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் பால்ராஜ்.

முருகன் என்பவரின் மகன்கள் கீழப்பாலையூரில்படித்தவர்கள். அவர் பேசும்போது, "என்னோட பசங்கஅவர்கிட்ட நல்லா படிச்சாங்க. இப்ப ப்ளஸ் டூ படிக்கிறாங்க.ஒவ்வொரு நாளும் சாரைப் பத்தி சொல்லிகிட்டேஇருப்பாங்க, இப்படி தீடீர்னு எங்க வூரு ஸ்கூலை விட்டுவேற ஊருக்குப் போவாருனு எதிர்பார்க்கல. என்னசெஞ்சாவது அவரை இந்த ஸ்கூலுக்கே அழைச்சிட்டுவந்துடணும்னு உறுதியாக இருக்கோம்" என்றார் முருகன்.
பால்ராஜ், முருகன் மட்டுமல்ல கீழப்பாலையூரின்பொதுமக்கள் அனைவரும் வசந்த் திரும்பவும் தங்கள்ஊருக்கே ஆசிரியராக வர வேண்டும் என்கிற முடிவோடுஇருக்கிறார்கள். இதற்கான வேலைகளை நிச்சயம்செய்வோம் என்கிறார்கள். ஆனந்திடம் இது குறித்துகேட்டபோது,
"என் மேல் இவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கனு நினைச்சுசந்தோஷப்பட்டாலும், கீரனூர் ஸ்கூலிலும் என்னைஆர்வமா வரவேற்றாங்க. திரும்பவும் கீழப்பாலையூருக்குவர்ற சூழல் வந்தா கீரனூர் பசங்கஏமாற்றமடைஞ்சிடுவாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னேதெரியல" என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக